பெட்ரோல் – டீசல் விலை உயர்வை தொடர்ந்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் மாதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரூ.917 ஆக இருந்த விலை; மார்ச் மாதம் ரூ.967 ஆக உயர்த்தப்பட்டது. அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம் ரூ.965 ஆக உயர்த்தப்பட்ட விலை உழைக்கும் மக்களை மிகவும் நெருக்கடிக்கு தள்ளியது. தற்போது, மே மாதம் சிலிண்டர் விலை ரூ.1015 ஆக உயர்த்தப்பட்டது. இது உழைக்கும் மக்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.
இப்படி சிலிண்டர் விலையை தொடர்ந்து அதிகரித்து, கொள்ளை இலாபம் ஈட்டி உழைக்கும் மக்களின் வீட்டில் எரியும் அடுப்பை அணைத்து வருகின்றன மோடி அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும். அதை சித்தரிக்கும் விதமாக இந்த கருத்துப்படம் பதிவிடப்படுகிறது.
கருத்துப்படம்: வேலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க