12.07.2026

மீண்டும் பரவியது டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்!
கோடாலி கிராம மாணவர்கள் போராட்டம் பரவட்டும்!

பத்திரிகைச் செய்தி

ரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராடிய மாணவர்கள் மீது போலீசு தடியடி நடத்தியதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

‎தொடர்ந்து பல ஆண்டுகளாக கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடி வந்துள்ளனர். தொடர்ந்து பல அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் மூடப்படாத டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். மக்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களும் போராடினர். போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது போலீசு. போலீஸ் தாக்குதலில் பல மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

‎இதற்கிடையே இன்றைய நாளில் கோடாலி டாஸ்மாக் கடை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே மக்கள் அதிகாரக் கழகம் கருதுகிறது. எனினும் இதுவரை போராடிய மக்களின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காத வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

‎டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் பற்றிப் பரவட்டும் !


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க