சிலைகளை சிதைக்கலாம், சிதைக்க சிதைக்க சிவப்பே பெருகும்.. மறைக்க மறைக்க மார்க்சிய - லெனினியம் பரவும்... வெட்டிப் பிளந்துள்ளம் தொட்டுப் பார்ப்பினும் அங்கே எட்டிப் பார்ப்பது எங்கள் லெனினே!
தெய்வத்தையும் நீ கண்டுபிடிக்கவில்லை தேர்தலையும் நீ கண்டுபிடிக்கவில்லை வந்தால் பார்த்துக்கொள்! தந்தால் வாங்கிக்கொள்! ஆஹா.. என்ன ஒரு தெய்வம் என்ன ஒரு தேர்தல்...
பகத்சிங் என்றால் புரட்சி, புரட்சி என்றால் பகத்சிங்! புரட்சி விருப்பமா.. தேர்தலை மற
பகத்சிங்கை நினை!
செத்துப்போவதை விடவும் பிணங்களாய் வாழ்வது பெரிய கொடுமை ! - துரை சண்முகம் கவிதை
நிலம் நழுவுகிறது; வேர் அறுபடுகிறது; ஊர் சிதைகிறது; ஆறு பாதி புதைத்த பிணமாக கிடக்கிறது; கழுத்தை நெறித்தது போதுமா?
வண்டியை ஏற்றத்தில் உந்தித் தள்ளி, இறக்கத்தில் இழுத்துப் பிடித்து, பள்ளிப் பிள்ளைகள் சைக்கிள்கள் பைக்குகளின் சீண்டல்கள் படாமல்... விலகி பக்குவமாய் கட்டுக்குள் நிறுத்தும் பெண்ணின் தொண்டைக்குழி தசையில் வியர்வை உருளும்.
நினைத்தாலே சுரக்கும் பெரியார் மனிதநேயம். நினைத்தாலே துளிர்க்கும்பெரியார் உணர்வு நயம். நினைத்தாலே அழைக்கும் பெரியார் களம். நினைத்தாலே தொடரும்... இது பெரியார் நிலம்!
தன் வாழ்வில், வெளிச்சமில்லை, தகுந்த ஊதியமில்லை, வேலை நிரந்தரமில்லை, தாழ்வாரம் சொந்தமில்லை.., ஊருக்கு வெளிச்சம் தர, உழைக்கும் அந்த தொழிலாளர்க்கு, ஒராயிரம்.. நன்றிகள் !
விவசாயத்தையும் விவசாயிகளையும் செங்கால் நாரைகளையும் பைங்கால் தாவரங்களையும் விரட்டிவிட்டு வேதாந்தாவுக்கும் அதானிக்கும் விளைநிலங்களை இரையாக்கும் தனியார் மயம் தாராள கார்ப்பரேட் மயம்தான் நம் வாழ்வைக் கருக்கும்வன்மம்.
புயல்பொதுவாகத்தான் அடிக்கிறது ஆனால்அது எப்போதும் ஏழைகளை மட்டுமே மீள முடியாமல் ஏன் வதைக்கிறது? இது இயற்கையின் ஏற்பாடா இல்லை ஏற்றத்தாழ்வான அரசியல் சமூக அமைப்பின் நிலைப்பாடா?
வெடியும், ராக்கெட்டும் இந்துக்களின் பாரம்பரியம் அதை எப்படி எங்கள் கையை விட்டு பறிக்கலாம்? கட்டுப்பாடு விதிக்கலாம்? எனக் கூவிக்கொண்டே,
விவசாயத்திற்கும் சிறுதொழிலுக்கும் வேட்டு வைத்து பிடுங்கி வேதாந்தாவுக்கும்
அம்பானிக்கும் கட்டுப்பாடில்லாமல் வாரிக் கொடுக்கவில்லை நரகாசுரன்.
1970-களில் அந்நிய அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஒடுக்கலுக்கும் எதிரான மாணவர்களின் அரசியற் செயற்பாட்டின் போராட்டச் சங்கொலியாயிருந்த பாடல்.
மாஃபியாக்களுக்கு, எதிராக, சோஃபியாக்கள், குரல் எழுந்தால், பின்புலம் ஆராயப்படும், முன்புலம் முடக்கப்படும். - துரை. சண்முகம் கவிதை
சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்; காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்; சமூக விரோதிகள் என்றால் சூடு சுரணை பார்க்க மாட்டேன்; தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப் போக மாட்டேன்; சேரி நக்சலாக இருக்க மாட்டேன்...
தூண்டுதல் இன்றி, துலங்கும் காட்சி ஒன்று, உலகில் உண்டா? ஈரம் வந்து, வேரைத் தூண்டாமல், ஏது செடி? காணும் ஒவ்வொன்றிலும், தூண்டுதலின் இயக்கம், மக்கள் அதிகாரம், மக்களின் இதயத்தின், இயக்கம்!