Friday, July 3, 2020
முகப்பு வாழ்க்கை அனுபவம் கொலை வெறி சூழ ஐங்கரன் பவனி - ஒரு அனுபவம்

கொலை வெறி சூழ ஐங்கரன் பவனி – ஒரு அனுபவம்

-

காவி ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் அவர்கள் நிறைந்திருந்தனர். அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. தலையில் காவி ரிப்பன். நெற்றியில் நீட்டித்து வைக்கப்பட்ட செந்தூர அல்லது குங்குமப் பொட்டு கழுத்தில் காவி துண்டு.. கண்கள் சிவக்க உடலெல்லாம் வேர்த்து கொட்டியபடி டெம்போவிலும் மினிலாரிகளிலும் பயணிக்கிற இவர்களை கடந்த சில ஆண்டுகளாக யானை முகத்து விநாயகரோடு தரிசிக்க முடிகிறது.

பிள்ளையாரோடு அமர்ந்திருக்கிற இவர்களுக்கு கடவுள் பக்தியெல்லாம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அந்த ஆட்டோக்களிலேயே புகை பிடிப்பதும், ஒரு கட்டிங் போடுவதுமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு MOB MENTALITY யோடு வெறித்தனமாக இயங்குகிற இளைஞர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

pillayarஒவ்வொரு ஆண்டும் கணபதியை கடலில் கரைக்கிற இந்த சடங்கினை தங்களுடைய ஜபர்தஸ்த்தை ஏரியாவில் பலத்தினை காட்டுகிற ஒரு நிகழ்வாக ஆண்டு தோறும் நடத்துகிறார்கள். இவற்றை நடத்துவதில் ஆர்எஸ்எஸ் இந்து முண்ணனி மாதிரியான இந்துமத முன்னேற்ற அமைப்புகளின் ஆதரவும் பண உதவிகளும் கணிசமாக இருக்கின்றன. அது போதாதென்று எந்த பகுதியில் பிள்ளையார் உட்காரப் போகிறாரோ அப்பகுதி சில்லரை வியாபாரிகளிடம் உருட்டி மிரட்டியும் வசூல் வேட்டை நடத்துவதில் தவறுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஏரியாவில் தங்கள் பலமென்ன என்பதை காட்டுவதற்கு விநாயகர் ஒருகருவியாக இருக்கிறார். விரும்பியோ விரும்பாமலோ அவரும் இந்த காவி நாயகர்களோடு ஒற்றை தந்தத்துடன் பயணிக்கிறார். கடல் வரை பயணித்து கரைந்தும் போகிறார்.

இந்தப்பயணம் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அவர்களுக்கல்ல நமக்கு! ஞாயிறன்று காசி திரையரங்க சிக்னல் அருகே குட்டியானை என்று அழைக்கப்படும் டெம்போ ஆட்டோவில் ஒரு பெரிய பிள்ளையாரும் சில பொறுக்கி பக்தர்களும் கடற்கரைக்கு பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஏய் ஏய்.. ஆய் ஊய் என்கிற சப்தங்கள் ஒலிக்க அவர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். பிள்ளையார் ஆட்டோவின் மூலையில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்த ஒரு குட்டிப்பெண் பதினைந்து வயது இருக்கலாம். அவள் அந்த டெம்போவை ஒட்டி தன் ஸ்கூட்டியில் முந்தி செல்ல எத்தனிக்கிறாள்… ஆட்டோவில் இருந்த வாலிபர்கள் முதலில் விசிலடித்தனர்… பிறகு விநாயகர் மீதிருந்து பூக்களை கிள்ளி எரிந்தனர். அதற்கு பிறகு அதில் ஒரு பொறுக்கி பக்தன் தண்ணீர் பாக்கெட்டை எடுத்து அந்தப் பெண்ணின் மேல் பீய்ச்சி அடிக்கத் தொடங்கினான். அதோடு மோசமான வார்த்தைகளால் அந்த பெண்ணை பார்த்து கூறவும் ஆரம்பித்தான்.

