பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை உயர்த்திப்பிடிப்போம்! | கவிதை – ஓவியம்

உனது செம்படை இன்னும் உலக முதலாளித்துவ ஓநாய்களுக்கு அச்சுறுத்துலாகவே இருக்கிறது…ஏனென்றால், நீ ஒரு சர்வாதிகாரி அல்லவா! ஆம், முதலாளித்துவத்தைக் கொல்லவந்த பாட்டாளி வர்க்க பிரதிநிதியின் சர்வாதிகாரி!

ஹிட்லர் – முசோலினி பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை உயர்த்திப்பிடிப்போம்!

1917 நவம்பர் 7 ரஷ்ய புரட்சிக்கு லெனினுடன் கைக்கோர்த்தாய்!

சோசலிச குழந்தையைக் கருவிலே கொல்ல வந்த, இரத்தவெறிபிடித்த முதலாளித்துவ ஓநாய்களை விரட்ட செம்படைக்கு தலைமையேற்றாய்!

தோழர் லெனினிக்கு பின் ரஷ்யப் போல்ஷ்விக் கட்சியை வழிநடத்தினாய்!

உலகத்திற்கு புதிய சமூகமான சோசலித்திற்க்கு அடித்தளமிட்டாய்!

டிராஸ்கியவாதிகளை சித்தாந்த ரீதியாக அம்பலப்படுத்திவிட்டாய்!

கூட்டுப்பண்ணை, இயந்திரத் தொழில் அமைக்க நீ வகுத்த வியூகம் உலகையே வியப்பில் வைத்திருக்கிறது…

தனிச்சொத்துடைமை ஒழித்து பொதுவுடைமையை நிலைநாட்டினாய்!

உலக பொருளாதாரமே சரிந்தப்பொழுது ரஷ்யாவைப் பொருளாதரத்தில் எழுந்து நிற்க வைத்தாய்!

இதோ மீண்டும் ஓர் அச்சுறுத்தல்,

உலகை பாசிச இருளிலிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை உனது தலைமையிலான ரஷ்ய செம்படையிடம்!

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின்

ஆம், சோசலிச குழந்தை வளர்ந்து வரும்போது, இரத்தவெறிபிடித்த ஹிட்லரை உலக முதலாளித்துவ ஓநாய்கள் அனுப்புகிறது…

இதோ, வெறிபிடித்த ஹிட்லரை வீழ்த்த செம்படை தயார் என அறிவித்தாய்!

ஹிட்லரின் படையை குலைநடுங்க செய்து, செங்கொடியை அவன் கோட்டையிலே பறக்கவிட்டாய்!

ஹிட்லரை குலைநடுக்கத்தில் தற்கொலை செய்ய வைத்தாய்!

உனது செம்படை இன்னும் உலக முதலாளித்துவ ஓநாய்களுக்கு அச்சுறுத்துலாகவே இருக்கிறது…

ஏனென்றால், நீ ஒரு சர்வாதிகாரி அல்லவா!

ஆம், முதலாளித்துவத்தைக் கொல்லவந்த பாட்டாளி வர்க்க பிரதிநிதியின் சர்வாதிகாரி!

80 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஸ்டாலின் என்ற பெயர் முதலாளித்துவத்துக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது…

உலக நாடுகளில் பாசிச இருள் சூழ்ந்துக்கொண்டிருக்கிறது…

இதோ, இந்தியாவிலும் பாசிசம்…

ஆம், ஹிட்லரின் SS படையின் வாரிசான RSS படை நாட்டை சூழ்ந்துள்ளது!

விரைவில் இந்துராஷ்டிரத்தை அறிவிக்க நுழைவாயில் காத்துக்கொண்டிருக்கிறது…

ஹிட்லர் – முசோலினி பாசிச கும்பலை கதறவைத்து, வீழ்த்திய உனது வர்க்க உணர்வை வரித்துக்கொண்டு…

இதோ, உனது மாணவனாக நடைபோட துவங்கிவிட்டோம்!

காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளே எச்சரிக்கை…

மண்ணோடு மண் வைத்து புதைக்க தோழர் ஸ்டாலினை நெஞ்சிலேந்தி வீறு நடையோடு வந்துக்கொண்டிருக்கிறோம்!!!

ஓவியம்: தோழர் பாலா

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்
94889 02202

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க