மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள் நினைவேந்தல் கூட்டம்!
மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது.
மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு | ம.அ.க. அறிக்கை
இன்று, தலித் மக்கள் குறைந்தபட்சம் சில உரிமைகளையாவது பெற்றிருக்கின்றனர் என்றால், அவை நக்சல்பாரித் தியாகிகளாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் போராடிய முருகேசன் போன்ற பல தியாகிகளின் போராட்டத்தாலும் கிடைத்த உரிமைகளே அன்றி, தேர்தல் அரசியல் தானாக வழங்கிவிட்ட உரிமைகள் அல்ல.
பள்ளிகளில் சாதிய வன்முறையைத் தூண்டும் த.வெ.க. அரசின் புதிய அடையாள அட்டை: பு.மா.இ.மு கண்டனம்!
ஒரு மாணவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை வண்ணக் கயிறுகள் மூலமே கண்டறிந்து, தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்தப்படும் சூழலில், மாணவர்களின் சாதியை அடையாள அட்டையில் சேர்ப்பது, அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் அறியவும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட மதவாத சக்திகளும், ஆதிக்க சாதி வெறி சங்கங்களும் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றவும் ஏதுவாக அமையும் நடவடிக்கையாகும்.
மாணவர்களிடம் சாதியை வளர்க்கும் த.வெ.க. அரசு: செங்கோட்டையனுக்கு ம.அ.க. கண்டனம்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த கும்பல்களின் பாசிச திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்தும் வேலையை தவெக அரசு செய்து வருகிறது.
உ.பி.: பொதுக் குழாயில் நீர் அருந்தியதற்காக தலித் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல்
சிறுவன் குழாயில் தண்ணீர் குடித்ததையும், அருகிலிருந்த வாளியைத் தொட்டதையும் கண்டு சாதிவெறித் தலைக்கேறிய சஞ்சய் ராஜ்புத், அவனது சகோதரன் தீபக் மற்றும் கூட்டாளிகளான சாகர் குமார், பாட்டியா குமார் ஆகியோருடன் இணைந்து, சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளான்.
ம.பி: குதிரை ஊர்வலம் சென்ற தலித் மணமகனைத் தாக்கிய ஆதிக்கச் சாதிவெறியர்கள்!
“என் சகோதரரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி எங்களை அடித்தனர். நால்வர் எங்களைத் தாக்கினர். இந்த மாதிரி குதிரை ஊர்வலம் உங்களுக்கு கிடையாது என்று வெளிப்படையாகக் கூறினர்” என்று ஆதிக்கச் சாதிவெறியர்களின் வெறியாட்டம் குறித்து தாக்குதலுக்கு ஆளான கோலுவின் சகோதரி விவரித்துள்ளார்.
அருந்ததியர் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞரைத் தாக்கிய பள்ளர் சாதி வெறியர்கள்
பள்ளர் சாதியைச் சார்ந்த கிஷோர், சக்கரவர்த்தி, திலீபன் ஆகிய மூன்று சாதிவெறியர்களும் தெருவிற்குள் நுழைந்து “சக்கிலிய பயலெல்லாம் எங்கள பாத்து போக சொல்லுவியா” என்று வழக்கறிஞர் மாரிமுத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு “அடுத்த மாசம் உன்தெருவுல எப்படி திருவிழா நடக்கும்னு பார்ப்போம்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.
விருதுநகர்: சாதிய வன்கொடுமைக்கு எதிராகத் தேர்தலைப் புறக்கணிக்கும் அச்சந்தவிழ்த்தான் மக்கள்
வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு எனப் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
கரூர்: அருந்ததியர் மக்கள் மீது அரங்கேற்றப்படும் தீண்டாமைக் கொடூரம்!
பல ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் கடவுளை வழிபடத் தடை, இறந்தவர்களின் உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்குத் தடை, தெருவுக்குள் செருப்பு அணிந்து வரத் தடை என ஆதிக்க சாதிவெறியர்களால் அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடூரங்கள் தீண்டாமையின் உச்சமாகும்.
“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”: மலக்குழி மரணங்களுக்கு எதிரான போராட்டம்
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.
நாமக்கல்: அங்கன்வாடியில் தீண்டாமை கொடூரம்!
புதுக்காலனி பகுதியில் சுமார் பத்து அடி இடைவெளியில் பட்டியல் சமூக மக்களுக்கு என்று தனியொரு அங்கன்வாடி மையமும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கென தனி அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளன. அரசு நடத்தும் அங்கன்வாடியில் இவ்வளவு அப்பட்டமாக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.
மகத் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு! | இ-போஸ்டர்
மார்ச் 20, 1927 அன்று மகாராஷ்டிராவில் அம்பேத்கர் தலைமையில் திரண்ட ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சௌதர் குளத்தில் நீரை அள்ளிப் பருகி, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காகப் போராடினர். இது அச்சமயத்தில்...
‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.
கோவை: சின்னதுரையை நினைவூட்டும் மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்! | இ-போஸ்டர்
நாங்குநேரி சின்னதுரையை நினைவூட்டும்
மாணவி சத்யா மீதான சாதிவெறி தாக்குதல்!
சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம் இந்திராநகர் மேற்கு பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சத்யா பீடம்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பில்...
மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன்
மதுரை மண்ணில் இப்பெருவிழாவை நடத்துவது கழகத்தின் துணிச்சலான முன்னெடுப்பு! | தோழர் தொல். திருமாவளவன்
https://youtu.be/qLXs5Fwabn0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





















