ஆசாத்
டெல்லி மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கொலைகார மோடி அரசு!
காஷ்மீர், காசா போன்ற இடங்களில் மக்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் பெல்லட் துப்பாக்கியைக் கொண்டு டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியிருப்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.
மகாராஷ்டிரா: இஸ்லாமிய சிறுவர்களை கட்டிவைத்து அடித்த சாதிவெறியர்கள்!
விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளைத் திருடியதாகக் கூறி 13–15 வயதிற்குட்பட்ட மூன்று இஸ்லாமிய சிறுவர்களை, மராத்தா ஆதிக்கச் சாதிவெறி கும்பல் கம்பத்தில் கட்டிவைத்து பெல்ட், பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
மேற்குவங்கம்: மார்க்சிய ஆய்வாளர் ராகுல் சாங்கிருத்தியாயன் சிலையை அகற்றிய காவி கும்பல்
பாசிச கும்பல் திட்டமிட்ட சதியின் பேரில், கடந்த ஜூலை 13 அன்று இரவு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை செயலிழக்கச் செய்து, தெருவிளக்குகளை அணைத்துவிட்டு தோழர் சாங்கிருத்தியாயனின் சிலையை உடைத்து அகற்றியுள்ளது.
மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இரத்து: மதுரை உயர்நீதிமன்றத்தின் மற்றொரு கரசேவை!
இந்தியாவில் “இந்து மதம்” எனும் ஒற்றை மதத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல், பௌத்த, சீக்கிய மதங்களை விழுங்குவதையும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஒழித்துக் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “தாய் மதத்திற்குத் திரும்புதல்” (கர்வாப்சி) என்ற பெயரில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது. பாசிஸ்டுகளின் இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சேவையாற்றுவதாகவே இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: காதலர்கள் இரட்டை ஆணவப் படுகொலை!
ஆணவப் படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் மீது தற்போது வரை போலீசு கொலை வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருக்கிறது. எனவே கொலைக் குற்றாளிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
“சில்லறை விற்பனை விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றன; அதே நேரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை, மாறாக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரிய வர்த்தகர்களுமே லாபம் அடைகின்றனர்.”
உ.பி லக்னோ தீ விபத்து: யோகி அரசின் அலட்சியத்தால் 15 பேர் பலி
இக்கட்டடம் குடியிருப்பு பயன்பாட்டிற்காகவே அனுமதி பெற்றிருந்தது. ஆனால் சட்டவிரோதமாக வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. எனவே, இது விபத்தல்ல; யோகி அரசால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
சிவகங்கை போலீசு முதல் திருவள்ளூர் குழந்தை வரை: தீவிரமடையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்!
விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பால் குடிக்கும் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பி.எஃப்.ஏ.எஸ் நச்சு ரசாயன ஆலை: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாகி வரும் இந்தியா!
“எந்தவொரு சமூகமும் தங்களின் வேலைவாய்ப்புக்காகத் தங்கள் ஆரோக்கியத்தையோ, உயிரையோ பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஆபத்து என்று நிராகரித்த ஒரு நச்சுப் பொருளை, நம் நாட்டிற்குள் கொண்டு வந்து ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மீண்டும் விற்க அனுமதிக்க முடியாது.”
ஜம்மு – காஷ்மீர்: எட்டாவது ஆண்டாக பக்ரீத் கொண்டாட்டத்திற்குத் தடை விதித்த மோடி அரசு!
பாசிச கும்பலால் 2019-ஆம் ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஈத் (பக்ரீத்) மற்றும் பிற முக்கிய மத வழிபாட்டு நாட்களின் போது ஈத்கா மைதானம் மற்றும் ஜாமியா மசூதியில் மக்கள் வழிபாடு நடத்துவதற்குத் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. எட்டாவது ஆண்டாகவும் இத்தடை நீடிக்கிறது.
கோவை: பத்து வயது சிறுமி பாலியல் வன்கொலைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம்!
தனிமனித தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்ட நபரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விஜய் அரசு மற்றும் பாலியல் குற்றவாளிகள் மீதான மக்களின் எதிர்ப்பை பாதிக்கப்பட்ட நபருக்கு எதிராகவே திருப்புகின்ற சதியில் ஊடகங்கள் சில ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
மகாராஷ்டிரா சாதிப் பஞ்சாயத்து: பெண் அரை நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்!
வெளிப்படையாக, தங்களின் கண்முன்னே நடைபெற்ற இக்கொடூரத்தை யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர் என்பதே மிகப்பெரிய வேதனையாகும். அதிலும் அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள் போராட்டங்கள்!
தற்போது வெளியாகியுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பானது வரவேற்கத்தக்கதேயானாலும் இளைஞர்களைச் சீரழிக்கின்ற, குடும்பங்களின் தாலி அறுக்கின்ற டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் மீது அதிகரிக்கும் இணையவழி வன்முறைகள்!
22 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்முறை வேலையிலேயே கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். சான்றாக ஒரு அரசியல்வாதியைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக ஆபத்து வரும் எனத் தெரிந்தால், அந்தச் செய்தியை எழுதாமல் தவிர்ப்பது, வன்முறையைத் தூண்டும் குழுக்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது என்று தங்களைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.
பாசிச மோடி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!
இந்தியப் பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. அவரது ஆட்சிக்குச் சாதகமாகப் பேசும் ஊடகங்களுக்கே பேட்டி அளிக்கிறார். ஆட்சிக்கு எதிராக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் பா.ஜ.க இணையதள குண்டர்களால் மிரட்டல்களுக்கும், கைது மற்றும் நேரடி தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.















