பொம்மி
பேராசிரியர் சாய்பாபா மரணம்: பாசிச மோடி அரசால் நடத்தப்பட்ட படுகொலையே!
சாய்பாபா சிறையில் இருந்த போது இரண்டு முறை கோவிட் தொற்றாலும் ஒரு முறை பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்படவில்லை. சிறையிலிருந்து வெளிவரும்போது அவருக்கு இதயம், சிறுநீரகம், கணையம், மூளை என்ற உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்திருந்தது.
காரணம் கேட்புக் குறிப்பாணை அனுப்பி தொழிலாளர்களை அச்சுறுத்தும் சாம்சங் நிறுவனம்
“நான்கு நாட்களுக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையெனில் காரணமின்றி நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சாம்சங் நிறுவனம் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்தியுள்ளது.
திருப்பதி லட்டில் செலுத்தப்படும் இந்துத்துவ விஷம்
பவன் கல்யாண், ஜக்கி போன்றவர்களின் விஷமப் பிரச்சாரம் என்பது தேவஸ்தான வாரியம், இந்து அறநிலையத்துறை போன்ற அரசுத் துறைகளை ஒழித்துக்கட்டி விட்டு தீட்சிதர்கள் உள்ளிட்ட பார்ப்பன கும்பல் மற்றும் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆகியவர்களிடம் கோவில்களை ஒப்படைப்பதற்கான சதி.
போராடும் சாம்சங் தொழிலாளர்கள் – அடையாள அட்டையை முடக்குவேன் என மிரட்டும் நிர்வாகம்!
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் திங்கட்கிழமைக்குள் (செப்டம்பர் 23) பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.
லெபனான் பேஜர் வெடிப்பு: அப்பாவி மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசு
பேஜர், வாக்கி டாக்கி, சோலார் தகடுகள் என அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்வதன் காரணமாக, லெபனானின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளில் அவசர கால நிலை அமல்படுத்தப்பட்டு விடுப்பிலிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.
இமாச்சலப் பிரதேசம்: இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் காவிக் கும்பல்
சட்டவிரோதமானது என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்ட பகுதியை இடிக்கும் பணியையும் மசூதிக் குழு தொடங்கி விட்டது. ஆனால், காவிக் குண்டர்கள் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு மசூதி முன்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசாம்: பெங்காலி முஸ்லீம்களைக் குறிவைக்கும் காவிக் குண்டர்கள்
"14 முதல் 15 குண்டர்கள் முகத்தை மூடியபடி எங்களிடம் வந்து, எங்கள் அறைகளுக்கு முன்னால் முழங்காலிடுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் கைகளில் கத்திகள், துப்பாக்கிகள், கம்புகள், பிளாஸ்டிக் குழாய்கள் இருந்தன. அவர்கள் எங்களை பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பிரம்பு குச்சிகளால் அடிக்கத் தொடங்கினர்".
வத்வான் துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா: மோடி அச்சம் கொண்டது ஏன்?
துறைமுகம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள வத்வான் பகுதியில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெறவில்லை. மாறாக, வத்வானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பால்கர் நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இது ஏன்?
ஹேமா குழு அறிக்கையும் கேரள சி.பி.எம் அரசும்
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது ஏன்? வன்முறையாளர்கள் மீது இதுநாள் வரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தாவிட்டால் தற்கொலை: ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
காசா பள்ளியின் மீது தாக்குதல்: நூற்றுக்கணக்கானோரை படுகொலை செய்த இஸ்ரேல்
கிழக்கு காசாவில் பள்ளிக்கூடம் ஒன்று அகதிகளாக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கான புகலிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அங்கு மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி மக்களை படுகொலை செய்துள்ளது.
மும்பை கனமழை ரெட் அலர்ட்: உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பு
கார்ப்பரேட் கொள்ளைக்காக மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலில் உழைக்கும் மக்கள் தான் பலியிடப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பாகவே தற்போது கொடுக்கப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பை (ரெட் அலர்ட்) பார்க்க வேண்டியுள்ளது.
வங்கதேசத்தில் வெடித்த பிரம்மாண்டமான மாணவர் போராட்டம்
நேற்று (ஜூலை 15) டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் போராடிய நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா லீக் அமைப்பினர் கற்களை வீசியும், தடிகள் – இரும்புக் கம்பிகளைக் கொண்டும் தாக்கினர்.
அருணாச்சல பிரதேசம்: சியாங் அணை கட்டுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள்
மக்கள் எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாத பாசிச மோடி அரசு இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தி அமைத்தது.
பிரிட்டன் தேர்தல்: தொழிலாளர் கட்சியின் வெற்றியில் கொண்டாட ஏதுமில்லை
பழமைவாத கட்சி, தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் நேட்டோ (NATO) ஆதரவு கட்சிகள் தான். பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பதிலும் இவர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.