அரசியல் கட்சி தொடங்கியது முதல் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபராகவே விஜய் தன்னைக் காட்டி வந்தார்.
கரூர் நிகழ்விற்கு பின் பல நாட்கள் அமைதியாக இருந்தார். தன்னுடைய தவறுகளுக்கு அவர் குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தி.மு.க. செய்த சதி என்ற கூறினார். அதிலும் தான் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறினார். ஆனால் பாதிக்கப்பட்டு செத்துப் போனது மக்கள்.
அவருடைய மனைவி மணமுறிவு கோரி விண்ணப்பித்த போதும் அதையும் தனக்கு எதிரான சதி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினார்.
தேர்தலில் 108 தொகுதிகள் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவானது. அவரை ஆட்சி அமைக்க விடாமல் மற்ற கட்சிகள் சதி செய்ததாக கருத்தை உருவாக்கினார்.
தொடர்ந்து தன்னை பாதிக்கப்பட்ட நபராகவே முன்னிறுத்தி ஒரு சென்டிமென்டை தமிழ்நாட்டில் அவர் உருவாக்கினார் என்பது உண்மை.
இப்படித்தான் எம்.ஜி.ஆர். கணக்கு கொடுக்க வேண்டிய எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டேன் வெளியேற்றி விட்டார்கள் என்று கண்ணீர் விட்டு ஒப்பாரி வைத்து புதிய கட்சியைத் தொடங்கினார்.
1977 ஆம் ஆண்டு அவர் வெற்றி பெற்றார். 1975 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. உடனடியாக தேர்தல் வைத்திருந்தால் தி.மு.க மீண்டும் வெற்றி பெற்றிருக்கும். இரண்டு ஆண்டுகள் கழித்து, எமர்ஜென்சி முடிந்த பிறகு எமர்ஜென்சிக்கு எதிரான அலை ஓய்ந்த பிறகு எம்.ஜி.ஆர். வெற்றிபெறுகிறார். அதற்குப் பிறகு எண்பதில் அவரது ஆட்சி கலைக்கப்படுகிறது.
எனது ஆட்சியைக் கலைத்து விட்டார்கள் என்று சென்டிமென்டை கிளப்பி மீண்டும் வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அதை வைத்து அடுத்த முறை வெற்றி பெற்றார்.
ஜெயலலிதாவும் அப்படித்தான். சட்டசபையில் என்னை மானபங்கப்படுத்தி விட்டார்கள் என்று ஒரு கதையைக் கிளப்பி அதன் மூலம் அரசியல் செல்வாக்கு பெற்றார். ராஜீவ் காந்தி பிணத்தின் முன் அழுதபடி போட்டோ எடுத்து தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தி.மு.க-வின் சதியால் தான் ராஜீவ் காந்தி இறந்தார் என்று கூறி வெற்றி பெற்றார்.
2001 இல் வேண்டுமென்றே நான்கு தொகுதிகளில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து – இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தால் எங்கேயும் போட்டியிட முடியாது என்ற நிலை தெரிந்த போதும் கூட, ஐயோ என்னைத் தேர்தலில் நிற்க விடாமல் சதி செய்து விட்டார்கள் என்ற கண்ணீர் வடித்து வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் வழியைத்தான் விஜய்யும் பின்பற்றுகிறார்.
![]()
முகநூலில்: தோழர் மருது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











