மடியாது… மறையாது நக்சல்பாரி!
நக்சல்பாரி உழவர் பேரழுச்சியும், அதைத் தொடர்ந்து நக்சல்பாரி இயக்கமும் தோன்றி 55 ஆண்டு கடந்துவிட்டன. இருந்தபோதும் இன்றைய இந்திய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளில் நக்சல்பாரி முன்னிலும் பன்மடங்கு முக்கியத்துவமும் அவசியமும் பெறுகிறது.
காவி – கார்ப்பரேட் பாசிச தாக்குதலை உழைக்கும் மக்கள் மீது மோடி அரசு தொடுத்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தை உறுதிபடுத்தி, ஏழை உழைக்கும் மக்களை மேலும் வறுமையில் தள்ளிவருகிறது. இது ஒருபுறமிருக்க, தனது இந்து ராஷ்டிரா கனவை நிறைவேற்றும் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருகிறது காவிக் கும்பல். முஸ்லீம் – கிருத்துவ சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மசூதிகளை, இந்துக்கோயில் என்று பிம்பத்தை உருவாக்கி, பாபர் மசூதி இடிப்பைப் போன்ற ஒரு கரசேவைக்கு நாடு முழுவதும் காவி பயங்கரவாத அமைப்புகள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் சூழ்ந்து வரும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிச இருளை கிழிக்க, நமக்கு ஓரே விடிவெள்ளியாய் இருப்பது நக்சல்பாரி எழுச்சி மட்டுமே. அந்த வசந்தத்தின் இடி முழக்கம், இந்திய புரட்சியின் இடிமுழக்கமாக மீண்டும் ஒலிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
***
***
ஓவியம் : தோழர் ரூபாவதி
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க