கமேனி படுகொலை: அமெரிக்க – இஸ்ரேலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்!

0

ரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்று பொய்யாகக் குற்றம் சாட்டி ஏகாதிபத்திய போர்வெறி பிடித்த அமெரிக்காவும் பயங்கரவாத இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரைத் திட்டமிட்டு படுகொலைச் செய்துள்ளன.

கமேனி படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியாகி ஈரான் உள்ளிட்டு உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமேனியின் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தான், ஈராக், லெபனான், துருக்கி, ஏமன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள மக்கள் ரத்த வெறிபிடித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவும், ஈரான் மக்களுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

குறிப்பாக, பாகிஸ்தான் கராச்சியில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்குள் நுழைந்த மக்கள் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். சில அறைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா – இஸ்ரேலின் போர்வெறிக்கு எதிராக உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

பாகிஸ்தான்

கராச்சியில் அமெரிக்க துணைத் தூதரகத்தைத் தாக்கிய மக்கள்
பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டவர்களின் உடல்களைக் கண்டு கதறி அழும் மக்கள்

***

ஈராக்:

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி கையில் ஈரானிய கொடியுடன் கமேனியின் புகைப்படங்களை ஏந்தி மக்கள் பேரணியாகச் சென்றனர். அவர்கள் மீது  பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கொண்டு  தாக்குதல் நடத்தியுள்ளனர்.

***

ஈரான்:

ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நினைவு விழாவை நடத்துவதற்காக தெஹ்ரானில் உள்ள வலியாசர் தெருவில் கூடும் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி, ஈரானியக் கொடிகளை ஏந்திச் செல்கின்றனர்.

***

துருக்கி:

துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு வெளியே நடைபெற்ற பேரணியில் போர்வெறிப்பபிடித்த டிரம்பின் உருவப்படம் எரிக்கப்படும் காட்சி

***

ஏமன்:

ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து ஏமனில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

***

இந்தியா:

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீர்
ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீர்
ஜந்தர் மந்தர், டெல்லி
ஹைதராபாத், தெலுங்கானா
சென்னை, தமிழ்நாடு


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க