மக்கள் அதிகாரக் கழகம்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை தனியார்ப் பள்ளி மாணவி அனுபா தற்கொலை! ஆபத்தை முன்னுணர்வோம்!
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் சாலை வசதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!
நாள்: 09.08.2026, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 11.00 மணி | இடம்: கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையம்
சேலம் ஜருகுமலை: அடிப்படை வசதிகளின்றித் துன்பப்படும் மேலூர், கீழூர் மலைக்கிராம மக்கள்
சேலத்திலிருந்து சில கிலோமீட்டர்கள்... ஆனால் வளர்ச்சியிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கிய மலைக் கிராமங்களாக தற்போதும் உள்ளன. இக்கிராமப் பெண்கள் நடந்து சென்று ஒரு கிலோமீட்டர் தூரம் தண்ணீரை தலையில் சுமந்துவர வேண்டியுள்ளது. கிராமத்தில் தெருவிளக்குகள் பல இடங்களில் செயல்படாமல் உள்ளன. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் 10 கி.மீ பயணிக்க வேண்டும்.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்! | கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : விருத்தாச்சலம், பாலக்கரை | நாள் : 12-08-2026 | நேரம் : மாலை 4.00 மணி
பேருற்சாகத்தோடு நடைபெற்று முடிந்த சென்னை மாவட்ட ம.அ.க. பொதுக்குழு கூட்டம்
அதிகப்படியான இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டமாகவும் இக்கூட்டம் இருந்தது. த.வெ.க. அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள இச்சூழலில் சாரியான மாற்றை முன் வைத்துள்ள நாம் அரசியலை இன்னும் தீவிரமாகக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் இப்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நமது அரசியலால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என தோழர்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானல் – பூம்பாறை பகுதியில் சாதியப் படுகொலை | ம.அ.க. கண்டனம்
ராமரின் வீட்டிற்கு வந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ரகு என்பவர் அவர்களது குதிரை தனது நிலத்தில் மேய்ந்ததாகக் கூறி ராமரையும் பிரசாந்தையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, 5 பேர் கொண்ட சாதிவெறி கும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே ராமர் உயிரிழந்தார். உடன் சென்ற பிரசாந்த் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு நீதி வேண்டும்! | பிரச்சாரப் பயணம் – கருத்தரங்கம்
ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலைக்கு
நீதி வேண்டும்!
மக்கள் அதிகாரக் கழகம்
பிரச்சாரப் பயணம் - கருத்தரங்கம்
ஜூலை - ஆகஸ்ட் 2026
கடந்த திமுக ஆட்சியில் மார்ச் 8, 2026 அன்று மானாமதுரையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்...
வந்தேமாதரம் கட்டாய மசோதா: நாட்டின் பன்முகத்தன்மையின் மீதான பாசிச தாக்குதல் | ம.அ.க.
இந்த மசோதாவானது சமூகநீதியைப் பேசுபவர்கள், ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், நாட்டின் பன்முகத்தன்மையை விரும்புபவர்கள் ஆகியோருக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கான முன்னேற்பாடே ஆகும். எனவே, தமிழ்நாடு அரசு ஒருபோதும் இம்மசோதாவை ஏற்கக் கூடாது என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
நீட், இ.டபிள்யு.எஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை பா.ஜ.க. வழியில் ஒடுக்கும் தவெக அரசு! | ம.அ.க. கண்டனம்
‘கொள்கைத் தலைவரின்’ திடலில் போலீசைக் குவித்து தோழர்களின் பரப்புரை பயணத்தைத் தடுத்து, ‘கொள்கை எதிரிக்கு’ சேவை செய்து கொண்டிருக்கும் த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தேனி வருசநாடு: வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட கடமலைக் குண்டு மக்கள்
வருசநாடு முதல் கடமலைக்குண்டு வரை ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் பகுதியில் 4,011 குடும்பங்களை வெளியேற்றுவதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மனோன்மணியம் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு! வந்தே மாதரம் பாடல் திணிப்பு!
தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் மூலம் தமது பாசிசத் திட்டங்களையும், அதன் வழியாக மாநில உரிமைகளை நசுக்கி, அதன் குரல் வளையை நெறித்து தமக்கு அடிமையாக்க முயற்சிக்கிறது, பாசிச கும்பல். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
நாமக்கல்: ‘காப்புக்காடு’ என்ற பெயரில் பறிக்கப்படும் நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்களின் நில உரிமை
கடும் வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பாற்ற ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் பட்டா இல்லாததால் நிலத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை: அரசுப் பள்ளி மாணவர்களை கழிவு நீரை அகற்ற வைத்த அவலம்! | ம.அ.க. கண்டனம்
கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஜூலை 24 அன்று, பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அப்புறப்படுத்த பள்ளி மாணவர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இதை ம.அ.க. கிருஷ்ணகிரி மாவட்டக் குழு கண்டிக்கிறது; அவரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
டெல்லி மாணவர் போராட்டத்தை ஒடுக்கிய மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்
“வேண்டாம் நீட் தேர்வு! வேண்டும் ஜனநாயகம்!, ஒன்றிய அரசே! கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி விலக்கு!” என்ற முழக்கங்களை முன்வைத்து, மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் | நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்
கவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பகுதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கவின் குடும்பத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.















