Tuesday, December 3, 2024

பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!

இந்தியாவையே கொந்தளிக்க வைத்த, இரண்டு குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை எப்படி திட்டமிட்டு மறைத்திருக்கலாம் என பைரன் சிங் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருப்பதும் ஆடியோவில் உள்ளது.

ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024: இந்துராஷ்டிர பொருளாதாரத்திற்கான செயல்திட்டம்

மோடி அமித்ஷா கும்பலால், பெயரளவிலான நாடாளுமன்ற ஜனநாயகமும் கேலிக்கூத்தாக்கப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது, நாடாளுமன்ற ஜனநாயகம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்ற மாய பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கான பாசிஸ்டுகளின் நாடகமாகவே உள்ளது.

தொடரும் சாதிவெறியாட்டங்கள்: ஆர்.எஸ்.எஸ் ஊடுருவலும்! தி.மு.க. அரசின் பிழைப்புவாதமும்!

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 48 சாதி ஆணவப் படுகொலைகளும். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் மாதம் வரை 7 சாதி ஆணவப் படுகொலைகளும் நடந்துள்ளன.

குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?

பா.ஜ.க. வேண்டாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும் பா.ஜ.க-விற்கு எதிரான சரியான மாற்று இல்லை என்பதே மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கான உண்மையான காரணமாக இருக்கிறது.

அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா

தற்போது நடந்து முடிந்தது திருமணமும் அல்ல; திருமணத்திற்கான முன்னோட்டமும் அல்ல; “இந்தியாவில் திருமணம்” என்ற மோடி அரசின் முன்னெடுப்பிற்கான கேளிக்கை விளம்பரம் மட்டுமே.

மக்களுக்கான களம் போராட்டமே!

உரிமைகளுக்கான மக்களது களம் போராட்டமாகும். இதனை உணர்ந்து ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட போராட்டக் களத்தில் காத்திருக்கின்றனர்.

எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா,  இந்திய ‘ஜனநாயகமா’

பதவி, அதிகாரத்திற்காக கூட்டணி மாறுவது, கட்சித் தாவுவது எல்லாம் இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மாண்புகளே’.

பாசிச ஆட்சியில் “பேரிடர்கள்”

கொரோனா பெருந்தொற்றையும் மனிதாபிமானமின்றி கொடூரமான முறையில் கையாண்டு பலரை கொன்றொழித்தது பாசிசக் கும்பல். கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் ஏற்பட்ட ஒவ்வொரு பேரிடரையும் பாசிஸ்டுகளுக்கே உரிய அணுகுமுறைகளுடன் கையாண்டு அதனை மக்கள் மீதான பேரழிவாக மாற்றி வருகிறது பாசிச மோடி அரசு.

ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள்: தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்கள் மூலம் தென் தமிழ்நாட்டு மக்களிடையே சாதிமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள விழையும் பா.ஜ.க. கும்பல், தற்போது இந்த உத்தியைத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

பாலஸ்தீனம்: பாசிச மோடி கும்பலின் துரோகம்!

ஐ.நா. மன்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசானது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகமாகத் தனது ஆதரவை நிரூபித்துக் காட்டி, பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தியுள்ளது.

சனாதனம் ஒழிப்போம்!

சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதிக்கு எதிராக காவிக்கும்பல் தொடுத்த தாக்குதல் என்பது உதயநிதி அல்லது தி.மு.க.-வின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று மட்டுமே பார்க்க முடியாது. பாசிச கும்பலின் இந்துராஷ்டிரக் கனவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு சித்தாந்தத்தை ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமாகும்.

தலையங்கம்: கோழைகளின் வீராவேசம்!

பெரும்பாலான இந்த ஆதிக்கச்சாதிக் கட்சிகள், அமைப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்குப் பங்குள்ளது. எனவே, இன்று தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் நாளை இனப்படுகொலைகளாக, பெண்கள், கிறித்தவர்கள் - இஸ்லாமியர்கள், ஜனநாயக சக்திகள் மீதான வன்முறைகளாக வளரும். தமிழ்நாடு மணிப்பூராக மாறும்!

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!

ஆர்.எஸ்.எஸ். தனக்கு இருக்கும் பலத்தைக் கொண்டு தேர்தல் அரசியலுக்கு அப்பால் அதிகார வர்க்கத்தின் அனைத்து அங்கங்களிலும் ஊடுருவி, தான் விரும்பியதை நிறைவேற்றும் நிலைக்கு உயர்ந்திருப்பதை இவை உணர்த்துகின்றன.

‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!

என்னதான் நிதிஷூடன் உறவைப் பேண விரும்பினாலும், ஆனந்த் மோகனின் விடுதலையை கண்டிக்காவிட்டால், தலித்துகள் மத்தியில் தனக்குள்ள வாக்கு வங்கியை இழக்க நேரிடுமே என்பது மம்தாவுக்கு உள்ள தர்மசங்கடம். ஆக மொத்தம் கண்டனமும் ஆதரவும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தில் இருந்தே பிறக்கிறது.

நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!

மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள மோடி அரசின் செயல்பாடு, மறுகாலனியாக்கக் கொள்கையை எவ்வித ஒளிவுமறைவுமின்றி தீவிரமாக அமல்படுத்துவதுதான்.

அண்மை பதிவுகள்