மீண்டும் பால விபத்து: நாறுகிறது குஜராத் மாடல்!
பழுதடைந்துள்ள பாலத்தை மூடாமல் தொடர்ந்து மக்கள் பாலத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பணையம் வைக்கப்பட்டுள்ளது. எனவே விபத்து நடப்பதற்கு அரசே வழியமைத்துக் கொடுத்திருக்கிறது.
கடலூர் செம்மங்குப்பம் இரயில் விபத்து: தனியார்மயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதே தீர்வு!
கடந்த 2024 ஏப்ரலில் வெளிவந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 17,083 ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பருடன் உள்ளன. அவற்றில் கடந்த ஜனவரி 2025 வரை 497 மட்டும் நீக்கப்பட்டு 16,586 ரயில்வே கேட்டுகள் கேட் கீப்பருடன் இயங்கி வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுதழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்!
தமிழ்நாட்டில், வேலைநிறுத்தத்தில் பங்கெடுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சம்பளம் பிடித்தம், துறைரீதியான நடவடிக்கை உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தலைமை செயலாளர் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.
ஜூலை – 9 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்! | ம.அ.க
மக்கள் நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
பீகார்: லட்சக்கணக்கானோரின் வாக்குரிமை-குடியுரிமை பறிக்கப்படும் பேரபாயம்!
பா.ஜ.க. கும்பல் பீகாரில் சட்டவிரோதக் குடியேறிகள் இருப்பதாக இஸ்லாமியர்களை குறிவைத்து பிரச்சாரத்தை கட்டியமைத்து அதன் மூலம் தேர்தலில் வெற்றிபெறத் துடிக்கிறது. அந்தவகையில் வாக்காளர் பட்டியல் மறு ஆய்வு என்ற பெயரில் இஸ்லாமிய வெறுப்புக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு பல்கலை: சாதிய பாகுபாட்டால் 10 தலித் பேராசிரியர்கள் பதவிவிலகல்
தலித் பேராசிரியர்களின் இந்த பதவி விலகல் கடிதமானது, பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் தலித் பேராசிரியர்கள் பணியாற்றினாலும், அவர்களுக்கான அங்கீகாரமும் வருவாயும் மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்படுவதை அம்பலப்படுத்துகிறது.
மகாராஷ்டிரா: முதல்வர் பட்னாவிஸ் தொகுதியில் பல்லாயிரம் போலி வாக்காளர்கள்
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு தொகுதியில் நான்கு சதவிகிதம் வாக்குகள் அதிகரித்திருந்தால் அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், பட்னாவிஸின் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் எட்டு சதவிகிதத்தை விட அதிகமாக புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.
மகாராஷ்டிரா: ஆண்டுதோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை
அதானி, அம்பானி, அகர்வால் ஆகிய கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் எந்தக் கட்சிக்கும் விவசாயிகளுக்கு மறுவாழ்வளிக்கக் கூடிய கொள்கையோ, திட்டமோ, நோக்கமோ எதுவுமில்லை என்பதை உணர வேண்டிய தருணமிது.
மகாராஷ்டிரா: மூன்று மாதத்தில் 767 விவசாயிகள் ‘தற்’கொலை
200 குடும்பங்கள் அரசு நிர்ணயித்த அளவுகோலைப் பூர்த்தி செய்யாததால் அக்குடும்பங்கள் இழப்பீடு பெறுவதற்குத் தகுதியற்றவை என்றும் கூறி தனது பாசிச கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளது மகாராஷ்டிரா அரசு.
ஒடிசா ரதயாத்திரை படுகொலை: பா.ஜ.க ஆட்சியின் அவலங்கள்
ரத யாத்திரையின் முதல் நாளிலேயே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்த போதும், அதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மயக்கமடைந்த போதும், ஒடிசாவை ஆளும் பா.ஜ.க. அரசு மக்களைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளாததே இப்படுகொலை நிகழ்ந்ததற்கான காரணமாகும்.
கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: மம்தா அரசே குற்றவாளி!
ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடுகள் கூட அழியாத நிலையில் சட்டக் கல்லூரி மாணவிக்கு இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர்: 14 கிராமங்களை அழித்து அதானிக்கு நிலக்கரிச் சுரங்கம்
பல ஆண்டுகளாக அதானி பவர் நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து மக்கள் தங்களது உணர்வுகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: அரசின் அலட்சியமே காரணம்!
விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் டி.என்.ஏ பரிசோதனை செய்து நபர்களை அடையாளம் காண வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா: கார்ப்பரேட் சோலார் மின்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
இந்தோசோல் சூரிய திட்டத்திற்கு 8,300 ஏக்கர் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!
போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.