பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர் | கவிதை
பாசிஸ்டுகளின் பாதங்களில் எதிர்க்கட்சிகளின் கொடி-மலர்
சகித்துக் கொள்ள முடியவில்லை
உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை!
தாங்கிக் கொள்ள முடியவில்லை
உங்கள் (அ)ஹிம்சைகளை!
காந்தியிடம் ஆரம்பித்தது
ராகுல் காந்தியிடமும் தொடர்கிறது…
துரோகத்தால் நாறுகிறது
உங்கள் கைகளிலுள்ள
ரோஜாப்பூ!
துவண்டு கிடக்கிறது
உங்கள் கரங்களில் தேசியக் கொடி!
கொடியினை கம்பத்திலேயே விட்டுவிடுங்கள்..
ரோஜாக்களை செடியிலேயே
மலர விடுங்கள்..
பாசிசத்தின் பாதங்களில்
அவைகளை சமர்ப்பிக்காதீர்கள்!
நரமாமிசம் சுவைக்கும்
பற்களுக்கிடையில்
என்ன தேடுகிறீர்கள்
கருணையா..?
பாசிஸ்டுகளே
முகமூடிகளை கழற்றியபின்
அவர்களுக்கு ஜனநாயக சாம்பல்
பூசாதீர்கள்!
பாசிசம் நெஞ்சில் குத்துகின்ற காயங்களுக்கு குறைவானதல்ல..
நீங்கள் முதுகில் குத்தும் ரணங்கள்!
அதானி பற்றி பேச வேண்டுமா
மக்களோடு பேசுங்கள்!
மணிப்பூருக்கு நீதி வேண்டுமா?
மக்களோடு...
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?
பா.ஜ.க. அரசியலுக்கு எதிராக மக்களின் கோரிக்கைகளை கையிலெடுத்தது, பா.ஜ.க-வின் சதித்திட்டத்தை முறியடித்ததோடு ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுத் தந்தது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது! | மீள்பதிவு
பா.ஜ.க எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இந்தனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்! | இணைய போஸ்டர்கள்
வேண்டாம் ஒரே நாடு! ஒரே தேர்தல்!
***
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றதா?
இவ்வாறான பாசிசத் திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறி எதிர்த்த எதிர்க்கட்சிகள், அவை நடைமுறைக்கு வந்த பின்னர், அதற்குக் கட்டுப்படத் தொடங்கிவிடுகின்றன. இத்திட்டங்களுக்கு மக்களிடம் எதிர்ப்பு இருந்தால், அதனை எதிர்ப்பதைப் போல நாடகமாடுகின்றன.
நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!
இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட பிறகும், எந்த இடத்திலும் எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் அவலமே இளைஞர்களை இவ்வாறு மாற்றியுள்ளது, நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது, பாசிச கும்பலுக்கு எதிராக மக்கள் கொதித்து போயுள்ளனர், பாசிஸ்டுகளின் காலம் முடிய போகிறது என்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.
நாட்டை முடக்குவோம்!
நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் ‘விளையாட்டு மைதானம்’. அதில் அவர்களால் மட்டும் தான் ‘சிக்ஸர்’ அடிக்க முடியும்.
பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!
ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும் நடத்திகொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாக தெரியும்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்: குட்டிச்சுவரைக் கட்டி அழாதீர்!
இந்த நாடாளுமன்றம் எப்பேர்ப்பட்டதாக இருக்கிறது, நாட்டின் 99 சதவிகித மக்கள் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள விரும்பாத ஒரு இடம். ஏனெனில் அவர்களது அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையும் பற்றி அங்கு விவாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுவதில்லை. அப்படிப்பட்ட நாடாளுமன்றத்தில்தான், மோடியை அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காக, நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளனர், எதிர்க்கட்சிகள்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!
பாசிசம் என்ற கருநாகம் குடிபுகுவதற்கான கரையான் புற்றுதான் அரசியல்சாசனமும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்றமும். இந்த கரையான் புற்றைப் பாதுகாப்போம் என்று முழங்குவதன் பொருள் என்ன?
பண மதிப்பிழப்பு செல்லும்! | பாசிஸ்டுகளிடம் சரணடைந்த நீதிமன்றம்!
பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம்.
ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!
அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
நாடாளுமன்ற பாசிசம்!
நாடாளுமன்றம் இருக்கிறது, எதிர்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அவையில் பேச முடியாது. விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?
மோடி விரும்புவது போல, பாஜக-வின் இந்த தேர்தல் வெற்றியை பாரதத்தின் வெற்றி என்று யாராவது அழைக்க முடியுமா ? பிரக்யாசிங் தாக்கூரின் வெற்றியை இந்தியாவின் வெற்றி என்று அழைக்க முடியுமா ?
ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து
ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு… நாங்க அந்த விபத்துலேருந்து மயிரிழையில தப்பிச்சிட்டோம்... இன்னொரு தடவ மோடி வந்தா நாங்க குடும்பத்தோட சாகனும் வேற வழியில்ல….