சிவகங்கை: புலியடிதம்மத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளை உதயம்!

மக்கள் அதிகாரக் கழகத்தின் புலியடிதம்மம் பகுதி கிளையாகச் செயல்படத் தொடங்கிய தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கழக இணைச் செயலாளர் தோழர் ரவி உரையாற்றினார். மக்களுடன் களத்தில் நின்று உரிமைக்கான போராட்டத்தை உறுதியாக நடத்துவோம் எனக் கிளையில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள் உறுதியேற்றனர்.

20.07.2026

சிவகங்கை மாவட்டம்: புலியடிதம்மத்தில் கழகத்தின் புதிய கிளை உதயம்!

பத்திரிகைச் செய்தி

ன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டம், புலியடிதம்மத்தில் ஜூலை 12-ஆம் தேதி மக்கள் அதிகாரக் கழகத்தின் புதிய கிளை உதயமானது.

புலியடிதம்மம் பகுதியைச் சேர்ந்த தோழர் தனசேகரன் உள்ளிட்ட தோழர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் செயல்பாடுகளைக் கொண்ட தோழர்கள். எமது அமைப்பு பிளவிற்குப் பிறகு நவீன கலைப்புவாதிகளுடன் (மக்கள் அதிகாரம்) இணைந்து செயல்பட்டவர்கள். அப்போது அமைப்பு பிரச்சினையை மட்டும் முன்வைத்து பேசியதால் அக்கும்பல் முன்வைத்த கருத்துக்களைச் சரி என்று கருதி அவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.

ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அவ்வமைப்பினர் தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்தது குறித்து அணிகளைக் கூட்டி விவாதிக்கவில்லை. நடைமுறையில் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தி.மு.க-விற்கு ஆதரவு கொடுத்து இயக்கம் எடுப்பதை மட்டுமே செய்தனர். இதைப் பற்றிக் கேட்கும்போது, பாசிசம் ஏறித் தாக்குகிறது, அதனால் அந்தளவிற்கு அமைப்பை நடத்தினால் போதும் என்ற நிலைமைக்கு அமைப்புப் பணிகளைச் சுருக்கிவிட்டனர்.

அரசியல் பிரச்சாரங்களின் போது கூடத் தி.மு.க-வினரை சார்ந்து இருப்பது என்ற நிலைக்குச் சென்றுவிட்டனர். கம்யூனிச அமைப்பு என்று சொல்லிக் கொண்டாலும், தி.மு.க-வின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்துப் பேச முடியாத நிலை உருவானதுடன், அவ்வமைப்பில் மக்கள் விரோதச் செயல்பாடுகள் தலைதூக்கின. இவை குறித்தும் முறையான விசாரணைகள் ஏதும் மேற்கொள்ளவில்லை.

ஆகவே, இவர்களுடன் பயணித்த நான்காண்டுகளில் இத்தோழர்கள் மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்படும் நிலைமை ஏற்பட்டது. இதற்கு எதிரான போராட்டத்தில் இத்தோழர்களை இறுதிவரை ஜனநாயகமாக அணுகாமல், அதிகாரத்துவத்துடன் நடந்துகொண்டனர்.

இதற்குப் பிறகு, நவீன அராஜகவாதக் கும்பலுடன் (புரட்சிகர மக்கள் அதிகாரம்) இணைந்து பயணித்தாலும் அவர்களுடைய நடவடிக்கைகளும் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாத, நடப்பு அரசியல் பிரச்சினைகள் எதிலும் தலையிடாத திட்டமில்லாத சம்பிரதாய நடவடிக்கையாகவே இருந்தது. இதனால், அவ்வமைப்பின் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டனர்.

இந்நிலையில்தான், கடந்த மே – ஜூன் மாதங்களில் மக்கள் அதிகாரக் கழகத்தின் செயல்பாடுகளை நெருக்கமாகக் கவனித்து வந்த அனுபவங்களின் தொடர்ச்சியாகத் தோழர் தனசேகரனும் அப்பகுதி தோழர்களும் மக்கள் அதிகாரக் கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, ஜூலை மாதம் 12-ஆம் தேதி காலை 9 மணியளவில், உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கழக இணைச் செயலாளர் தோழர் ரவி முன்னிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், அத்தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் அதிகாரக் கழகத்தில் கிளையாகச் செயல்படுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

கிளைச் செயலாளராகத் தோழர் தனசேகரனும், பொருளாளராகத் தோழர் நாகராஜும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தவகையில், மக்கள் அதிகாரக் கழகத்தின் புலியடிதம்மம் பகுதி கிளையாகச் செயல்படத் தொடங்கிய தோழர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கழக இணைச் செயலாளர் தோழர் ரவி உரையாற்றினார்.

மக்களுடன் களத்தில் நின்று உரிமைக்கான போராட்டத்தை உறுதியாக நடத்துவோம் எனக் கிளையில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள் உறுதியேற்றனர்.

இன்றைய அரசியல் நிலைமை குறித்தும் பகுதி பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டம் மிகவும் உற்சாகமாக நடந்து முடிந்தது.


தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
புலியடிதம்மம் கிளை,
சிவகங்கை மாவட்டம்.
94422 69220

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க