அந்தப் பெண் கோபத்தில் ஏதோ பதிலுக்கு ஏதோ திட்ட ஆரம்பிக்க.. ஆட்டோவை அந்த பெண் மேல் ஏற்றுவதைப் போல ஓடித்து ஓட்டுகிறார் ஆட்டோ டிரைவர். உதயம் தியேட்டர் அருகே நூறடி ரோடு திரும்புகிற இடத்தில் அந்த பெண்ணை இடிப்பது போல ஒடிக்க.. ஸ்கூட்டி பெண் நிலைதடுமாறி அருகேயிருந்த தீயணைப்பு நிலையம் அருகிலிருக்கிற பஸ் ஸ்டான்ட் அருகே தடுமாறி விழுந்தாள். பெரிய காயமில்லை.. விழுந்ததும் அருகில் பேருந்துக்கு காத்திருந்த பயணிகள் உதவ ஆரம்பித்து விட்டனர்.

ஆட்டோ கொஞ்சதூரம் போய்.. ஸ்லோவானது.. அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்த.. வண்டி அந்த திருப்பத்தில் காத்திருந்த பிள்ளையார் வண்டிகளின் நீண்ட வரிசையில் இணைந்தது.

இவர்களை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த நான் அந்த நீண்ட வரிசையை பார்த்து அதிர்ந்துபோனேன். அங்கே இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பக்தர்களும் கூடவே பிள்ளையாரும் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார். காவி எங்கும் வியாபித்திருந்தது. எல்லோர் கண்களும் சிவந்திருந்தது. அவர்களைப் பார்க்க ஒரு நீண்ட சண்டைக்காக காத்திருக்கிறவர்களைப் போல இருந்தது. மிகச் சிறிய தூண்டுதலிலும் கொலையோ கற்பழிப்பையோ கூட அரங்கேற்றுகிற ஆக்ரோஷத்துடன் இருந்தனர். காவல்துறை நண்பர்களும் கூட இக்கூட்டத்தினரிடம் அடக்கியே வாசிக்கின்றனர்.

இந்த காவி ரிப்பன் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. அதோடு இதில் இணைவோரில் கணிசமானவர்கள் இருபது வயதுக்கும் குறைவான இளைஞர்கள் என்பதும் இவர்கள் எல்லோருமே மூக்கு முட்ட குடிப்பவர்களாக சின்ன தூண்டுதலிலும் ஆகப்பெரிய வன்முறையை நிகழ்த்தி விடுகிறவர்களாக இருப்பதும் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வலுப்படுத்துகிறது.

நேற்று சந்தித்த அந்த டெம்போஆட்டோ இளைஞர்களின் முகத்தில் கண்களில் தெரிந்த வன்முறையை, அந்த பெண்ணின் மீது வன்மத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து பகிர முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்த அந்த இளைஞனின் முகம் தூக்கத்திலும் பயமுறுத்தக்கூடியது… சாகும்வரை மறக்கவே முடியாதது.

நன்றி : அதிஷா

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. “ நவீன நவகாளிகள் “

  இங்கு நடக்கும் விநாயகர் சதுர்த்திவிழா-வை பார்க்கும் பொழுது பெரியர் சொன்னது-தான் நாபகம் வருது….

  “நம் நாட்டில் நவகாளிகள் தோன்றுவதில் அச்சரியைப்படுவதற்கில்லை. நம்மை அவ்வளவு நாசப்படுத்தவே வடநாட்டு ஏகாதிபத்தியம் தயார் செய்து கொண்டிருக்கிறது. சுயரஜயம் என்ற பேரால் திராவிடத்திலும் நவகாளிகள் தோன்றினால் அதற்கு நாம் அல்ல பொருப்பு இந்நாடு ஆரீயர்கள்தான் என்பதை எதிர்காலம் கூரும்” (விடுதலை 27-07-1947) .

  நவகாளிகள் மாற்று வடிவம் இந்த விநாயகர்

 2. You are scolding and commenting on Hindu and Hindu Leaders but do you know how Christians are converting Hindu’s to their religion. How they are doing all these conversion like terrorists. Come on man, Hindu’s are the only religion who will allow you to scold or comment. If you do the same to other religion then see what will happens and you don’t have guts to do that. Are you trying to prove that except Hindu’s every other religion is good. You are trying to say after 2002 riots in Gujarat there is no other riots happened in India.

