‘ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா… அரசின் வேலை’ என்ற முழக்கத்தை முன்வைத்து பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 16.11.14 அன்று பிரச்சாரம் செய்த போது அனுபவங்கள்.
சுமார் 2000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வசிக்கும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பெரும்பாலும் அன்றாடம் கூலி வேலைகளுக்கு செல்லுபவர்கள். ஆண்கள் அத்தனை பேரும் வேலைகளை காரணம் காட்டி குடிப்பவர்கள்தான். இதில் இளைஞர்களும் அடங்குவார்கள்.
பிரச்சாரத்தின் போது 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி “ஏம்மா இந்த சாராயக் கடைய அம்மா இல்ல, அப்பா – விஜயகாந்து – மோடி யாரு வந்தாலும் தடுக்க முடியாது, இது அம்மா கட்சிகாரங்க அதிகமா இருக்கிற ஏரியா, நீங்க எல்லாம் பொம்பளங்களா இருக்கிறீங்க… சீக்கிரம் கௌம்புங்க” என்று நம்மீது அக்கறையுள்ளதை போல் பேசினார்.
தோழர்கள் அவரிடம் “ஏம்மா நாங்களும் எல்லா கட்சிகாரவுங்களையும் பார்த்துட்டுதான் வந்திருக்கிறோம்” என்று கூறியவுடன்
“ஏம்மா நானும் அம்மா கட்சிதான். என்கிட்டேயே நீங்க அம்மாவை மோசமா படம் போட்ட பேப்பரை குடுங்கிறீங்க” என்று கோபப்பட்டார்.
தோழர்களும் தொடர்ந்து “அம்மா நீங்க கிராமத்திலிருந்து வந்தவங்க மாதிரி தெரியுது. உங்க வயசுக்கு உங்க தாத்தா, அப்பா எல்லாம் எப்படி பயந்து பயந்து குடிச்சாங்க. ஆனா இப்போ சாராயக்கடையை அரசாங்கமே நடத்துற தைரியத்துல உங்கமகன் எப்படி குடிக்கிறாரு, இத இப்படியே விட்டுட்டா உங்க பேரப்புள்ளைங்க குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கிடக்கிறத உங்களால பார்க்க முடியுமா?
அதுமட்டுமில்லாம குடிவெறியோட கூடவே செக்ஸ்பட வீடியோவை பார்த்துட்டுவர பயலுங்க அக்கா, தங்கச்சி, குழந்தைன்னு பார்க்காம பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துறத நீங்க பார்த்துகிட்டுசந்தோசபடுவீங்களா? தடுக்கத்தானே பார்ப்பீங்க, ஆனா தமிழகத்திற்கே ‘அம்மா’வாக இருக்கும் அவங்க ஏன் நம்முடைய பிள்ளை அழிவதைப்பத்தி கவலைப்படாமல் குடிகாரனாகவும்-காமுகனாகவும் மாறுவதை தடுக்க முடிந்தாலும் முதலாளிகளின் லாபத்திற்காக நம்வீட்டு பிள்ளைகளை பலி கொடுக்கிறார்கள்?”என்று கேட்டவுடன்
“அதெல்லாம் சரிதாம்மா ஆனாலும்….” என்று பதில் கூற முடியாமல் தடுமாறியவரிடம் பிரசுரத்தை கொடுத்து, “இதில் இப்போது உள்ள நிலைமைக்கு மாறாக ஏதும் எழுதி இருந்தால் உங்களை மறுபடியும் சந்திக்க வரும்போது கூறுங்கள்” என்று என்றவுடன் பிரசுரத்தை வாங்கி கொண்டு சிரித்த முகத்துடன் விடை கொடுத்தார்.
அதன்பிறகு பிரச்சாரத்தை தொடர்ந்த சிறிது நேரத்தில் அதிமுக கட்சி வேட்டி கட்டிய ஒருவர் நம்மை நோக்கி வந்து “ஏம்மா நான் ஒன்னு கேட்ட கோவிச்சுக்காம பதில் சொல்வீங்களா?” என்ற பீடிகையோடு பேச தொடங்கினார்.
“ஏம்மா என் வீட்டுல நீங்க கொடுத்த ஒரு பத்திரிக்கையிலே ‘பாப்பாத்தி ஜெயா’ என்று போட்டு இருக்கிறீங்க. இது நீங்க போட்ட பத்திரிக்கைதானே, எப்படி நீங்க சாதி பெயரை போடலாம்” என்று கோபமாக பேசத் தொடங்கினார்.
“ஐயா பாப்பாத்தி என்று நாங்களா போடவில்லை அவங்க சட்டசபையிலே சொன்னதைதான் நாங்க பத்திரிக்கையிலே போட்டோம்” என்று கூறினோம்.
அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே “உங்க வீட்டுல எல்லாம் குடிக்க மாட்டாங்களா, பெரிசா பிரச்சாரம் செய்ய வந்துட்டீங்க. முதல்ல உங்க புருசன்கள, புள்ளைகள பாருங்க அப்புறமா இங்க வாங்க” என்று அடுத்த கேள்விக்கு தாவினார்.
தோழர்களும் “நாங்க மட்டும் இல்ல.எங்கபுருசங்க, புள்ளைக எல்லாம் இந்த குடிகெடுக்கிற அரசுக்கு எதிரா சென்னையில பல பகுதியில் பிரச்சாரத்தில இருக்காங்க, அவங்க யாரும் குடிக்க மாட்டாங்க” என்ற பதிலுக்கு பேச முடியாமல்
“எங்க அம்மாவை பாப்பாத்தின்னு போட்ட உங்க பத்திரிகை மேல கேசு போடப் போறேன்” என்று சாராய வாடை முகத்தில் தெறிக்க பெரும் கூச்சலிட்டவாறு சென்று விட்டார்.
