வினவை ஆதரியுங்கள்! (Subscription)

உழைக்கும் மக்களின் இணையக் குரலை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

வினவின் அடிப்படையான செலவுகளுக்கு ஒரு சில தோழர்கள், நண்பர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். எனினும் அது போதுமானதில்லை என்பதால் வாசகராகிய உங்களிடமும் கோரிக்கை வைக்கிறோம். செய்திகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், நேரடி கள ஆய்வுகள், வீடியோ செய்திகள், பாடல்கள், புகைப்படங்கள், களப் போராட்டச் செய்திகள், ஆவணப்படங்கள், நேரலை செய்திப்பதிவுகள், நேர்காணல்கள் என்று வினவு தளத்தின் வீச்சு நாள்தோறும் விரிந்து வருகிறது.

ஒரு தொழில் முறையிலான அடிப்படை வசதிகள் ஏதுமின்றியே வினவு தளம் நடத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் வீச்சும், சமூக வலைத்தளங்களின் தாக்கமும் அதிகரிக்கின்ற காலத்தில் வினவு மேலும் துடிப்பாக செயல்பட உங்கள் பங்களிப்பும் தேவை.

அச்சு ஊடகத்தின் வீழ்ச்சியும், இணைய ஊடகங்களின் எழுச்சியும் சேர்ந்து முதலாளித்துவ பத்திரிகைகளைக் கூட மக்களை சார்ந்து நடத்துமாறு குறிப்பிட்ட அளவில் நிர்ப்பந்திக்கின்றன. ஒரு ஊடகத்தை முதலாளிகள் கட்டுப்படுத்தும்போது அது மக்கள் குரலை பிரதிபலிக்காது. மக்கள் குரலை பிரதிபலிக்கும் ஒரு ஊடகத்தை மக்கள் ஆதரிக்கவில்லை என்றால் அந்த மக்கள் ஊடகம் வளர்ச்சியடையாது.

வினவு தளத்தின் ஆரம்பம் முதல் இன்றும் இனி எப்போதும் விளம்பரங்களோ, இலாப நோக்கமோ கிடையாது என்பதை உறுதிபடக் கூறுகிறோம். எங்கள் செலவுகளுக்கு நாங்கள் மக்களையே சார்ந்து செயல்படுவோம். அந்த உறுதியின் பேரில் உங்களிடம் சந்தா செலுத்துமாறு கோருகிறோம்.

இதனால் வினவு கட்டுரைகளை சந்தா கட்டித்தான் படிக்கவேண்டும் என்று பொருளல்ல. அனைவருக்கும் வினவு எப்போதும் இலவசமாகத்தான் கிடைக்கும். சொல்லப்போனால் மக்களுக்குரியதை மக்கள் இங்கே எடுத்துக் கொள்கிறார்கள். இதை இலவசம் என்று குறிப்பிடுவது கூட சரியாக இருக்காது.

அதே நேரம் சந்தா கட்டும் வாசகர்களுக்கு வினவில் வந்த கட்டுரைகளை மின்புத்தகமாக அனுப்புகிறோம். புதிய ஜனநாயகம் – புதிய ஜனநாயகம் (ஆங்கிலம்) மின்புத்தகங்களையும் கிரமமாக அனுப்புவோம். இவையும் வினவில் நீங்கள் தனிக் தனிக்கட்டுரைகளாக சந்தா செலுத்தாமலேயே படிக்கலாம்.

எனினும் நீங்கள் சந்தா செலுத்துவது எங்கள் பணியை மேலும் வளரச் செய்யும். நன்றி!

NAME : S.MAHALAKSHMI
ACCOUNT NO : 6938161028
IFSC CODE : IDIB000M246
Branch : MOGAPPAIR (2147)

Account Type: Savings

G-Pay / PhonePe / Paytm / WhatsApp Pay / Amazon Pay: 9384659191Mobile – (91) 93 8465 9191
Email – vinavu@gmail.com

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும்.

சந்தா அனுப்பிய நண்பர்கள் தவறாமல் உங்கள் சந்தா விவரங்களோடு உங்களது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியோடு vinavu@gmail.com முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.