Sunday, March 7, 2021

ஊழலுக்கு நினைவிடம் லட்சியம் ! களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்

தமிழகத்தில் ஏ1 குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் திறக்கப்பட்டிருக்கும்போது அல்லறை சில்லறை ஊழல்வாதிகளுக்கு களிமண் சிலையாவது வைக்கப்படாதா ?

கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்

அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

கீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்

கீழ்வெண்மணி ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு ! வர்க்கப் போராட்டமே எழுதும் இறுதித் தீர்ப்பு !!

டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

நாங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசிடம் பேசத் தயாராக இருக்கிறோம்; அரசோ உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது., அவர்களது அகம்பாவம் மாறவில்லை. ஒருபோதும் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்.

மோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான் !

தேர்தல் நெருங்க நெருங்க மோடி தமிழ் இலக்கிய மழையாக பொழிகிறார் !! தமிழர்களின் கோவணத்தை உருவிவிட்டு, தமிழ் கவிதைகள் வாசிக்கிறார் !! ஜாக்கி வைத்து தூக்கினாலும், தாமரை ஹைகோர்ட்டில் கூட மலராது !

பாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி ! உச்சா போனா AIIMS பதவி || கருத்துப்படம்

பெண்களை அவமதித்த மனுஸ்மிருதியை விட்டுவிட்டு, அதனை சுட்டிக் காட்டிய திருமாவளவனை எதிர்க்கும் சங்கி கும்பல், ஒரு பெண்ணின் வீட்டு முன்னர் சிறுநீர் கழித்து அவமதித்த சுப்பையாவுக்கு AIIMS-ல் பதவி வழங்கியுள்ளது .

தோழர் வரவரராவை விடுதலை செய் ! கருத்துப்படம்

வயதான, நோய்வாய்ப்பட்ட புரட்சிக் கவிஞர் தோழர் வரவர ராவுக்கு, தேவையான சிகிச்சை அளிக்க அரசு திட்டமிட்டே மறுத்து வருகிறது. இது என்கவுண்டர் செய்வதற்கு சமம்.

கொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் ! கேலிச்சித்திரம்

கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட, அடங்காத பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தை அமல்படுத்துகிறது மோடி அரசு.

108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் ! கேலிச்சித்திரம்

கொரோனாவை விரட்ட வடக்கே மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னவர்கள் தெற்கே மந்திரத்தை ஓதச் சொல்கிறார்கள் !

யோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் ? கேலிச்சித்திரம்

உலக யோகா தினம் ! பத்மாசனம் பசியைப் போக்காது, பிரானாயாணம் கொரோனாவைத் தீர்க்காது !

கொரோனா – கருத்துப்படங்கள் !

கொரொனாவை விட கொடுமையானது இந்த முதலாளித்துவக் கட்டமைப்பு என்பதை அம்பலப்படுத்தும் கருத்துப்படங்கள். பாருங்கள்... பகிருங்கள்...

தயவுசெய்து கூட்டம் கூட்டாதீங்க ! கருத்துப்படம்

கொரோனாவைக் கட்டுப்படுத்த காலையில் ஊரடங்கு போட்டு மாலையில் கூடிக் கும்மியடிக்கச் செய்த மோடி !

அன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் !

ஜே.என்.யூ-வில் புகுந்து இரும்புத் தடிகளைக் கொண்டு தாக்கிய சங்கபரிவாரக் கூலிப்படை, தற்போது அமைதியாக போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கியால் சூட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்

கொரோனோ வைரசை போல நாட்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்க வேண்டிய அவசியம் உள்ளது.

ரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி ! | கருத்துப்படம்

தள்ளாத வயதிலும் ‘துகுலஹு’ படித்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். -ஐ வளர்க்க பெரும்பாடு படும் ’தலைவர்’.

அண்மை பதிவுகள்