த்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று (மே 26) தமிழக வருகிறார் நரேந்திர மோடி.
மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து இன்று வரை தமிழகம் வரும் ஒவ்வொரு பயணத்தின் போது, தமிழக அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என அனைவரும் கருப்பு கோடி காட்டியும், கருப்பு பலூனை பறக்கவிட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். ஒருமுறை திட்டமிட்ட சாலை வழியாக செல்லமுடியாமல் மோடியை, சந்துவழியாக அழைத்து சென்ற வரலாறும் தமிழகத்திற்கு இருக்கிறது. அதில் திமுகவினரும் பல்வேறு சமூக வலைதளங்களில் “Go Back Modi” என்ற ஹேஷ்டேக்-ஐ டிரண்டிங் செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது திமுக ஆளும் கட்சியான பிறகு முதல்முறையாக மோடி தமிழகம் வருவதை தொடர்ந்து, மோடியை விமர்சிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது பாசிச மோடி அரசுக்கு அடிபணிவதை தவிரவேறென்னவாக இருக்க முடியும்.

கேலிச்சித்திரம் : மு.துரை

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க