கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
அடக்குமுறைகளை கடந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அணிதிரண்டிருப்பதும், அம்மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டிருப்பதும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது உள்ளிட்டு மாணவர்கள் - இளைஞர்களின் கோரிக்கைகள் ஈடேற்றப்படும் வரை கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
மாணவர் எழுச்சியிலிருந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிக்கான பிரகடனம்
இளைஞர்கள் ஒன்றாக நின்று, “வினாத்தாள் எப்படிக் கசிந்தது?”, “கல்வி அமைச்சர் ஏன் பதவி விலகவில்லை?”, “எங்கள் தோழர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி கேட்டவுடன், அரசின் மொழி மாறிவிடுகிறது. நேற்று வரை “தேசத்தின் எதிர்காலம்” என்று புகழப்பட்டவர்கள் இன்று “சட்டம்–ஒழுங்குக்கான அச்சுறுத்தலாக” மாற்றப்படுகிறார்கள்.
லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்
தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.
லெப். சாமுவேல் கமலேசன் பணிநீக்க வழக்கு – இந்துராஷ்டிரத்தை நிறுவும் ஆபத்தான தீர்ப்பு!
ஒரு மனிதனின் சுயமரியாதைக்கு எதிராக உயர் அதிகாரிகளால் வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? மேற்கண்ட தீர்ப்பானது, இராணுவம் மட்டுமல்ல அரசின் அனைத்து உறுப்புகளையும் காவிமயமாக்கி இந்து இராஷ்டிரத்தை நிறுவுவதற்கான தீர்ப்பாகும்.
லாக்கப் படுகொலைகளைத் தடுக்க முடிவதில்லை!
அரசியல் கட்சிகளோ போலீசின் வரம்பற்ற அதிகாரம் குறித்து தெளிவாக அறிந்திருந்தும் போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆபரேஷன் ககர்: மாவோயிச அழிப்பா? இயற்கை வள சுரண்டலா?
ட்ரோன்கள் மூலம் பழங்குடியின மக்களின் ஒவ்வொரு அசைவையும் துணை ராணுவப்படை கண்காணித்து வருகிறது. பழங்குடியின பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அவர்களைக் கொலை செய்து மாவோயிஸ்டுகள் என்று கணக்குக் காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!
சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய செய்தி ஊடகங்களின் பொய் பிரச்சாரமும் கிளறிவிடப்படும் தேசிய வெறியும்!
சங்கிகளின் கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் அதே சூழலில், இந்த பாசிசக் கும்பலின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் சுதந்திர ஊடகங்கள் பல கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூரைக் காரணம் காட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச மோடி அரசு!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு ஊடகங்களைத் தணிக்கை செய்து கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்தது பாசிச கும்பல்.
ஆப்ரேசன் சிந்தூர் யாருக்காக? | வேண்டாம் போர்; வேண்டாம் மோடி; வேண்டும் ஜனநாயகம் | தோழர் மருது
ஆப்ரேசன் சிந்தூர் யாருக்காக?
வேண்டாம் போர்; வேண்டாம் மோடி; வேண்டும் ஜனநாயகம்
| தோழர் மருது
https://youtu.be/74Hv4YRHZhg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள் | மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்? | தோழர் மருது
இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்..
மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்?
| தோழர் மருது
https://youtu.be/xMmq1OmsWyY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்
கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.
“அக்னிபாத்’’ ராணுவத்தில் தனியார்மயத்தின் அடுத்தக்கட்ட நகர்வு !
இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.
‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் மோடி அரசு !
நாடுதழுவிய பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், அக்னிபாத் திட்டத்தை 4 ஆண்டு காலத்திற்கு திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
அரசியலில் இராணுவம் தலையிடக்கூடாது என்பது மரபு. அதை மீறி பேசியதன் மூலம் இந்திய இராணுவத் தலைமை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார் பிபின் ராவத்.