  • Hello Bruce,

   In this article where did you find that the writer is praising other religion and trying to prove that Hindu is bad. He points out that this new culture is dangerous to public. Can’t these people do this in a calm manner without disturbing the public? this is his question. Even I witnessed such incident, like spraying colors to non participant of this vinayagar parade. It looks like they are trying to show their area’s power, that is it, nothing other than this I beleive. Why do they shout, scream, spray colors when they are praying to god. Did vinayagar asked them to do all these? I know that this culture is adapted since few years, earlier this started with calm and just a parade and now it become violent. This is purely adapted culture which is very dangerous to public. It will become more dangerous in future.

 3. பிள்ளையாருக்கு பதிலாக இந்த பொறுக்கிகளை கடலில் தூக்கிப் போட வேண்டும். முன்பெல்லாம், பிள்ளையார் சதுர்த்தி, வீடுகளில் பூஜை, கொழுக்கட்டை-சுண்டல், கோவிலில் பிள்ளையாருக்கு சிறப்பு அலங்காரம், வசதியான கோவிலாக இருந்தால் தவில்-நாதசுரதுடன் கூடிய ஊர்வலம் என எளிமையாக இருந்தது. இதை ஒரு வெறி கிளப்பும் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டனர். ஐஸ் ஹவுஸ் வழியாத்தான் போவேன் என்று ராம கோபாலன் வேறு அட்டூழியம் செய்கிறார்.

  அரசியல் கட்சி மாநாடுகள், பஸ் டே போன்ற நிகழ்வுகளிலும் இப்படி பட்ட பொறுக்கித்தனங்கள் நடை பெறுவதாக ஒரு புகார் உண்டு. கட்டுரையின் தலைப்பு மட்டும் வருத்தம் தருகிறது. அதிஷா வைத்த தலைப்பில் என்ன குறை கண்டீர்? காரம் பத்தவில்லையா? “பொறுக்கிகள் பிள்ளையார் சிலையோடு பவனி வந்தனரா” அல்லது “பிள்ளையார் பொறுக்கிகள் சூழ வலம் வந்தாரா”. அல்லது, “கொலை”, “சாவு” எல்லாம் ஒன்று என்பது போல இவ்விரண்டும் ஒன்று தானா? பிள்ளையார் சிலையோடு ஊர்வலம் சென்று பொறுக்கித்தனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அமைதியாக, ஒரு பைக்குள் பிள்ளையாரை போட்டு, பஸ் பிடித்து போய் யமுனையில் கரைத்து விட்டு வருவோரும் உண்டு.

 4. அதற்குத்தான் இந்த விழா கொண்டாடுகிறார்கள்..உனக்கு என்ன இப்போ?..நீ மூடிட்டு வீடுக்குள்ள இருக்க வேண்டியது தானே..

  • “Hindu’s are the only religion who will allow you to scold or comment.”(bruce)
   “அதற்குத்தான் இந்த விழா கொண்டாடுகிறார்கள்..உனக்கு என்ன இப்போ?..நீ மூடிட்டு வீடுக்குள்ள இருக்க வேண்டியது தானே” (saran)
   These two are hindus and both contradict, one says that hindus are the one and only peace loving religion.
   And the next one admits that the chaturthi festival is designed to make trouble. Since it is Amma ruling, the pillayar decided to go smoothly to get immersed, if it is DMK on power the pillayar is arrogant and adament on the procession routes.
   May the good god give you wisdom and your path of violence will never bear fruit.
   If you think your gods are not respected, why don’t you ask him to fight for him instead you making life miserable for the moderate people

  • அதுக்கு ஏன்டா பிள்ளையாரை தூக்கிக் கொண்டு போகனும். பொறுக்கி இராம கோபாலையும், ரவுடி மோடியையும் சிலையாக செய்து தூக்கிக் கொண்டு போக வேண்டியது தானே? அந்த ஸ்கூட்டியில் போனது உன் தங்கையாக இருந்தாலும் இப்படித் தான் பேசுவாயா? இப்படி பதில் சொல்லும் நீ, அவர்களை உற்சாகப்படுத்த கூட்டிக் கொடுத்தாலும் கொடுப்பாய். அப்படித்தானே?

   • தமிழ்..அவங்க குலத் தொழில் அதுதான்….
    பேர்கொண்ட பார்ப்பான்
    பிராந்தன்னை அர்ச்சிக்கில்
    போர்கொண்ட மன்னர்க்கு
    பொல்லா வியாதியாம்..
    பார் கொண்டநாட்டுக்கு பஞசமாம்..
    எஙக முப்பாட்டன் திருமூலர் “அருளியது”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க