பகுதி மக்கள் பிரச்சாரத்தின் போது நம்மிடையே அவர்களுடைய குடும்பத்தில் குடியால் ஏற்படும் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டார்கள்.
பொதுவாக மாமியார் மருமகள் என்றால் பிரச்சனைதான் என்று கருத்து இருக்கும் நிலைமையில், தன்னுடைய பிள்ளை தினமும் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்காக வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விற்றுவிட்டான் என்பதையும் காலையில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் குடங்களை உடைத்து கடையில் விற்றுவிட்டு குடிக்க சென்றுவிட்டான். மருமகளும் இரண்டு மாத கைக்குழந்தையும் பசியும் பட்டினியுமாக இருப்பதை பார்க்க முடியாமல் தன்னுடைய தள்ளாத வயதிலும் வேலைக்கு செல்வதையும், அதில் வரும் வருமானத்தையும் பிடுங்கிக் கொள்வதும் குழந்தை பாலுக்காக ஏங்கி அழுவதையும் சகித்துக் கொள்ள முடியாததையும் கூறி, “நீங்க இந்த சாராய கடையை ஒழிக்க எடுக்கும் போராட்டத்திற்கு எங்கு கூப்பிட்டாலும் வருவேன்” என்று கூறியது குடிகெடுக்கும் குடியை ஒழிக்க பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களுக்கு இன்னும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.
அன்றாடம் குடியினால் ஏற்படும் பிரச்சினைகள்
- குடித்துவிட்டு சின்ன வயதிலேயே இறந்து போகும் கணவன்கள், அனாதைகளாக கைவிடப்படும் மனைவிகள் – குழந்தைகளின் அவலம்
- அரசு திட்டமிட்டே பரப்பும் சீரழிவு கலாச்சாரம், அரசு என்பது முதலாளிகளுக்கானது, மக்களுக்கானது அல்ல, அரசு ஒரு போதும் உழைக்கும் மக்களை பற்றி சிந்திக்காது என்பதை காட்டுகிறது.
- சிந்திக்காத அரசை அடித்து நொறுக்க மக்களாகிய நாம்தான் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
ஆகியவற்றை பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டி தோழர்கள் விளக்கி பேசியது பகுதி பெண்களின் மத்தியில் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது. அமைப்பாக சேருவதற்கு பலர் ஆர்வம் காட்டினார்கள்.
நமது பிரசுரத்தில் உள்ள ஓவியத்தை வீடு வீடாக ஸ்டிக்கர் போட்டு ஒட்டி, “ஓட்டுக் கட்சிகள் ஓட்டு கேட்டு வரும்போது அதை காண்பித்து பேச வேண்டும்” என்றார்கள்.
போராட்டம் தொடரும்…
தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை கிளை
//ஏம்மா என் வீட்டுல நீங்க கொடுத்த ஒரு பத்திரிக்கையிலே ‘பாப்பாத்தி ஜெயா’ என்று போட்டு இருக்கிறீங்க. இது நீங்க போட்ட பத்திரிக்கைதானே, எப்படி நீங்க சாதி பெயரை போடலாம்” என்று கோபமாக பேசத் தொடங்கினார்//
இதைப் பற்றி முன்பு கூட பின்னூட்டத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் : குடிக்காதே என்று செய்யும் பிரச்சார நோடீசில் பாப்பாத்தி என்று ஏன் போட வேண்டும்? மது விலக்கு குறித்து பேசும் போது ஜாதி பேசினால் கவனம் சிதறும். வினவு பதிவுகளிலும் சீரியாசாக ஒரு பிரச்னையை விவாதிக்கும் பொது நடுவிலே பார்ப்பான்/பாப்பாத்தி என்று குறிப்பிடுவது பேசும் விஷயத்திலிருந்து கவனம் பிசகும். அந்தப் பிசாசு பாப்பாத்தியாகவே இருந்து விட்டுப் போகட்டும்; ஆனால் குறிப்பிடும் போதெல்லாம் ஜாதியைப் பற்றிக் குறிப்பிடுவது சரி அல்ல.
ஒரு கவனமும் பிசகாது. சரியானதைச் குறிப்பிடவேண்டுமென்றால் அசல் அவர்களாக இருப்பவர்கள் குடிக்கு எதிராகத் தங்களது கோபத்தைக் காட்டலாம்.
Before writing comments against vinavu, I request all of you, please answer this question.
ஆனா தமிழகத்திற்கே ‘அம்மா’வாக இருக்கும் அவங்க ஏன் நம்முடைய பிள்ளை அழிவதைப்பத்தி கவலைப்படாமல் குடிகாரனாகவும்-காமுகனாகவும் மாறுவதை தடுக்க முடிந்தாலும் முதலாளிகளின் லாபத்திற்காக நம்வீட்டு பிள்ளைகளை பலி கொடுக்கிறார்கள்?
நமது பிரசுரத்தில் உள்ள ஓவியத்தை வீடு வீடாக ஸ்டிக்கர் போட்டு ஒட்டி, “ஓட்டுக் கட்சிகள் ஓட்டு கேட்டு வரும்போது அதை காண்பித்து பேச வேண்டும் intha picture elam engalukum share panunga pa. facebookla pota kuda pothum
பாப்பாத்தி ஜெயா
identifying a person with caste is racism
அரிஜனம்னு சொல்லும்போது ,அவால்லாம் சூத்ரவா எனும்போதும் ராமனுக்கு ரேசிசம் தெரியாது……..