திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் முண்டிப்பட்டியில் இயங்கி வருகின்றது, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் யூனிட் -2 (TNPL – Tamil Nadu Newsprint and Papers Limited – Unit 2).
இங்கு, மேலாளர்கள் பொறியாளர்கள் மற்றும் நிரந்தர தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 800 பேர் வரை நிரந்தர ஊழியர்களாக வேலை செய்கின்றனர். ஆனால் ஒப்பந்தத் பணியாளர்கள் மற்றும் பயிற்சிப் பணியாளர்கள் (apprentice) சற்றேறக்குறைய 1,500 பேர் வரை தினமும் சுழற்சி முறையில் பராமரிப்பு, போக்குவரத்து, பேக்கிங், மற்றும் பிற உதிரி வேலைகள் எனப் பல்வேறு அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
(இதன் தாய் நிறுவனமான யூனிட் -1 எனப்படும் ஆலை கரூர் மாவட்டத்தில் புகழூரில் இயங்கி வருகிறது)
காகித தொழிற்சாலையில் 45-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் (Contactors) செயல்படுகின்றனர். இவர்கள் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திக் கொண்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கேட்பாரற்றுத் தேங்கிக் கிடக்கும் தங்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தியும், 5 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோரியும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தற்போது இறங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வாயிலில் தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் உட்பட அனைவரும் இரவிலும் தங்கி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு அதிகபட்ச ஊதியம் ரூ.600, மாதம் 21 நாட்களுக்கு வேலை என்கிற முறையில் ஏறத்தாழ 12,000 ரூபாய் மட்டுமே மாத ஊதியமாகப் பெறுகின்றனர். இந்த காலத்தில் இதை வைத்து எப்படி குழந்தைகளைப் படிக்க வைத்து, மருத்துவச் செலவு பார்த்து, வீட்டு வாடகை கொடுத்து வாழ்வது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்குப் பதிலளிக்க எந்த அரசு அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் துப்பு இல்லை. மாறாக போராட்டம் என்றாலே உற்பத்தி பாதித்துவிடும், தொழிற்சாலையின் சந்தை மதிப்பு பாதிக்கும் நாட்டு மக்களின் தேவை பாதிக்கும் என்றெல்லாம் போலியாகப் புலம்புகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எந்த ஊதிய உயர்வும் இல்லை என்றால் எப்படி வாழ்வது? கந்து வட்டிக் கடனில் சிக்கி தற்கொலைதான் தீர்வாக முடிகிறது.
படிக்க: உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!
“கடந்த பத்து ஆண்டுகள் தொடர்ந்து காகிதத் தொழிற்சாலையில் பணி செய்து வந்தாலும் ஒருவர் தன்னை டி.என்.பி.எல். ஊழியர் என்று கூறிக் கொள்ள முடியாது. டி.என்.பி.எல். வருகை பதிவேட்டிலோ ஊதியப்பட்டியலிலோ எதிலும் இவர்களின் பெயர் இடம்பெறாது. தினக்கூலி என்று தான் அழைத்துக் கொள்ள வேண்டும். இது எவ்வளவு கொடூரமான சுரண்டல்!” என்கிறார் ஆர்.கலைவாணன் என்கிற தொழிலாளி.
இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலர் பத்தாண்டுகளுக்கு முன் டி.என்.பி.எல். நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்கள். அப்போது வேலை தருவதாகக் கூறி ஏமாற்றி நிலத்தை வாங்கிக்கொண்டு இப்படி ஒப்பந்தத் தொழிலாளர்களாக்கி ஏமாற்றி விட்டது அரசு.
அரசு அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஊதியம் கூட தங்களுக்குத் தரப்படுவதில்லை என்றும், தாங்கள் மிக இழிவாக நடத்தப்படுவதாகவும் சரியான உணவு வழங்கப்படுவதில்லை என்றும் இரண்டு வகை உணவு முறை பின்பற்றப்படுவதாகவும் தொழிலாளர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
இதையெல்லாம் எதிர்த்து ஒன்று திரண்டு போராட வேண்டும் என்ற கருத்தை யார் பேசி நிர்வாகத்தின் காதுகளுக்கு எட்டினாலும் உடனே அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டு விடுவார். அதில் எந்த தயவு தாட்சண்ணியமும் காட்ட மாட்டார்கள். இந்த அச்சத்திலேயே ஒப்பந்தத் தொழிலாளர்கள் இத்தனை ஆண்டுகளாக தங்கள் நியாயமான உரிமைகளுக்காகப் போராட இயலாமல் இருந்து வந்தனர்.
