மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்!
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவிவிலக வேண்டும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடிவந்த நிலையில், ஆளும் பா.ஜ.க. கும்பல் நாடாளுமன்றத்தை திட்டமிட்டே முடக்கி குளிர்கால கூட்டத்தொடரை முடித்துவைத்துள்ளது.
முன்னதாக, பா.ஜ.க. எம்.பி-க்கள் மூலம் ரவுடித்தனம் செய்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடவும் தடை விதித்தது.
மோடியின் ஆட்சியில் சொல்லிகொள்ளப்பட்ட நாடாளுமன்ற ஜனநாயகம் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடவும் போராடவும் கூட எதிர்க்கட்சிகளுக்கு அனுமதியில்லை என அறிவிக்கின்றனர் பாசிஸ்டுகள்.
பாசிசக் கும்பலால் முடக்க முடியாத, பாசிச கும்பலை முடக்குவதற்கான வல்லமை கொண்ட மக்கள் களத்திற்கு செல்வது மட்டுமே பாசிஸ்டுகளை பணிய வைப்பதற்கான ஒரே வழி!
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram