அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்!

பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் விதிப்பது ஆகியவற்றின் மூலம் தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு, கூடுதல் நிதியாதாரங்கள் என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்திருப்பது சுப்ரமணியம் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியிருக்கிறது.

நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!

நிதி ஆயோக்கின் அறிக்கையை காரணம்காட்டி அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பல நலத்திட்ட உதவிகளை வெட்டி அவர்களை பேரழிவுக்குள் தள்ளுவதற்கான பேரபாயம் உள்ளது.

ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்

நிலவுகின்ற போலி ஜனநாயகம், போலி மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கெல்லாம் சமாதி கட்டிவிட்டு, தாங்கள் நிறுவத்துடிக்கும் இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகத்தை ஆரவாரமாக நடத்திமுடித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல். இந்த பட்டாபிஷேகத்தில், அதானி - அம்பானியின் சேவகரான மோடி இந்துராஷ்டிரத்திற்கான ‘மன்னனாக’ முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான மக்களின் களப்போராட்டங்கள் காவி பாசிஸ்டுகளை அச்சங்கொள்ள செய்யும் என்பதற்கு லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை!

இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் பாசிஸ்டுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. போராட்டத்தின் வடிவம் வேறுபட்டிருந்தாலும் ஒன்பதரை ஆண்டுக்கால மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களின் தொடர்ச்சியே இச்சம்பவம்.

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!

பிரதமர் மோடியின் மனம்கவர்ந்த அடியாட்களையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளையும் இனி சட்டப்பூர்வமாகவே தலைமை தேர்தல் ஆணையராகவோ பிற தேர்தல் ஆணையர்களாகவோ நியமிக்க முடியும்.

பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு

பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.

காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்

புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜே.என்.யு), தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நடந்துவரும் நிகழ்வுகள் பல்கலைக்கழகங்கள் எப்படி காவிகளின் கூடாரங்களாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

காஷ்மீர் தீர்ப்பு: பாசிஸ்டுகளுக்கு சட்ட அங்கீகாரம்

காஷ்மீர் மக்களின் முதுகில் குத்தும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது, இனி காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கரத்தை காஷ்மீரில் வலுப்படுத்துவதாகவே அமையும்.

தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!

இந்தியாவை சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிக்கலாம்; அப்படிக் கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட் கட்சிகளுடன் சட்டப்பூர்வமாகவே பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் மோடி அரசின் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.

அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா: தொடர்ந்து வேட்டையாடப்படும் பத்திரிகை சுதந்திரம்

உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.

நேற்று ராகுல் காந்தி! இன்று மஹுவா மொய்த்ரா! நாளை?

இதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசினால் மைக்கை அணைப்பது போன்ற பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காவிக் கும்பல் இனி அதானி-அம்பானி குறித்து பேசுவோருக்கு நாடாளுமன்றத்திலேயே இடமில்லை என்று அறிவிக்கின்றனர்.

பாபர் மசூதி – ராம ஜென்மபூமி: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்! | மீள்பதிவு

பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த ஜா-வின் நேர்காணல்.

காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகளின் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!

மக்கள் பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு பா.ஜ.க-வின் ‘இந்து’ வாக்குவங்கிக்கு பின்னால் ஓடிய காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கு மக்கள் கொடுத்துள்ள பரிசே இத்தோல்வி!

ஐந்து மாநிலத் தேர்தல்: ஓரங்கட்டப்பட்ட பழங்குடியின மக்கள் பிரச்சனை!

இந்தியாவில் ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதானி, வேதாந்தா, ஜிண்டால் போன்ற உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இரும்பு, பாக்சைட் போன்ற கனிம வளங்களை சூறையாடி வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க மற்றும் மாநில அரசுகளின் துணையுடன் இச்சூறையாடலை மேலும் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

அண்மை பதிவுகள்