05.07.2026

மேக்கே தாட்டு அணை பிரச்சினை: சட்டமன்றத் தீர்மானத்தைத் திரும்பப் பெறுக!

பத்திரிகைச் செய்தி

காவிரியில் மேக்கே தாட்டு என்ற இடத்தில் கர்நாடகா அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்குப் பிறகு கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அணை கட்டுவதைத் தடுக்கும் உரிமை தமிழ்நாட்டுக்கு இல்லை என்று திமிர்த்தனமாக தெரிவித்தார்.

‎இந்த நிலையில்தான் அண்மையில் கூடிய தமிழ்நாடு சட்டமன்றத்தில், மேக்கே தாட்டு இடத்தில் அணை கட்டுவது தொடர்பாகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிந்த திருத்தத்தை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தீர்மானமாக நிறைவேற்றினார்.

‎அதன்படி அந்தத் தீர்மானத்தில், மேக்கே தாட்டு அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நதி நீரில் தமிழ்நாடு அரசைக் கேட்காமல் கர்நாடகா அரசு எந்த அணையையும் கட்டக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் உரிமை. அதை விட்டுக் கொடுக்கின்ற வகையில் மேக்கே தாட்டு அணை கட்டலாமா வேண்டாமா என்று ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று நாம் கேட்பது, தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பாக நடுவர் மன்றத்துக்குக் கோரிக்கை விடுப்பதற்கு ஒப்பானதாகும்.

‎பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமையைத் தவறான ஒரு தீர்மானத்தின் வாயிலாக நாமே விட்டுக் கொடுப்பது என்பது பேரழிவாகும்.

‎ஆகவே, மேக்கே தாட்டு அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் மீதான உரிமையை ஒழித்துக் கட்டுவதாகும். ஆகவே மேக்கே தாட்டு அணை தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழ்நாட்டின் நலன் காக்கும் வகையில் ராசி மணல் என்ற இடத்தில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற பல்லாண்டு கால கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க