06.09.2023
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்த
இந்து மதவெறி பாசிஸ்ட் சாமியாரின் கொட்டத்தை அடக்குவோம்!
பார்ப்பன – வேத எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “சனாதனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்” என்று பேசியதை திட்டமிட்டு திரித்து நாடு முழுவதும் பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிஸ்டுகள்.
அயோத்தியைச் சேர்ந்த பரமஹன்ஸ் ஆச்சாரியா என்ற கொலைகாரப் பொறுக்கி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளான்.
படிக்க : சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
சனாதான தர்மமும் இந்து மதமும் ஒழித்துக் கட்டப்பட வேண்டியதே என்பதை அண்ணல் அம்பேத்கரும் பெரியாரும் பல்வேறு இடங்களில் எழுதியும் போராடியும் நிலைநாட்டியிருக்கிறார்கள். மனிதனை பிறவியின் அடிப்படையில் இழிவுபடுத்துகின்ற, அந்த இழிவினைப் புனிதப்படுத்துகின்ற எந்த ஒரு கொள்கையும் ஒழித்துக்கட்டப்பட வேண்டியதுதான்.
கருவறைத் தீண்டாமைக்கு காரணமாக இருக்கின்ற, தமிழை நீச மொழி என்று சொல்கின்ற, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சாதியின் பெயராலும் வர்ணத்தின் பெயராலும் அடக்கி ஒடுக்குகின்ற ஒரு கொள்கையை எதிர்த்துப் பேசினால் தலைக்கு விலை வைப்பார்கள் என்றால் இந்து மதவெறி பாசிஸ்டுகள் எவ்வளவு திமிர் தெனாவட்டிலும் இருக்கிறார்கள்?
பல ஆண்டுகளுக்கு முன்பு “ராமன் என்ன இன்ஜினியரா?” என்று கேட்ட கருணாநிதியின் தலைக்கு விலை வைத்தான் வேதாந்தி என்ற சாமியார். தக்க பாடம் புகட்டி அவனின் வாலை ஒட்ட நறுக்கியது தமிழ்நாடு.
புத்தர், சித்தர்கள் தொடங்கி பூலே, அய்யன் காளி, நாராயண குரு, வைகுண்டர், பெரியார், அம்பேத்கர் வரையிலானவர்கள் பார்ப்பன – வேத மரபை எதிர்த்தார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் பண்பாடு என்பது பார்ப்பன எதிர்ப்பு சமத்துவ நெறி மரபாகும்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேசினால் அதை திரித்தும் புரட்டியும் காட்டுவது இனியும் பலிக்காது. இந்த கேடுகெட்ட செயலை மேற்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
படிக்க : கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!
மேலும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழ்நாட்டின் பண்பாட்டை தான் தமிழ்நாடும் தமிழ் மக்களும் எப்போதும் உயர்த்தி பிடிப்பார்கள்.
சனாதன – வேத – பார்ப்பன பண்பாட்டை நடைமுறைப்படுத்தும் அமைப்பாக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பலை ஒழித்து கட்டுவதை நோக்கி முன்னேறுவதே நம்முடைய முக்கியமான கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321