Saturday, July 25, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஆசாத்

ஆசாத்

ஆசாத்
68 பதிவுகள் 0 மறுமொழிகள்

டெல்லி என்.சி.ஆர்: தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அறிவுஜீவிகள்!

0
“தாங்க முடியாத வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிப்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்” என்று அறிவுஜீவிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஹரியானா: சாக்கடைக் குழாயில் விசவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி!

0
ஹரியானா பா.ஜ.க. அரசு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் நகராட்சி தொழிலாளர்களை சாக்கடைக் குழாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி இரண்டு தொழிலாளர்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தகைய படுகொலைகளும் மலக்குழி மரணங்களும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நாடெங்கும் அதிகரித்து வருவதுடன் அதுகுறித்த புள்ளிவிவரங்கள் கூட இருட்டடிப்பு செய்யப்படுகிறன.

ஐ.டி விதிகள் திருத்த முன்மொழிவு: கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதல்!

0
வரைவு விதிகள், “இண்டர்மீடியரி” எனப்படும் முகநூல், எக்ஸ், யூடியூப் போன்ற நிறுவனங்களை மட்டுமின்றி ஆன்லைனில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த உள்ளடக்கத்தைப் பகிரும் பயனர்களையும் (மக்களையும்) உள்ளடக்கும் வகையில் கண்காணிப்பு வழிமுறைகளை விரிவுபடுத்துகிறது.

உ.பி தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!

0
குறைந்தபட்ச மாத ஊதியத்தை 20,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிலாளர்கள் பணிகளைப் புறக்கணித்து வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்தை 21 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

கரூர்: அருந்ததியர் மக்கள் மீது அரங்கேற்றப்படும் தீண்டாமைக் கொடூரம்!

0
பல ஆண்டுகளாக அருந்ததியர் மக்கள் கடவுளை வழிபடத் தடை, இறந்தவர்களின் உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்குத் தடை, தெருவுக்குள் செருப்பு அணிந்து வரத் தடை என ஆதிக்க சாதிவெறியர்களால் அருந்ததியர் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடூரங்கள் தீண்டாமையின் உச்சமாகும்.

லெபனான்: மூன்று பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்த இனவெறி இஸ்ரேல்!

0
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் அல் மயாதீன் (Almayadeen) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பாத்திமா ஃப்தூணி, அவரது சகோதரரும் ஒளிப்பதிவாளருமான முகமது ஃப்தூணி மற்றும் அல்–மனார் (Al Manar) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த அலி ஷோயிப் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா: தீவிரமடையும் எரிவாயு தட்டுப்பாடு!

0
ஏற்கெனவே இனப்படுகொலை செய்யப்பட்டு வரும் காசா மக்கள், இனவெறி இஸ்ரேலின் கட்டுப்பாடுகளால் எரிவாயு, உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தத்தளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஒடிசா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி – பா.ஜ.க-வின் மற்றொரு “மருத்துவமனைப் படுகொலை”

0
இது ஏதோ எதிர்பாராத விபத்து என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக் கட்டமைப்பின் பாதுகாப்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியே 12 உயிர்களை காவு வாங்கியுள்ளது.

ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் தீப்பெட்டித் தொழில்!

0
ஏற்கெனவே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களால் (lighter) தீப்பெட்டித் தொழில் அழிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தீப்பெட்டி தொழிலை முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்

0
தி.மு.க. அரசு தொடரும் பெண்கள் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை நிரந்தரமாக ஒழிக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வருகிறது.

கமேனி படுகொலை: அமெரிக்க – இஸ்ரேலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்!

0
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்று பொய்யாகக் குற்றம் சாட்டி ஏகாதிபத்திய போர்வெறி பிடித்த அமெரிக்காவும் பயங்கரவாத இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரானின்...

யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!

0
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

டெல்லி: குடிசைப் பகுதி மக்களை விரட்டியடிக்கும் மோடி அரசு

0
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

உத்தரப்பிரதேசம்: 18 பேரின் கண் பார்வையைப் பறித்த தனியார் மருத்துவமனை!

0
கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய கருவிகளில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக நீக்காமல் அலட்சியமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் 18 பேர் கண்களையும் பார்வையையும் இழந்து கடும் வேதனையிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இணையவழிப் பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் விதிப்பு: எஸ்.பி.ஐ. வங்கியின் பகற்கொள்ளை

0
சேவைக் கட்டணம் என்ற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்ற வங்கிகள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாராக் கடன்களை எந்தவித அபராதமும் விதிக்காமல் தள்ளுபடி செய்கின்றன. ஆக, சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது.