தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்? | சிறுநூல்
தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றிற்கான காரணங்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இச்சிறு பிரசுரம் சுருக்கமாக முன்வைக்கிறது.
ரசியப் புரட்சி நாள் வாழ்த்துகள்! முதலாளித்துவம் கொல்லும், கம்யூனிசமே வெல்லும்!
ஏகாதிபத்திய உலகக் கட்டமைவு மென்மேலும் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் திணறுகிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றன, உலக ஏகாதிபத்தியங்கள்.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் நவம்பர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - நவம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
பாலஸ்தீனம்: பாசிச மோடி கும்பலின் துரோகம்!
ஐ.நா. மன்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசானது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகமாகத் தனது ஆதரவை நிரூபித்துக் காட்டி, பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தியுள்ளது.
சனாதனம் ஒழிப்போம்!
சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதிக்கு எதிராக காவிக்கும்பல் தொடுத்த தாக்குதல் என்பது உதயநிதி அல்லது தி.மு.க.-வின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று மட்டுமே பார்க்க முடியாது. பாசிச கும்பலின் இந்துராஷ்டிரக் கனவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தத்தை ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமாகும்.
பி.எம். விஸ்வகர்மா பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!
இத்திட்டத்தின் மூலம் நேரடியாக குலத்தொழிலை திணிக்காமல், மக்களின் வறிய பொருளாதார நிலைமைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைமுகமாக திணிக்கிறது மோடி அரசு.
மணிப்பூர்: ஐந்து மாதங்களாகியும் அணையாத நெருப்பு! | நேர்காணல்
குஜராத்தை இந்துராஷ்டிரா ஆய்வுகூடமாக மாற்றினார்களோ அதேபோல் மணிப்பூரையும் மாற்றியுள்ளனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தும் உள்ளனர். தோல்வியடைந்தது மதச்சார்பின்மை, ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை தான்.
இந்துராஷ்டிர தர்பார்!
நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமல்ல, இந்துராஷ்டிர தர்பார். பேரரசரைப் புகழ்ந்து பாடுபவர்களுக்கும் இரந்துண்டு வாழ்பவர்களுக்கும் மட்டுமே இங்கு அனுமதி.
நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்: சிலந்திவலைகள் எச்சரிக்கை!
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் இன்று அரசியல் ரீதியாக தோல்வி முகத்தை அடைந்துள்ளது என்று நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். இந்த தருணத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாசிசக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், அக்கும்பலின் சதித்தனமான அணுகுமுறைகளையும் உத்திகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்தவே மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு!
மகளிர் இட ஒதுக்கீடு மூலம் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பெண்களின் வாக்குவங்கியைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் பா.ஜ.க. கும்பலுக்கு துளியும் கிடையாது.
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!
இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது.
அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!
40 சதவீத ஊதிய உயர்வு, 32 மணி நேர வேலைக்கு 40 மணி நேர வேலை சம்பளம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்களுக்காக போராட்டத்தை அறிவித்திருக்கிறது, அமெரிக்கத் வாகனத் தொழிலாளர்கள் சங்கம்.
பத்திரிகையாளர்களை அடாவடித்தனமாக பணிநீக்கம் செய்யும் விகடன் குழுமம்!
பாசிச அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்ற சூழலில், உரிமைகளற்ற ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் ஊடகத்துறை செல்வதானது, பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்கச் செய்யும்.