“வேண்டாம் நீட் தேர்வு! வேண்டும் ஜனநாயகம்!, ஒன்றிய அரசே! கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி விலக்கு!” என்ற முழக்கங்களை முன்வைத்து, மக்கள் அதிகாரக் கழகம் சார்பில், கழக வழக்கறிஞர் தோழர் கின்ஷன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் 17.07.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி துணை மண்டலச் செயலாளர் தோழர் வழக்கறிஞர் அர்ஜுன், மே 17 இயக்கம் தோழர் அருண், வழக்கறிஞர் திரவியம், சமூக செயற்பாட்டாளர் தோழர் கட்டபொம்மு, மக்கள் அதிகாரக் கழக மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு, தோழர் விஜய் மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டனர். மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா சிறப்புரையாற்றினார்.
18.07.2026 அன்று நெல்லை மேலப்பாளையத்தில் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமையேற்று நடத்தினார். தோழர் கின்ஷன் சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் தோழர் சந்துரு கலந்து கொண்டார்.
தி.மு.க. நகர துணைச் செயலாளர் தோழர் அப்துல் கையூம், வி.சி.க. நெல்லை மண்டலச் செயலாளர் (பொது) தோழர் முத்து வளவன், திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் தோழர் கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.
மேற்கூறிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஷஹீது Dr பழனி பாபா பாசறை தோழர் அப்துல் ஹமீது, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு பாளை செய்யது, தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணி தோழர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தர்மேந்திர பிரதானே பதவி விலகு என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடியில் முதல் நாள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மறுநாள் நெல்லையில் போராட்டம் தொடங்கப்பட்ட போது மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தின் விளைவாக தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இது மாணவர்கள் போராட்டத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதை அடுத்து நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் வழியாக இந்த கருத்துகள் ஆழமாக மக்கள் மத்தியில் பதிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு அப்பகுதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்திற்கும், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் பகுதி வாழ் மக்கள் ஆதரவளித்தனர்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











