Friday, September 20, 2024
சமத்துவம், சகோதரத்துவம், பெரியார் வழி நடப்போம் என உறுதிமொழி எடுக்கும் இந்த அரசிலும் கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி மதமற்றவர் என்பதை பதிவு செய்ய முடியவில்லை. சாதி மதமற்றவர் சான்றிதழும் இழுத்தடிக்கப்படுகிறது.
உலகத்தின் அடுப்பங்கரைகளில் அதிகாலை 2 மணிக்கே அடுப்பு எரிவது செங்கல் சூளை தொழிலாளிகளின் வீடுகளில்தான் இருக்க முடியும். இடுப்பு ஒடிய வேலை செய்து விட்டு சோர்வோடு வந்து வீட்டில் எதுவும் செய்ய முடியாது,
School
ஆங்கில வழிக் கல்வி பயிலும் குழந்தைதான் அறிவார்ந்த குழந்தை எனும் இந்த உளவியல், தமிழ்நாட்டு மக்களின் மேல் மறுகாலனியாக்கம் ஏவியிருக்கும் அடிமைப் புத்தியாகும். இதனை எங்கும் விரவச் செய்கிறது, அரசு
“குப்பை எடுக்க போகும் இடங்களில் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் “ஏய் குப்பை” “குப்ப காரரே” என்றுதான் அழைப்பார்கள். அதிலும் ஒருவர் “நேற்று குப்பை எடுக்க சென்ற வீட்டில் ஒரு அம்மா மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிகிறார்” என்றார்.
என் துணைவியார் சிறுசிறு குறைகளை சுட்டிக் காட்டினால் கூட, நாம் ஆணாதிக்கம் இல்லாமல் வீட்டு வேலைகளை செய்து வந்தாலும் இப்படி சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அக்கப்போர் நடக்கிறதே என எண்ணுவேன்.
வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.
கார்ப்பரேட்டுகளுக்கு கடனை வாரி கொடுத்து, வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைக்கும் வங்கி அதிகாரிகள், சாமானிய மக்களிடம் எப்படி நடக்கின்றனர்? ஓர் அனுபவ பகிர்வு.
பொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல.
வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் இவற்றை அறியாத ஏழை உழைக்கும் மக்களின் சேமிப்புகளாக இருப்பவை பண்டிகை சீட்டுக்கள் தான். அதையும் மோடி அரசின் பொருளாதார சிக்கல் சீரழித்த கதை.
Demonetisation
உங்களின் வீட்டருகிலும் இது போல உண்மைக் கதைகள் இருக்கலாம். ஏன் உங்கள் வீட்டிலே கூட இருக்கலாம். தொடரும் பணமதிப்பழிப்பு அவலத்துக்கு ”ஒரு சோறு பதம்” இது...
பாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு.
1-ola-uber-Car-Driver
நம்ம வண்டி… நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.
கடைசியில புடுபுடுன்னு புல்லட்டுல ரெண்டு குடம் தண்ணி எடுக்குறதயும் நீங்க கிராமப்புறங்கள்ள பாக்கலாம்!
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர்.
சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்... இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா ?

அண்மை பதிவுகள்