27.07.2026

சேலம் பனமரத்துப்பட்டி: ஆடு, கோழி பலியிடுவதைத் தடுத்த போலீசு!
ம.அ.க. கண்டனம்

பத்திரிகைச் செய்தி

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம் அத்திப்பட்டி, சூரியூர் கிராமத்தில் பழங்குடி, பட்டியல் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் 1,300 ஏக்கருக்கு மேல் வேளாண் நிலங்கள் உள்ளன.

இந்நிலங்கள், இம்மக்களின் முன்னோர்கள் வாழ்ந்த நூற்றாண்டு காலம் பயிரிட்ட வேளாண் நிலங்கள் ஆகும்.

பழங்குடி, பட்டியலின மக்கள் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த பூமியில் உள்ள கோவில்களில் ஆடுகள், கோழிகள் பலியிட்டு படையில் இட்டு வழிபடுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் மரபாகும்.

இந்நிலையில் ஆடி 1 அன்று (17/07/2026) தங்களின் முன்னோர்களுக்குக் கோயில்களில் ஆடு, கோழி பலியிட்டு படையல் இட்டு வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த நூற்றுக்கணக்கான போலீசார் மக்களைப் பலவந்தமாகத் தடுத்தும் ஆட்டுக்கறி மற்றும் பூஜை பொருட்களைக் கைப்பற்றியும் 100க்கும் மேற்பட்ட பழங்குடி, பட்டியலின மக்களைக் கைது செய்து பனமரத்துப்பட்டி சமூக கூடத்தில் சிறைப்படுத்தினர்.

மக்களின் வழிபாட்டு உரிமையைத் தடுப்பதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சேலம் மாவட்ட நிர்வாகமே! போலீசு துறையே!

  • பழங்குடி பட்டியல் இன மக்கள் வாழ்ந்து, பயிரிட்ட நிலங்களின் மீதான உரிமையைப் பறிக்காதே!
  • பழங்குடி பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையைத் தடை செய்யாதே!


இவண்,
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க