உழைக்கும் மக்களே ஜனநாயக சக்திகளே!
“ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ”வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் எமது அமைப்புகளின் சார்பாக சுவர் விளம்பரங்கள் செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மதுரையிலும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த இயக்கத்தின் சுவர் விளம்பரங்களை செய்து வந்தோம்.
ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து நாட்களாக இந்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இந்த சுவர் விளம்பரங்களை பார்த்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எந்த அளவிற்கு எரிச்சல் அடைந்ததோ அதே அளவிற்கு போலீசிற்கும் எரிச்சல் வந்துள்ளது. கடந்த 30-ஆம் தேதி மாலை பழங்காநத்தம் பகுதியில் சுவர் விளம்பரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கத்தை அழைத்து சென்று சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என மிரட்டியது, தவறு என்றால் கைது செய்யுங்கள் என தோழர் பேசியவுடன் வேறு ஒன்றும் செய்ய வழியில்லாத போலீஸ் தோழரை விடுவித்தது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்த ”ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி அதானி பாசிசம் ஒழிக!”, ”வேண்டாம் பி.ஜே.பி” என்ற முழக்கங்களில் சுண்ணாம்பை கரைத்து ஊற்றி அழித்துள்ளது. போலீசின் இந்த வன்மத்திற்கு காரணம் காவி வெறி தலைக்கேறி உள்ளது என்பதே. இதுபோக பல இடங்களிலும் இதே போல் ”வேண்டாம் பி.ஜே.பி”, ”ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” முழக்கங்கள் போலீஸினாலும் ஆர்.எஸ் எஸ் – பி.ஜே.பி கும்பலாலும் அழிக்கப்பட்டுள்ளது.
போலீசு எப்படி பாசிசமயமாக மாறி வருகிறது என்பதற்கு இதெல்லாம் நேரடியான உதாரணங்களே. இதற்கு முன்பும் கடந்த மே மாதம் எமது அமைப்புகள் சார்பாக நடத்த இருந்த மாநாட்டிற்கு இதே ”ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி; அம்பானி அதானி பாசிசம் ஒழிக!, சுற்றி வளைக்குது பாசிசப்படை வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற முழக்கங்களை முன்வைத்து சுவர் விளம்பரங்கள் செய்த போதும் பல இடங்களில் போலீசும் ஆர்.எஸ்.எஸ் –பி.ஜே.பி கும்பலும் இணைந்து சுவர்களை அழித்தார்கள் அதை செல்பி எடுத்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்களின் whatsapp குரூப்பில் போட்டுக் குதூகலம் அடைந்தார்கள்.
இது போக தோழர்களின் மீது எட்டுக்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து நெருக்கடிகள் கொடுத்தார்கள்.
இது ஏதோ எமது அமைப்புகளின் மீது மட்டும் இப்படிப்பட்ட நடவடிக்கை என்று மட்டும் பார்க்க முடியாது. மதுரையில் இதற்கு முன்பு நடந்த செஞ்சட்டை பேரணி தமிழ்நாடு அறிந்தது. அதை அனைத்து ஜனநாயகம் முற்போக்கு இயக்கங்களும் இணைந்து தான் முன்னெடுத்தனர். அந்த செஞ்சட்டை பேரணிக்கு சுவரொட்டிகள் ஒட்டுவதில் இருந்து கொடி நடுவது, பிரச்சாரம் செய்வது வரை அனைத்திலும் பிரச்சினை செய்தது போலீசு. ஆனால் இதே பழங்காநத்தம் பகுதியில் இந்து மதவெறி அமைப்புகள் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு எந்த தடங்கலும் விதிக்காமல் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது போலீசு.
அதனால்தான் சொல்கிறோம் போலீசு காவி பாசிஸ்டுகளாகவே மாறி வருகிறார்கள். மணிப்பூர் கலவரத்தில் அங்குள்ள போலீசு ஆர் .எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பலுக்கு ஆயுதம் வழங்கி வேடிக்கை பார்த்தது என்பதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் தமிழ்நாடு மணிப்பூரை நோக்கி நகர்வது தெரியும். இதை நாம் அனுமதிக்கலாமா? இந்த கும்பலை தமிழ்நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டாமல்
பெரியார் பிறந்த மண் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது.
தோழர்களே இந்த சவாலை நேருக்கு நேர் எதிர்கொள்ள களத்தில் இறங்குவோம்.
சுவர் விளம்பரங்களை அழித்த சங்கி போலீஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் -பி.ஜே.பி பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலையும் சங்கி போலீசையும் அம்பலப்படுத்தி முறியடிப்போம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 04.09.2023
நேரம்: மாலை 4 மணி
இடம்: திருவள்ளுவர் சிலை அருகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை.
ஜனநாயக சக்திகள் பலரும் உரையாற்ற உள்ளனர் அனைவரும் வருகை தந்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிராக முழங்குவோம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
97916 53200, 78268 47268.