Thursday, September 19, 2024

சொந்த மக்களை அகதிகளாக்கும் “கார்ப்பரேட் திராவிட மாடல்” அரசு

பரந்தூர் மக்களின் இம்முடிவானது, ‘திராவிட மாடல்’, ‘சமூக நீதி அரசு’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் உண்மை முகத்தை திரைக்கிழித்துக் காட்டுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் படுகொலைகள்: யார் குற்றவாளி?

தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச்சாராய மரணம் என்பது இக்கும்பல் கூட்டுச்சேர்ந்து நடத்திய பச்சை படுகொலை என்பதே உண்மை.

கள்ளச்சாராய மரணத்திற்கு ₹10 இலட்சம் கொடுப்பதை எப்படி பார்ப்பது?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், “குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு எதற்கு பத்து லட்சம். பத்து லட்சம் கொடுத்தவுடனே குணமாகி வீட்டுக்கு சென்றவனெல்லாம் மிச்ச சரக்கைக் குடித்துவிட்டு செத்து போகிறார்கள். மருத்துவமனையில்...

தமிழ்நாடு: பாசிசக் கும்பலை வீழ்த்திய பார்ப்பனிய எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளால், பாசிசக் கும்பலுக்கு தமிழ்நாடு சிம்மசொப்பனமாக திகழ்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.

கல்வித்துறையை விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! தீர்வு என்ன?

ஒன்றியத்தில் பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்தாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கல்வியிலும், கல்விசார் நிறுவனங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தனியார்மயத்தின் உச்சமாகிய கார்ப்பரேட்மயம்; மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் மூர்க்கமான காவிமயம் என இரண்டும் ஒருசேர கல்வியில் திணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை வெள்ளம்: யார்தான் குற்றவாளி?

தி.மு.க. அரசின் கார்ப்பரேட் நல சேவைகளும் அலட்சியமும்தான் இப்பெருவெள்ளத்தின்போது மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். எனவே இப்பேரிடருக்கும் தி.மு.க-விற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பேசுவது மக்கள் விரோதமானதாகும்.

தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பு: தோழர்களின் கள அனுபவம்

பல வீடுகளில் சீலிங் ஃபேன் அடித்துக்கொண்டு செல்லும் அளவிற்கு வீடு முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் பயணிகளுடன் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. வெள்ளத்திற்கு நடுவே நிறுத்தப்பட்ட ரயில்களுக்குள்ளிருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துகொண்டு ஒவ்வொரு நொடியையும் கடந்தனர்.

எண்ணெய் கழிவு: நிர்கதியாக்கப்பட்ட எண்ணூர் மக்கள்

வடசென்னையை பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே ‘வளர்ச்சி’ திட்டங்கள் என்ற பெயரில் பாரத்மாலா, சாகர்மாலா போன்ற நாசகர திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

விரட்டியடிக்கப்படும் அனகாபுத்தூர் மக்கள்: தி.மு.க. அரசின் அராஜகம்!

தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகள் தனியார் முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.எம், மதுரவாயல் ஏ.சி.எஸ், சாஸ்த்ரா போன்ற பல பல்கலைக்கழகங்களை நாம் சான்றாகக் கூற முடியும். ஆனால், சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோர உழைக்கும் மக்களை மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு.

விவசாயிகள் மீது குண்டாஸ்: தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!

மக்கள் விரோத கார்ப்பரேட் நலத் திட்டங்களை நேரடியாகவும் நயவஞ்சகமாகவும் அமல்படுத்தும் தி.மு.க அரசு, போராடும் விவசாயிகளையும் மக்களையும் வன்முறையாளர்களாக சித்தரித்து மூர்க்கதனமாக ஒடுக்கிவருகிறது. இது விவசாய மக்களுக்கு தி.மு.க இழைத்துள்ள பச்சை துரோகம்.

இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி: பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!

"பள்ளர்", "ஒடுக்கப்பட்ட மக்கள்", "தலித்" என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; "இந்துக்களாக இணைய வேண்டும்" என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!

மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சூழல் தமிழ்நாட்டில் மிகப் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமிக்க நடவடிக்கையாகும்.

சென்னிமலை, அச்சங்குட்டம் மதக் கலவர முயற்சிகள்: தமிழ்நாடே, எச்சரிக்கை!

சென்னிமலை மற்றும் அச்சங்குட்டம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளானது பார்ப்பனிய எதிர்ப்பு மரபு கொண்ட தமிழ்நாட்டிற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகும்.

“வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!

”வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” என்ற இயக்கத்தின் ஊடாக எமது தோழர்கள் மக்கள் மத்தியிலும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளிடமிருந்தும் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.

பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதம்

தி.மு.க.வின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தவே செய்யும். இந்த வாய்ப்பை பா.ஜ.க. கும்பலும், தி.மு.க., பா.ஜ.க. இரண்டையும் எதிர்ப்பதாக சவடால் அடித்துத் திரியும், பா.ஜ.க.யின் பினாமிகளான எடப்பாடி, சீமான் கும்பல்களும்தான் அறுவடை செய்துகொள்ளும்.

அண்மை பதிவுகள்