புதிய ஜனநாயகம்
தி.மு.க. முதல் த.வெ.க. அரசு வரை…. கார்ப்பரேட்மயமாகி வரும் அரசு மருத்துவக் கட்டமைப்பு
அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தனியார் மருத்துவமனைகளுக்கு வெறுமனே இணையத்தில் விண்ணப்பித்தால் போதும்; தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, த.வெ.க. அரசின் மருத்துவக் கொள்கை யாருக்கானது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
மேகதாது அணை: குடிநீர் தேவையா? கார்ப்பரேட் சேவையா?
பெங்களூருவில் கார்ப்பரேட் முதலீட்டைத் தக்கவைப்பது, தமிழ்நாட்டின் காவிரிப் படுகையிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது என இரு மாநில கார்ப்பரேட் நலன்களுக்காகவே , சொந்த மக்களின் நீர் உரிமையையும் தமிழ்நாட்டின் வரலாற்று உரிமையையும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் காலில் மிதித்து மேகதாது அணையைத் தீவிரமாக கட்டத் துடிக்கிறது கர்நாடக அரசு.
நாடாளுமன்றக் குதிரை பேரமும் பா.ஜ.க-வின் பாசிச சதித்திட்டமும்!
2029 நாடாளுமன்றத் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக, இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களான தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது. அதற்காகத்தான் தன் குதிரை பேர அரசியலை உக்கிரப்படுத்தியுள்ளது, பா.ஜ.க.
புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் - ஜூலை 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்! விலை - அச்சு இதழ் : ரூ 30 + தபால் செலவு
புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - ஜூலை 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்! விலை - அச்சு இதழ் : ரூ 30 + தபால் செலவு
இந்திய-அமெரிக்க அரிய வகைக் கனிம ஒப்பந்தம்: இந்தியாவின் கனிமங்கள் அமெரிக்காவுக்கு காணிக்கை!
இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் அல்ல; மாறாக உலகளாவிய வளங்களை மறுபங்கீடு செய்வதற்கான அமெரிக்க-சீன ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டியின் அங்கமாகும். தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்க உலக மேலாதிக்கம் சரிந்து வரும் சூழலில், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் போர்ச் சங்கிலியில் இந்தியாவை மேலும் நெருக்கமாக பிணைத்து சிக்கவைப்பதற்கான முக்கியமான நடவடிக்கை இதுவாகும்.
அரசுக் கட்டமைப்பை இந்துமுனைவாக்கத்திற்கான ஓர் கருவியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல்
அசாமில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு தற்காலிக தங்குமிட முகாம்களில் அம்மக்களை அடைப்பது, குஜராத், ராஜஸ்தானில் ‘கலவர’ப் பகுதிகள் சட்டம் என ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக பாசிச நடவடிக்கைகள் மூலம் இந்து மக்கள் மத்தியில் இருந்து சிறுபான்மை மக்களைப் பிரித்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மேற்குவங்கம்: பாசிச கும்பலின் புதிய சோதனைச்சாலை!
குஜராத்தின் கலவர-கார்ப்பரேட் பிணைப்பு, உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் பயங்கரவாதம், அசாமில் இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி ஒழிப்பு ஆகிய முந்தைய பாசிச பரிசோதனைகளின் தொகுப்பாக “மேற்குவங்க மாடலை” உருவாக்கியும் செயல்படுத்தியும் வருகிறது.
டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பலின் கியூபா மீதான மனிதாபிமானமற்ற பொருளாதாரப் போர்!
ஈரான் நாட்டின் மீது நேரடிப் போரைத் தொடுத்திருக்கும் அமெரிக்கா, கியூபாவின் மீது எரிபொருள் முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் ஒரு மறைமுகப் பொருளாதாரப் போரைத் தொடுத்துள்ளது.
மோடியின் ‘சிக்கனத்திற்கான’ அறைகூவல்: உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்
கடந்த கால கொரோனா ஊரடங்குப் பேரிடரைப் போலவே, தற்போதைய உலகளாவிய நெருக்கடிச் சூழலையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் கும்பல்கள் தங்களின் கொள்ள லாபத்தை ஈட்டப் போகின்றன என்பதும், அதற்கு பாசிச மோடி அரசு வழிவகை செய்கிறது என்பதும் வெட்டவெளிச்சமாகிறது.
த.வெ.க-வின் முதல் மாத ஆட்சி: கொள்ளையாட்சிக்கான வெள்ளோட்டம்!
பா.ஜ.க. தமிழ்நாட்டில் நேரடியாக ஆட்சிக்கு வர முடியாமல் இருக்கலாம். ஆனால், த.வெ.க. ஆட்சியைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாக நுழையும் வாய்ப்புகள் ஒவ்வொரு நாளும் உருவாக்கப்படுகின்றன.
பற்றி பரவும் போராட்டத் தீ பாசிஸ்டுகளின் கோட்டையை சுட்டெரிக்கட்டும்!
எந்தவித சமரசமுமின்றி பாசிச கும்பலை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் இத்தகைய மக்கள் போராட்டங்களே பாசிச எதிப்பில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றன.
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? நெருக்கடியான சூழலில் ஒரு வழிகாட்டி!
பாசிச எதிர்ப்பில் தேவை நேர்மையான பரிசீலனை! தி.மு.க. தோல்வி - த.வெ.க. வெற்றிக்கான காரணங்கள், பாசிச பா.ஜ.க-வின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து எதார்த்தமாக பரிசீலிப்பதன் மூலமே இந்துராஷ்டிரக் கனவுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் பாசிச பா.ஜ.க-வை தடுத்து நிறுத்த முடியும்.
புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் ஜூன் 2026 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - ஜூன் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்! விலை - அச்சு இதழ் : ரூ 30 + தபால் செலவு













