25.06.2026

வைகை ஆரத்தி என்ற பெயரில்
மதுரை மக்களை மத அடிப்படையில் பிளக்க முயலும்
அகில பாரதீய சன்யாசிகள் சங்கத்தை தடை செய்!
மதுரையை தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவி!

பத்திரிக்கைச் செய்தி

டிப்பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 3 அன்று வைகை ஆரத்தி என்ற பெயரில் மக்களை பிளவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது சங் பரிவாரக் கும்பல். ஆடிப் பெருக்கு என்பது தமிழர் பண்பாடு. ஆடி மாதம் 18 ஆம் நாள் அன்று ஆற்றில் பெருகி வரும் புது வெள்ளத்தை வரவேற்று நீர் வளமும் நில வளமும் பெருக கொண்டாடும் ஒரு நிகழ்வு.

அத்தகைய தமிழர் பண்பாட்டை கைப்பற்றி, வேத பண்பாட்டை திணிப்பது தான் இந்தக் கும்பலின் நோக்கம்.

நீர் வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது, விவசாயத்தையும் விவசாயிகளையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு பலி கொடுக்க சிறப்புச் சட்டங்கள் கொண்டு வருவது என இந்திய விவசாயத்தையே அழித்து வரும் இந்தக் கும்பல் ஆடிப் பெருக்கை கொண்டாட வருவது எதற்காக? இந்து முனைவாக்கமும் மக்களை மதரீதியில் பிளப்பதும் தான் இக்கும்பலின் நோக்கம்.

கீழடி நாகரீகத்தை மறைப்பது, கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை ‘தனது விருப்பப்படி’ மாற்றி எழுத வலியுறுத்துவது, தமிழ்க் கடவுள் முருகனை சுப்பிரமணி ஆக்குவது, ஆடு கோழி பலியிட்டு வழிபடும் தமிழர் வழிபாட்டு முறையை தடுத்து நிறுத்துவது என தொடர்ந்து தமிழர் பண்பாட்டை அழித்து சமஸ்கிருத வேத பண்பாட்டை திணிப்பது தான் சங் பரிவாரங்களின் வேலையாக உள்ளது.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது தான் தமிழர் பண்பாடு. மக்களை சாதி, மத அடிப்படையில் பிரித்து, கலவரங்களைத் தூண்டி அந்த நெருப்பில் குளிர் காய்வது, நாட்டை அம்பானி-அதானி கும்பலிடமும் அமெரிக்கா முதலிய வல்லரசுகளிடம் அடகு வைப்பதும் தான் சங் பரிவாரங்களின் திட்டம்.

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் சித்திரைத் திருவிழா என்பது அனைத்து பிரிவு மக்களும் பங்கேற்கும் ஒரு சமத்துவத் திருவிழா. அத்தகைய மத நல்லிணக்க மரபை சிதைத்து சமஸ்கிருத வேத நாகரீகத்தை புகுத்தி, மக்களை பிளக்க வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் சதிகளை முறியடிப்போம்!

மதுரையை தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்க போராடுவோம்!


இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
9791653200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க