
04.07.2026
மூத்த பத்திரிகையாளர் ஆர். ராஜகோபாலின் வாக்குரிமையைப் பறித்ததோடு,
பாஸ்போர்ட் வழங்க மறுக்கும் ஒன்றிய பாசிச மோடி அரசை
மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
பத்திரிகைச் செய்தி
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல ஆங்கில நாளிதழான “தி டெலிகிராப்”-இன் முன்னாள் ஆசிரியராகச் செயல்பட்டு வந்தவர் மூத்த பத்திரிகையாளர் ஆசிரியர் ஆர்.ராஜகோபால்.
சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையினால் (SIR), அம்மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 27 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்தனர். அதில் இவரது பெயரும் வாக்காளர் பட்டியலிலிருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு கோரிய அனைத்து ஆவணங்களையும் அவர் முறையாகச் சமர்ப்பித்த போதிலும், ராஜகோபாலுடைய பெயர் நீக்கப்பட்டதற்கான சரியான காரணம் இன்றுவரை அவருக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் இந்த பிரச்சனை தொடர்பான வழக்குத் தொடுக்கப்பட்டு மேல்முறையீடு செய்து, தற்போது அது உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ஒன்றில் நிலுவையில் இருக்கும் போதே, வாக்காளர் பட்டியலில் ராஜகோபாலின் பெயர் இல்லாததைக் காரணம் காட்டி, அவருடைய பாஸ்போர்ட் ஆவணத்தை புதுப்பிக்க மறுத்துள்ளது ஒன்றிய பாசிச மோடி அரசு.
மேலும் கடந்த 2026 மார்ச் 19-ஆம் தேதியே பயோமெட்ரிக் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பின்பும், போலீஸ் சரிபார்ப்பு (Police Verification) என்பது திட்டமிட்டே நிலுவையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
ஒரு மூத்த பத்திரிகையாளரான ஆர்.ராஜகோபாலை இந்த அளவிற்கு மோடி அரசு இலக்கு வைத்து முடக்குவதற்கு முக்கிய காரணம் பாசிச பா.ஜ.க. கும்பல் செய்யும் மக்கள் விரோத திட்டங்களையும், அவர்களின் இந்துமதவெறி நடவடிக்கைகளையும் தொடர்ந்து பல்வேறு சான்றுகளுடன் கட்டுரையாக எழுதி வெளியிட்டார் என்பதுதான். இப்படி ஒன்றிய பாசிச மோடி அரசின் கொடுமைகளை மக்கள் விரோத செயல்பாடுகளை வெளிக்கொண்டு வர முயல்பவர்களை பல்வேறு வகைகளில் அடக்கி ஒடுக்க நினைக்கிறது பா.ஜ.க. கும்பல்.
தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளை பொது வெளியில் கொண்டு சேர்க்கும் இது போன்ற ஆசிரியர்களை, ஊடகவியலாளர்களை முடக்குவதும் அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த பாசிச நடவடிக்கையை அனைத்து ஊடக ஆசிரியர்களும், அரசியல் கட்சியினரும், இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிப்பதோடு இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
(குறிப்பு: கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ராஜகோபாலுக்கு ஜூலை 4 அன்று பிற்பகலில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





