Sunday, October 17, 2021
தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்களின் மீதான உழைப்பு சுரண்டல், உடல்நல பாதிப்புகள், வாழ்நிலை அவலங்களை படம்பிடித்துக் காட்டுகிறது “உப்பிட்டவரை...” - ம.க.இ.க-வின் ஆவணப்படம். பாருங்கள் - ஆதரவு தாருங்கள் !!
உப்பு சுமக்க வந்தோம் - வலிகளை சுமந்து நின்னோம்.. உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்.. அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்.. 405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..
தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை படம்பிடித்துக் காட்டும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”உப்பிட்டவரை” ஆவணப்படம், விரைவில் வெளிவரவிருக்கிறது. அதன் டீசர் உங்கள் பார்வைக்கு !
தேச துரோக சட்டம் 124-A என்பது இந்திய குடிமக்களுடைய வாழ்க்கையை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறைக்காக உருவாக்கப்பட்ட இத்தகைய அடக்குமுறை சட்டங்கள், ஒரு போதும் இந்திய அரசால் நீக்கம் செய்யப்படாது. இந்த அடக்குமுறை சட்டங்கள் மேலும் தீவரமடையத்தான் செய்யும். அரசின் செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ போராடவோ முற்பட்டால், அவர்கள் இந்த அரசால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். குறிப்பாக கார்ப்பரேட்களின் நலன்களின் மீது எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மக்களும் ஜனநாயக சக்திகளும் அடக்கப்படுவதற்கே இதுமாதிரியான மக்கள் விரோத சட்டங்கள்...
ரபேல் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் பிரான்சில் அம்பலமாகி விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், இந்தியாவில் இந்த ஊழல் முறைகேடு அடக்கி வாசிக்கப்படுகிறது. ரஃபேல் ஊழல் குறித்த பார்வையை வழங்குகிறார் சுரேசு சக்தி முருகன்
ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களை அரச பயங்கரவாத்தில் இருந்து பாதுகாப்பதற்காக போராடினார் ஸ்டான் சுவாமி. அவர் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு, இதுவே முக்கியக் காரணமாகும்.
“கொரோனா காலத்தில் டாஸ்மாக் எதற்கு ? மூடு டாஸ்மாக்கை !! “என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் தருமபுரி தோழர்கள் மூடு டாஸ்மாக்கை என்று பாடிய பாடலை தற்போது வெளியிடுகிறோம்.
பிரஃபுல் படேல் மூலம் தனது கார்ப்பரேட்-காவி பாசிசத்தை இலட்சத்தீவில் மோடி அரசு அரங்கேற்றுவது பற்றி கடந்த ஜூன் 14 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் முகநூல் பக்கத்தில் தோழர் சுரேசு சக்தி முருகன் ஆற்றிய உரை !
இந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக அகற்ற கோரும் விதமாகவும், ஓட்டுக்கட்சிகள் மற்றும் அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம், புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலை காணொளி வடிவில் வெளியிடுகிறோம்!
கொரோனா இரண்டாவது அலையில் மத்திய மாநில அரசுகளின் கார்பரேட் சேவையை அம்பலப்படுத்துகிறார்கள் மக்கள் அதிகாரம் தோழர்கள்.
ஒரு பக்கத்தில் கும்பமேளாவில் கூட்டம் கூட அனுமதித்துக் கொண்டும், தேர்தல் கூட்டங்களை அனுமதித்துக் கொண்டும் மற்றொரு பக்கத்தில் சமூக இடைவெளி பற்றியும் ஊரடங்கு பற்றியும் வகுப்பெடுக்கிறார் மோடி.
இந்திய அளவிலும் உலக அளவிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன ? ஊரடங்கு காலத்தில் மக்களைக் காப்பாற்ற முன்னேற்பாடுகளோடு தயாராக இருக்கிறதா அரசு ?
இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !!
மீதேன், சாகர்மாலா நிறுத்தாது தேர்தலு !! மின்சார திருத்த சட்டம் முடக்காது தேர்தலு !! வேளாண் திருத்த சட்டம் துரத்தாது தேர்தலு !! விவசாயி கோவணத்த உருவதாண்டா தேர்தலு !!

அண்மை பதிவுகள்