மோடி தற்போது அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதை இந்தியாவின் கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதி பெருக்கிவருகின்றன. மோடி அங்கு சர்வதேச யோகா தினத்தை ஜோ பைடனுடன் கொண்டாடி மகிழ்கிறார். ஆனால், உண்மை நிலைமை என்ன? அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், “கிழக்கில் உதித்த ஹிட்லர் மோடி”, “பைடன், மோடியின் பாசிசத்தை நிறுத்து” என்று பதாகைகளை ஏந்தி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மோடி அமெரிக்கா சென்றுள்ள நேரமானது, நாடே கொந்தளித்து கொண்டிருக்கும் நேரம். பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் 50 நாட்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறைகளில் பல அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
மணிப்பூரைத் தொடர்ந்து உத்தரகாண்டிலும் காவி பயங்கரவாதிகளின் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் பிரதமரான மோடி இதைப் பற்றி எதுவும் வாயேத் திறக்காமல், தற்போது மௌன ஆசனத்தில் இருக்கிறார்.
மேனகா
கேலிச்சித்திரம் : நியூஸ் கிளிக்