மக்கள் அதிகாரக் கழகம்
சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு: விஜய் அரசின் கார்ப்பரேட் சேவை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் விஜய், மக்களின் எதிர்ப்பைத் துச்சமாகத் தூக்கியெறிந்துவிட்டு சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது, த.வெ.க. அரசு கார்ப்பரேட் கும்பலுக்காகத் தீவிரமாகச் சேவை செய்யும் அரசுதான் என்பதையும் மக்களுக்கான அரசு இல்லை என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பெயர் மாற்றம்: பார்ப்பனிய சதியை நிறைவேற்றும் முதல்வர் விஜய்!
விஜய் அரசு பொறுப்பு ஏற்றவுடன் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என்று மாற்றியது. இப்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பு இன்றி முதல்வர் விஜய் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பார்ப்பனிய சதிக்கு உடன்படுவதே ஆகும்.
தென்காசி நான்கு வழிச் சாலை: அ.தி.மு.க., தி.மு.க. வழியில் த.வெ.க.!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நில எடுப்பு அறிவிப்புகளை இரத்து செய்து 79,000 மரங்களை வெட்டுவதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிலங்களை தங்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் “நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்ற அமைப்பு சங்க” விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஆதார் ஓ.டி.பி. கட்டாயம்: மக்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு
இதனால், முதியவர்கள், ஏழை-எளிய மக்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் இல்லாதவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சரிபார்ப்புப் பணிக்கு அதிக நேரம் எடுப்பதால் சிகிச்சையளிக்க தாமதமாவதுடன், மருத்துவமனைகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் | தெருமுனைக் கூட்டம்
கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.கூட்டத்தில் உரையாற்றிய தோழர்கள், ஜார்க்கண்ட் பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் ஸ்டேன் சுவாமியை, பீமா கொரேகான் பொய் வழக்கில் சேர்த்து பாசிச மோடி அரசு சிறையிலேயே அரசப் படுகொலை செய்தக் கொடூரத்தைத் தோலுரித்தனர்.
மாநில பல்கலை. தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதி | ம.அ.க. கண்டனம்
தமிழ்நாட்டு நிதியில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தேர்வு செய்யும் குழுவில் யூ.ஜி.சி. உறுப்பினர்களை இணைப்பது என்பது விஜய் அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே மக்கள் அதிகாரக் கழகம் முதல்வர் விஜயை குற்றம் சாட்டுகிறது.
மயிலாடுதுறை திவ்யதர்ஷினி – பார்த்திபன் ஆணவப் படுகொலை | கண்டன ஆர்ப்பாட்டம் – மதுரை
திவ்யதர்ஷினி பார்த்திபனை கொலை செய்த குற்றவாளிகள் மீது
கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி ஜூலை 6 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேக்கே தாட்டு அணை பிரச்சினை: சட்டமன்றத் தீர்மானத்தைத் திரும்பப் பெறுக!
மேக்கே தாட்டு அணை தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழ்நாட்டின் நலன் காக்கும் வகையில் ராசி மணல் என்ற இடத்தில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற பல்லாண்டு கால கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பத்திரிகையாளர் ஆர். ராஜகோபாலின் வாக்குரிமையை பறித்து, பாஸ்போர்ட் வழங்க மறுத்த மோடி அரசு | ம.அ.க. கண்டனம்
ஒரு மூத்த பத்திரிகையாளரான ஆர்.ராஜகோபாலை இந்த அளவிற்கு மோடி அரசு இலக்கு வைத்து முடக்குவதற்கு முக்கிய காரணம் பாசிச பா.ஜ.க. கும்பல் செய்யும் மக்கள் விரோத திட்டங்களையும், அவர்களின் இந்துமதவெறி நடவடிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு சான்றுகளுடன் கட்டுரையாக எழுதி வெளியிட்டார் என்பதுதான்.
என்.எல்.சி-யை தனியாருக்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் தேசத்துரோக செயலை முறியடிப்போம்!
தமிழ்நாட்டின் தமிழ்நாட்டு மக்களின் பெரும் இழப்புகள் ஊடாக உருவான இந்த என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டின் சொத்து. அதனைத் தனியாருக்கு விற்பதற்கு தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இந்த அறிவிப்பு வெளியான உடனே இதற்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்காத தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆணவப் படுகொலைகள் | ம.அ.க. கண்டனம்!
தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் சாதிய ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஆணவப் படுகொலை தடுப்பு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் வலியுறுத்துகிறது.
மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு | ம.அ.க. அறிக்கை
இன்று, தலித் மக்கள் குறைந்தபட்சம் சில உரிமைகளையாவது பெற்றிருக்கின்றனர் என்றால், அவை நக்சல்பாரித் தியாகிகளாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் போராடிய முருகேசன் போன்ற பல தியாகிகளின் போராட்டத்தாலும் கிடைத்த உரிமைகளே அன்றி, தேர்தல் அரசியல் தானாக வழங்கிவிட்ட உரிமைகள் அல்ல.
மாணவர்களிடம் சாதியை வளர்க்கும் த.வெ.க. அரசு: செங்கோட்டையனுக்கு ம.அ.க. கண்டனம்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் புறக்கணித்தே வந்துள்ளனர். அந்த கும்பல்களின் பாசிச திட்டங்களை கொல்லைப்புற வழியாக செயல்படுத்தும் வேலையை தவெக அரசு செய்து வருகிறது.
தனியார்மயமாகும் தூய்மைப் பணி: தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் த.வெ.க. அரசு
ஆட்சிப் பொறுப்பேற்ற 40 நாட்களுக்குள் தமிழ்நாட்டின் மிக முக்கியமான 12 மாநகராட்சிகளின் தூய்மை பணியை மேற்கொள்வதற்கு தனியாரிடம் டெண்டர் கோரி இருப்பது தனியார்மயமாக்கலில் த.வெ.க. அரசு எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது என்பதற்கும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதற்குமான சான்றாகும்.
திருவள்ளூர்: அம்மோனியா வாயு கசிவால் 9 உயிர்கள் பறிபோன கொடூரம்
அதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தும் சட்டவிரோதமான இந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்றும் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட கோரிக்கையையும் சேர்த்து சமூக செயல்பாட்டாளர்கள் மூன்று முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. தொழிலாளர்கள் உயிர் என்பது இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக இருக்கிறது.















