மக்கள் அதிகாரக் கழகம்
வினாத்தாள் கசிவைத் தடுக்க மசோதா தாக்கல்: நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு!
நீட் தேர்வில் நடக்கும் மோசடி முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக மோடி அரசு சொல்கிறது. ஆனால் நீட் தேர்வு என்பதே முறைகேடு தான். ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ கனவைச் சிதைத்து கோசிங் செண்டர் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
சேலம் பனமரத்துப்பட்டி: ஆடு, கோழி பலியிடுவதைத் தடுத்த போலீசு! ம.அ.க. கண்டனம்
கோயில்களில் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த நூற்றுக்கணக்கான போலீசார் மக்களைப் பலவந்தமாகத் தடுத்தும் ஆட்டுக்கறி மற்றும் பூஜை பொருட்களைக் கைப்பற்றியும் 100க்கும் மேற்பட்ட பழங்குடி, பட்டியலின மக்களைக் கைது செய்து பனமரத்துப்பட்டி சமூக கூடத்தில் சிறைப்படுத்தினர்.
ஜூலை 27: கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அறிக்கை | ம.அ.க
குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். சொல்லப் போனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னால்தான் பெரும்பாலும் அவர்கள் தொடர் குற்றவாளிகளாகலோ, கூலிப்படையினராகவோ மாறுகிறார்கள். சிறையில்தான் அந்தந்த சாதி சார்ந்த மற்றும் கூலிப்படை வலைப் பின்னல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் சி.ஜே.பி. போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.
அறவழியில் போராடிய மாணவர்களுக்கு எதிராக துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் வைத்திருக்கும் பாசிச மோடி அரசு வீழ்ந்து போவதற்கான தொடக்கத்தை இப்போராட்டங்கள் அறிவித்து இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
சிவகங்கை: புலியடிதம்மத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளை உதயம்!
மக்கள் அதிகாரக் கழகத்தின் புலியடிதம்மம் பகுதி கிளையாகச் செயல்படத் தொடங்கிய தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கழக இணைச் செயலாளர் தோழர் ரவி உரையாற்றினார். மக்களுடன் களத்தில் நின்று உரிமைக்கான போராட்டத்தை உறுதியாக நடத்துவோம் எனக் கிளையில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள் உறுதியேற்றனர்.
மக்கள் அதிகாரக் கழகத்தின் கிளை கோத்தகிரியில் உதயம்!
மக்களுக்காக போராடுகின்ற மக்கள் அதிகாரக் கழகத்தில் இணைந்து அமைப்பாக போராடும் பொழுதுதான் இப்பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றுணர்ந்து அம்மக்கள் கழகத்தில் இணைய முன்வந்தனர். உளவுத்துறையும் போலீசும் கழகம் குறித்து அவதூறு செய்து மக்களுக்கு பீதியூட்டிய போதும், மக்கள் கழகத்தின் உறுப்பினராக உறுதிமொழி ஏற்று நம்பிக்கையுடன் கட்சியில் இணைந்துள்ளனர்.
ஏலகிரி: அரசின் துணையுடன் முறைகேடாக விற்கப்படும் பழங்குடியினர் நிலங்கள்
நிலங்கள் பெரிய அளவில் (செண்ட் கணக்கில்) பெரும் பணம் படைத்த வெளியாட்களுக்கும், சுற்றுலா நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதால், நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உள்ளூர் மலைவாழ் மக்களாலேயே நிலங்களை வாங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது.
செங்கல்பட்டு: ஊனைமாஞ்சேரி, நல்லம்பாக்கம் ஊராட்சிகளில் இயங்கும் சட்டவிரோத கிரஷர்களைப் பறிமுதல் செய்!
சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் மூடி போடாமலும், தண்ணீர் ஊற்றி அரைக்காமலும் திறந்தவெளியில் சக்கை கற்கள், ஜல்லி கற்கள், எம்சாண்ட் அரைப்பதால் இதிலிருந்து கரும்புகை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை வெளியேறுகிறது. இதனால் ஊனைமாஞ்சேரி, கொளப்பாக்கம், நெடுங்குன்றம் நல்லம்பாக்கம், கீரப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுவாச கோளாறு மற்றும் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி கணையார்: ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகளை இடிக்கும் அரசு
இந்த இடத்தை நீர் நிலை பிடிப்பு என்று சொல்லி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
தென்மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்முறைகள்: தூத்துக்குடி ஆழ்வார்கற்குளம் – முதியவர் மீது சாதிவெறித் தாக்குதல்
செல்லப்பா, என்னை ஏம்பா வெட்டுற எனக் கேட்க, ‘நீ பள்ளப்பயதான’ என அவன் கேட்டுள்ளான். ஏம்பா கேக்குற என செல்லப்பா மறுபடியும் கேட்க, ‘எண்ணிக்கைக்காக உன்னை வெட்டுறோம்’ என்று கூறிவிட்டு, செல்லப்பாவின் நெஞ்சில் உதைத்து கீழே தள்ளியுள்ளான். மற்றொருவன் ‘விடாத வெட்டுல’ என்று கூறியுள்ளான்.
புதிய தலைமுறை ஊடகவியலாளர் விஜயன் மீதான போலீசு அடக்குமுறை – ம.அ.க. கண்டனம்
தனக்கு வேண்டாதவர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு கைது செய்வதில் ஜெயலலிதாவை மிஞ்சக் கூடிய வகையில் விஜய்யின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஊடகவியலாளர் விஜயன் சட்ட விரோதமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு சட்டவிரோதமாக போலீசால் தடுத்து வைக்கப்பட்டதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கும்மிடிப்பூண்டியில் மீண்டும் தொழிற்சாலை விபத்து: ஆலை நிர்வாகமும், அரசுமே குற்றவாளிகள்!
விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தும் நிறுவனத்தை அலட்சியமாகக் கையாண்ட அரசும், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாமலும், குறிப்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்த பின்பும் விதியை மீறி ஆலையை இயக்கிய ஆலை நிர்வாகமுமே முதன்மையான குற்றவாளிகள்.
அரசு விழாக்களில் இசுலாமிய விரோத வந்தே மாதரம் பாடல் கட்டாயம்! மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையை முறியடிப்போம்!
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மோடி அரசு இப்பொழுது வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஆக்குவதுடன் அப்பாடலைப் பாட மறுப்போருக்கு எதிராக வந்தே மாதரம் ‘அவமதிப்பு’ என சட்டத் திருத்தம் மேற்கொண்டு அதன் மூலம் சிறுபான்மை மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கவும் ஒழிக்கவும் சதி செய்து வருகிறது.
மீண்டும் பரவியது டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்! கோடாலி கிராம மாணவர்கள் போராட்டம் பரவட்டும்!
கோடாலி டாஸ்மாக் கடை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே மக்கள் அதிகாரக் கழகம் கருதுகிறது. எனினும் இதுவரை போராடிய மக்களின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காத வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
சேலம்: கெங்கவல்லி ஒன்றியம் ஒதியத்தூரில் அம்பேத்கர் சிலை திறப்பதைத் தடுக்கும் சாதிவெறியர்கள்
சாதிவெறியோடு சிலையை மூட வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுத்துபவர்களைக் கைது செய்து, சிலையைத் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் சாதிவெறியர்களின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அம்பேத்கர் சிலையை மீண்டும் தகரம் வைத்து அடைத்து விட்டது. அதேசமயம், அம்பேத்கர் சிலையைத் திறக்க வேண்டும் என்று போராடிய தலித் மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல் சிலரைக் கைதும் செய்துள்ளனர்.















