Tuesday, December 10, 2024

நிகழ்வுகள்

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற

வீடியோ

ஆடியோ செய்திகள்

காசாவில் இருந்து! | கவிதை

காசாவில் இருந்து! எங்களின் கண்ணீரெல்லாம் கார்மேகமாகி இருந்தால், காணாமல் போயிருக்கும் இசுரேல் கடலுக்குள்… இதோ, காசாவெங்கும் ஆயிரமாயிரம் பிஞ்சுகளின் பிணக் கடல்… குண்டுவீச்சுகளில் சிதைபவை எங்கள் சிறுவர்களின் சிரங்களும் கரங்களும் தான், சிறகடிக்க விரும்பும் விடுதலைக் கனவுகள் அல்ல... சிரசில்லா சிறார்களின் சிதைந்த உடல்களைச் சிலுவையாய்ச் சுமக்கிறோம்; ஈரமில்லா வெறியர்களின் கொட்டம் அடக்கிட, மீண்டும் உயிர்த்தெழ வேண்டியே விதைக்கிறோம்... உரிமை மட்டுமா இல்லை என்றார்கள், ஒருவேளை உணவும்...