Tuesday, January 21, 2025

காசா: அறிவிக்கப்படாத வதைமுகாம்!

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி காலத்தில் யூத இன மக்கள் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு சொல்லொணா கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் எனில், இன்று ஒட்டுமொத்த காசாவும் பாலஸ்தீன மக்களின் வதைமுகாமாக மாறியிருக்கிறது என்பதை இக்கொடூரங்களை நிரூபிக்கின்றன.

குழந்தைகளைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்!

“இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது, இந்த தாக்குதலில் தப்பித்து உயிர் பிழைக்கின்ற குழந்தைகளும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்"

பாசிச எதிர்ப்பு முன்னோடி – தோழர் ஸ்டாலின் | ஸ்டாலின் 146

இறந்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.

சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு: தேவை, இடது ஐக்கிய முன்னணி!

சிரியாவின் ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள சிரிய மக்கள் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சியில் நாம் பங்கெடுக்க முடியாது என்பதையே சிரியாவில் உள்ள நிலைமைகள் உணர்த்துகின்றன.

மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்காமல் குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்ரேல்

காயமடைந்த குழந்தைகளின் உடல் பாகங்களை வெட்டி எடுக்கும்போது வலி தாங்க முடியாமல் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகள் தங்கள் கண் முன்னே இறக்கும் காட்சியை கண்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மனதளவில் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

போர் நிறுத்த ஒப்பந்தம் அமலான பிறகு சுமார் 62 முறை இஸ்ரேல் ராணுவம் ஒப்பந்தத்தை மீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அமேசான் நிறுவனத்தைத் திணறடித்த “பிளாக் ஃப்ரைடே” வேலை நிறுத்தப் போராட்டங்கள்

அமெரிக்காவில் உள்ள பல மாநிலங்களிலும் பல்வேறு கிளைகளிலும் இந்த வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருக்கின்றன. தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக இப்போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை: அதிர்ச்சியளிக்கும் ஐ.நா அறிக்கை

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இனவெறி செயல்பாட்டில் ஈடுபட்ட அதானி குழுமம்

"அதானியிடமிருந்து பல ஆண்டுகளாகப் பாகுபாடு மற்றும் அவதூறுகளை நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதை நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை"

இயற்கை பேரிடர்களால் அல்லல்படும் 3.5 கோடி ஆப்பிரிக்க மக்கள்

காப் 29 மாநாட்டில் இயற்கை பேரழிவுகளுக்கு முக்கியமாகப் பொறுப்பேற்க வேண்டிய மேற்குலக வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளோ நாங்கள் மட்டும் பெரிதாய் என்ன செய்து விட முடியும் என்கிற ரீதியில் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டன.

ஆஸ்திரேலியாவில் அதானிக்கு எதிரான மக்கள் போராட்டம்!

கென்யா அரசு அதானி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதேபோன்று தங்கள் நாட்டிலும் அதானி நிலக்கரி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடியின மக்கள் தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதானியை விரட்டியடித்த கென்ய மக்கள் போராட்டம்!

நியூயார்க் நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த செய்தியானது கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோவிற்கு மக்களின் நெருக்கடியை மேலும் அதிகரித்தது.

நியூசிலாந்தைத் தாண்டி ஒலிக்கும் மவோரி மக்களின் ஹக்கா போர் முழக்கம்

மவோரி தலைவர்கள் கூறுகையில் “நாட்டில் உள்ள 5 லட்சம் மக்களில், நாங்கள் 20 சதவிகிதம் உள்ள போதிலும் ஆளும் அரசானது எங்களை இன ரீதியாக ஒடுக்கும் விதமாக திட்டங்களைக் கொண்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

நெருங்கி வரும் குளிர்காலம் – ஆபத்தான நிலையில் காசா மக்கள்!

ஏற்கெனவே போரினால் உடல் ரீதியாக பல்வேறு நோய்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு மேலும் அதிக பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.

COP29: நடந்து முடிந்த ஏகாதிபத்தியவாதிகளின் கேலிக்கூத்து

"தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் ஐ.நா மாநாடுகளால் அவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை எடுக்க உறுப்பு நாடுகளை நிர்ப்பந்திக்க முடியவில்லை."

அண்மை பதிவுகள்