13.07.2026

அரசு விழாக்களில் இசுலாமிய விரோத வந்தே மாதரம் பாடல் கட்டாயம்!

‎பாசிச மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையை எதிர்த்து முறியடிப்போம்!
கள்ள மவுனம் காக்கும் விஜய் அரசைத் தோலுரிப்போம்!

பத்திரிகைச் செய்தி

ரசு விழாக்களில் தேசிய கீதத்திற்கு முன்பாக கட்டாயமாக வந்தே மாதரம் பாடலை துல்லியமாகவும் முழுமையாகவும் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்குவதற்கான அவசரச் சட்டம் விரைவில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

‎வந்தே மாதரம் பாடல் என்பது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான, இந்த நாட்டுக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியதாகும். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் எழுதிய நாடகத்தில் வந்தே மாதரம் என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

‎இந்து பெரும்பான்மை வாதத்தையும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கருத்துகளையும் உள்ளடக்கிய அந்தப் பாடல் இந்த நாட்டுக்கு எதிரானதாகும். வந்தே மாதரம் பாடல் இதுவரை தமிழ்நாட்டின் மக்கள் வணங்கக்கூடிய பாடலாக எப்போதும் இருந்ததில்லை.

‎அர்லேகர் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பு ஏற்றது முதல் தொடர்ந்து வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தற்பொழுது உள்ள முதல்வர் விஜய் இதுவரை எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதே கண்டிக்கத்தக்கதாகும். மாநிலப்பண் முதலில் பாடப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல; மாநிலத்துக்கு, ஒரு தேசிய இனத்திற்கு எதிரான அல்லது ஒரு மதத்துக்கு எதிரான எந்த பாடலும் இசைக்கப்படக் கூடாது என்பதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.

‎இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மோடி அரசு இப்பொழுது வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஆக்குவதுடன் அப்பாடலைப் பாட மறுப்போருக்கு எதிராக வந்தே மாதரம் ‘அவமதிப்பு’ என சட்டத் திருத்தம் மேற்கொண்டு அதன் மூலம் சிறுபான்மை மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கவும் ஒழிக்கவும் சதி செய்து வருகிறது.

வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டால் அது தமிழ்நாட்டின் தமிழ் மரபின் வரலாற்றுக்கு எதிரானதாகும்.

‎ஆகவே ஒன்றிய அரசு உத்தரவிட்டாலும் கூட அதை ஏற்க மறுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் எந்த அரசு விழாக்களிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படாது என்றும் வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் உறுதி அளிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க