Monday, March 1, 2021

தமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் ! மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து, பிப்ரவரி 6, தமிழகம் முழுவதும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?

இது கல்லூரி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட மாணவர்களின் நெஞ்சுரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !

ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதேனும் காரணங்களைக் கூறியும் மாணவர்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து வருகிறது தமிழக அரசு. இந்த முறை மாணவர்கள் ஏமாறத் தயாராக இல்லை.

திருவாரூர் : விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் கொலை முயற்சி வழக்கு !

கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அச்சத்தை கொடுப்பது, மக்களை அச்சத்திலே நிரந்தரமாக இருக்க வைப்பது என்பதுதான் அவர்கள் நோக்கம்.

டெல்லி விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

ஜன. 26 அன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் போலிசின் தாக்குதலை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம், சென்னையில் மக்கள் அதிகாரம் பங்கேற்பு!

கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !

இந்த ஊரடங்கில் அரசு பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் வரவில் எத்தகைய நெருக்கடியும் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். அதற்கு மாணவர்களின் தலையை உருட்டுகிறார்கள்.

திருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி !

இந்தப் பேரணிக்கு போலீசு அனுமதி கொடுக்காத சூழலில், தடையை மீறி இந்தப் பேரணி துவங்கியது. உழவர் பேரணியில் கலந்து கொண்ட வந்தவர்களில் பலரையும் தண்டலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியது எடப்பாடி அரசின் போலீசு.

தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !

அரசை ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துச் செய்வதோடு பெரும்பான்மை மக்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு காவு கொடுக்கும் பாசிச மோடி அரசினை வீழ்த்த முடியும்.

டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.

வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சின்னமலை அருகே ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.

தஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் !

கடந்த 13/01/2021 அன்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பி. மாசிலாமணி அவர்களின் தலைமையில் வேளாண் சட்ட நகலெரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள் எதிர்ப்பு !

சென்னை எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை பதிக்கப்படும் ஐ.ஓ.சி எரிவாயு குழாய்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு

விவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.

தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..

“கரையோர மக்களை அப்புறப்படுத்தும் போது 8 கி.மீ தொலைவில்தான் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்” என்ற உயர்நீதிமன்ற உத்தரவு காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது.

அண்மை பதிவுகள்