17.07.2026

புதிய தலைமுறை ஊடகவியலாளர் விஜயன் மீதான போலீசின் அடக்குமுறையைக்
கண்டிக்கிறது மக்கள் அதிகாரக் கழகம்!

பத்திரிகைச் செய்தி

மிழக வெற்றிக் கழக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டது மக்களிடத்தில் அம்பலமானவுடன் அதை மூடி மறைப்பதற்கு பல்வேறு வித்தைகளைக் காட்டி வருகிறது.

‎ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் புதிய தலைமுறை ஊடகவியலாளர் விஜயன், ஜூலை 15 நள்ளிரவில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.

‎நள்ளிரவில் விசாரணை என்பது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். எனினும் ஜூலை 16 காலை மீண்டும் விஜயன் அழைக்கப்பட்டு அன்று மாலை வரை அவர் போலீஸ் நிலையத்தில் இருக்க வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

‎தமிழக வெற்றிக் கழக அரசு தன்னுடைய தவறுகளை மூடி மறைக்க தொடர்ந்து பல்வேறு சதி புகார்களை உருவாக்கி அதன் மூலம் பலரைக் கைது செய்து தன் மீது கழிவிரக்கத்தை உருவாக்க வேண்டும் என்று செயல்படுவதை அறிய முடிகிறது.

‎தனக்கு வேண்டாதவர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு கைது செய்வதில் ஜெயலலிதாவை மிஞ்சக் கூடிய வகையில் விஜய்யின் செயல்பாடுகள் இருக்கின்றன.

‎ஊடகவியலாளர் விஜயன் சட்ட விரோதமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு சட்டவிரோதமாக போலீசால் தடுத்து வைக்கப்பட்டதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க