ஐந்து ஆண்டுகள் பணி புரிந்தவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். மாத ஊதியம் 20,000 ரூபாய் என்று முறைப்படுத்தி, ஊதியத்துடன் கூடிய வாராந்திர விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி அல்லது போக்குவரத்து வசதி ஆகியன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளாகும். இதற்குப் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் நேராக வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்ட அலுவலர் (RDO) தலைமையில் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறிச் சென்றனர். ஆனால் கோரிக்கை நிறைவேறும் வரும் வரை போராட்டம் தொடரும் என்று தொழிலாளர்கள் உறுதிப்படக் கூறியுள்ளனர்.
“கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியிலிருந்து வருகிறேன். ஒரு நாள் கூட வேலைக்கு வராமல் இருந்ததில்லை என்றாலும், நாளைக்கு வேலைக்கு அழைக்கப்படுவோம் என்கிற உத்தரவாதம் இல்லை. இது எவ்வளவு மோசமான நிலைமை தெரியுமா?” என்று இந்து பத்திரிகையாளரிடம் வேதனையுடன் கூறுகிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு தொழிலாளி.
இந்தக் கோரிக்கைகள் இயற்கை நியதிப் படியும் அரசியல் சட்ட அடிப்படையிலும் முற்றிலும் நியாயமானவை. நிரந்தர வேலைக்கு நிரந்தர பணி என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை ஆகும். இந்த அடிப்படை நியாயத்தைக் கூட உணர்ந்து கொள்ள முடியாதவர்களா இந்த அதிகாரிகளும் அமைச்சர்களும்? அப்படி இல்லை; அவர்கள் அயோக்கியர்கள் என்பதே உண்மை.
ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்திய தொழிற்சாலை சட்டங்களின்படி நிரந்தர வேலைக்கு நிரந்தர பணியாளர் என்பது அரசின் கொள்கையாக இருந்து வந்தது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எதுவாயினும் நிரந்தர ஊழியர்கள் ஒரு பங்கு என்றால் நான்கிலிருந்து ஆறு மடங்கு வரை தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை நியமித்துக் கொள்வது கடந்த 25 ஆண்டுகளில் நாடெங்கிலும் உள்ள எல்லா தொழிற்சாலைகளிலும் பொது நடைமுறையாகிவிட்டது.
அப்போது திருச்சியில் இருக்கும் பி.ஹெச்.இ.எல். போன்ற ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே போன்ற ஒன்றிய அரசு நிறுவனங்களிலும் கூட அதே கொள்கையின் அடிப்படையில்தான் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

துப்புரவுப் பணியாளர்கள், தோட்டப் பராமரிப்பு பணியாளர்கள், அலுவலக அட்டெண்டர்கள் எனப்படும் உதவியாளர்கள், தொழிற்சாலை பாதுகாப்பு பணியாளர்கள் (security), தொழிற்சாலை உணவு விடுதியில் சமையல்காரர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனையில் ஆயாக்கள் உள்ளிட்ட எல்லா ஊழியர்களுமே நிரந்தர ஊழியர்களாகவே ஊழியர் எண் வழங்கப்பட்டு ஊதிய பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று அங்கும் அனைத்தும் ஒப்பந்த முறையே என்று ஆகிவிட்டது.
ஒன்றிய அரசின் தனியார்மய தாராளமய கொள்கைகளைத் தொடர்ந்து ஒப்பந்த முறை என்பது எல்லா தொழில்களிலும் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டது. எனினும் இன்றைய பா.ஜ.க. அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை மொத்தமாக மாற்றி தொழிலாளர்களுக்குச் சட்ட பாதுகாப்பு என்பதை முற்றிலுமாக அகற்றிவிட்டது.
தொழிலாளர்களின் சட்ட பாதுகாப்பு என்பது இப்படி தலைகீழாக மாற்றப்பட்டதற்குத் தொழிற்சங்கத் தலைமைகளின் துரோகமும் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
தொழிலாளர்கள் பணியில் நிரந்தர தன்மை பெறவும் உத்தரவாதமான ஊதியத்துடன் எல்லாவிதமான அடிப்படை உரிமைகளை மீட்கவும் கௌரவமான வாழ்க்கையை அடையவும் தொழிலாளர்கள் தங்களை நிரந்தரம், தற்காலிகம், ஒப்பந்தம், பயிற்சி என்று வேறுபடுத்தி பாராமல் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் ஒன்றிணைந்து சங்கமாய் திரண்டு நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுவது ஒன்றே வழி.
வட இந்தியாவில் ஹரியானா, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் ஆகிய பல்வேறு மாநிலங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவ்வாறு ஒன்றுபட்டுப் போராடத் தொடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம் என்பதை உழைத்துச் செல்வங்களைப் படைக்கும் தொழிலாளர்கள் உணரத் தொடங்கி விட்டனர். தொழிலாளர்கள் இடையே வர்க்க உணர்வு வளர்ந்து வருகிறது. இது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
![]()
சுந்தரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads