"ஒன்னும் நடக்கலன்னா, அதுக்கு மேல நீங்க போராடித்தான் ஆகனும்! எங்களால ஒன்னும் செய்ய முடியாது. நாங்க ஜெபிப்போம். அவ்வளவுதான் எங்க வேல பா!"
நாம முந்திக்கு எவ்ளவோ சுதந்திரமா இருக்கோம். முன்னேறியிருக்கோம்னு மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் திளைக்கிற இந்த நேரத்தில இதெல்லாம் உண்மையான்னு ஒரு நிமிடம் யோசிச்சு பார்க்கறேன்.
"ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை"
அவர் உயிராய் மதிக்கும் இஸ்லாத்தையும் குரானையும் நான் முதிர்ச்சியற்றும், முட்டாள்தனமாகவும் விமர்சிக்கும் போதெல்லாம் பொறுமையாக விளக்கியிருக்கிறார்.
என் கண்முன்னால் துடிதுடித்து கால்கள் வெட்டிவெட்டி இழுத்துக்கொண்டிருந்த ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது நானே கேள்வி கேட்கிறேன். ஏன் இந்த விபத்து? ஏன் அவர் காப்பாற்றப்படவில்லை?
கோவன்... தமிழ்நாட்டின் கத்தார்! வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அதிகார வர்க்கம் அம்மணம் ஆகும்.
வாங்குன சம்பளம் சாப்பாட்டுக்கே போதல தம்பி, வேல முடிஞ்ச உடன ஒரு ஓட்டல்ல கூட மாட ஒத்தாச வேலைக்கு போனேன், அங்கனயே தங்கி, சாப்ட்டுகிட்டேன். தூங்க கூட நேரம் கெடைக்காது. மிச்சம் புடிச்சு மாசம் 500 ரூபாய்க்கு கொறயாம வீட்டுக்கு மணிஆர்டர் அனுப்புவேன்.
துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
சமத்துவம், சகோதரத்துவம், பெரியார் வழி நடப்போம் என உறுதிமொழி எடுக்கும் இந்த அரசிலும் கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி மதமற்றவர் என்பதை பதிவு செய்ய முடியவில்லை. சாதி மதமற்றவர் சான்றிதழும் இழுத்தடிக்கப்படுகிறது.
அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார்.
பிரித்து வைத்து ஒற்றுமையை குலைக்க எண்ணியது நிர்வாகம்: தேசிய-பாலின-ஊதிய வேறுபாடுகள் தாண்டி 'நாங்கள் தொழிலாளிகள்' என வர்க்க ஒற்றுமையுடன் பதிலடி கொடுத்தனர் தொழிலாளர்கள்
பில்டர் காபி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், சரவண பவன்கள் போன்றவை சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.
மக்களிடம் நிலம் பறிக்கப்பட்ட கதை வரலாற்றில் முந்தையது. ஆறுகளும், கனிமவளங்களும் இதே போன்று அரசின் சட்ட திட்டங்களால் கருப்பாக அல்லாமல் வெள்ளையாகவே தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய கும்பலுக்கு மடைமாற்றப்பட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன்.
கடந்த பத்தாண்டுகளில் சுடலைமாடனின் புகழ் பரவியதன் பின் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது நண்பர்களே. இத்தனை வருடங்களாக வெளியே யாரிடமும் சொல்லாத அந்தக் கதையை இப்போது சொல்கிறேன்.