Friday, August 7, 2026

நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு தழுவிய இரங்கல் நிகழ்ச்சிகள்!

தோழரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் விதமாக தோழரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியும் தமிழ்நாடு முழுவதும் இரங்கல் நிகழ்ச்சிகளும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்டன.

இலங்கை: செம்மணி கூட்டு மனிதப் புதைகுழிகள் நெஞ்சை உலுக்கும் பேரவலம்

கால்கள் உடைக்கப்பட்டு, வாய் கட்டப்பட்ட நிலையில்; தலை துண்டிக்கப்பட்டுச் சிதைந்த நிலையில்; எலும்புகள் மட்டுமே குவியலாகக் கிடைக்கும் நிலைகளில் மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருப்பது சிங்கள இனவெறியர்களின் காட்டுமிராண்டித்தனத்தை உணர்த்துகிறது.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்! விலை - அச்சு இதழ் : ரூ 30 + தபால் செலவு

யார் இந்த மாண்டேக் சிங் அலுவாலியா? | வறுமைக்கோடு வரையறை | மீள்பதிவு

ஒரு மனிதன் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ.32/க்கும், கிராமப்புறத்தில் ரூ.26/க்கும் அதிகமாகச் சம்பாதித்தால், அவன் வறுமைக்கோட்டுக்கு மேலானவன் என்றது, திட்டக்குழு. இந்த வறுமைக்கோடு வரையறையை வழங்கிய திட்டக் குழுவின் அப்போதைய துணைத் தலைவர்தான் மாண்டேக் சிங் அலுவாலியா.

எல் நினோ வெப்பத்தால் பலியாகும் உழைக்கும் வர்க்கம்!

ஏசி அறைகளோ, ஊதியத்துடன் கூடிய விடுப்போ இல்லாத இந்த முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் மீதுதான், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையும் ஈவுஇரக்கமின்றித் திணிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் விலையாகக் கொடுத்தே இந்த அதீத வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

தீவிரமடையும் நாடு கடத்தல்: மேற்குவங்க இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

இந்தியாவில் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து நாடு கடத்துவது என்ற பெயரில் மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைப் பறித்து, எல்லை மாவட்டங்களிலும் பெருநகரங்களிலும் இராணுவத்தைக் குவிக்க வேண்டும் என்ற சதித்திட்டமும் பாசிச மோடி அரசிற்கு உள்ளது.

தொடரும் ஆணவப் படுகொலைகள் 

“ஆண்ட பரம்பரை” என்ற வீண் ‘பெருமை’யை பலவாறு பேசி சாதிவெறியை ஊட்டும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களும், அதன் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலுமே இத்தகைய ஆணவப் படுகொலைகள், சாதியத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்படுகின்றன.

நீட் முதல் சி.பி.எஸ்.இ. வரை: சந்தைமயமாகும் தேர்வுகள் பலியிடப்படும் மாணவர்கள்!

இன்று இந்தியாவில் உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வுகளும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் இணை கல்வி சந்தையாக மாறி வருவதானது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல. பாசிச பா.ஜ.க. அரசால் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் சதியும் மறுகாலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத விளைவுமாகும்.

லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்

தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.

ஆகாஷ் கொட்டடிப் படுகொலையின் 100-வது நாள்: புரட்சிகர அமைப்புகளின் வலுவானதொரு கண்டனம்!

தலித் மக்களிடமும், முன்னேறிய உற்பத்தி சக்திகளிடமும் ஏற்பட்டிருக்கும் சமூக எழுச்சியின் ஓர் அங்கமாக ஆகாஷ் அமைந்துள்ளார். உள்ளூரில் காணும் அநீதிகளைத் தட்டிக் கேட்பது, ஆதிக்கச் சாதிவெறியர்களுடன் துணிந்து நேருக்கு நேர் மோதுவது என அவர் செயல்பட்டுள்ளார். சாதி கடந்து காதலித்த தலித் இளைஞர் கவின் ஒரு பக்கம் என்றால், சாதிவெறியர்களுக்கு எதிராக களத்தில் மோதிய ஆகாஷ் இன்னொரு பக்கம்.

தி.மு.க. முதல் த.வெ.க. அரசு வரை…. கார்ப்பரேட்மயமாகி வரும் அரசு மருத்துவக் கட்டமைப்பு

அரசு மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு வந்த உடனேயே, தனியார் மருத்துவமனைகளுக்கு வெறுமனே இணையத்தில் விண்ணப்பித்தால் போதும்; தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது, த.வெ.க. அரசின் மருத்துவக் கொள்கை யாருக்கானது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

மேகதாது அணை: குடிநீர் தேவையா? கார்ப்பரேட் சேவையா?

பெங்களூருவில் கார்ப்பரேட் முதலீட்டைத் தக்கவைப்பது, தமிழ்நாட்டின் காவிரிப் படுகையிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது என இரு மாநில கார்ப்பரேட் நலன்களுக்காகவே , சொந்த மக்களின் நீர் உரிமையையும் தமிழ்நாட்டின் வரலாற்று உரிமையையும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் காலில் மிதித்து மேகதாது அணையைத் தீவிரமாக கட்டத் துடிக்கிறது கர்நாடக அரசு.

நாடாளுமன்றக் குதிரை பேரமும் பா.ஜ.க-வின் பாசிச சதித்திட்டமும்!

2029 நாடாளுமன்றத் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக, இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்களான தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது. அதற்காகத்தான் தன் குதிரை பேர அரசியலை உக்கிரப்படுத்தியுள்ளது, பா.ஜ.க.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜூலை 2026 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஜூலை 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்! விலை - அச்சு இதழ் : ரூ 30 + தபால் செலவு

அண்மை பதிவுகள்