காசுமீர், சோபியன் நகரத்தை சேர்ந்த 20 மாதமேயான குழந்தையான ஹிபா நிசார் இந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் கடந்த 2018, நவம்பர் 28-ம் தேதி தாக்கப்பட்டாள். கண்ணீர் புகைக் குண்டுகளின் புகை மூட்டத்திலிருந்து அவளது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தப்பிச் செல்லும் போதுதான் இக்கொடூரம் நிகழ்ந்தது. சிகிச்சை நடந்து கொண்டிருந்தாலும் வலது கண்ணின் பார்வையை அவள் இழக்கக்கூடும்.

இந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட ஹிபா நிசார்.

கடந்த 2016 கோடையில் இந்திய இராணுவத்தால் போராட்டக்காரர்களின் தளபதி புர்கான் வானி கொல்லப்பட்ட பிறகு, அதற்கு எதிர்வினையாக காசுமீர் முழுதும் பற்றிய போராட்டங்களில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட காசுமீர் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் முழுவதுமாகவோ அல்லது பாதி அளவிலோ கண்பார்வையை இழந்தனர். இப்படி காயமடைந்தவர்கள், உடலுறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் கண்பார்வையை இழந்தவர்களது புகைப்படங்களை ஊடகங்களில் அவர்கள் பகிர்ந்தனர். இதில் பெரும்பான்மையானவை ‘மரணம் ஏற்படுத்தா’ ஆயுதங்கள் என்று பெயரிடப்பட்ட பெல்லட் குண்டுகளால் ஏற்பட்டவை. ஆனால் துப்பாக்கியிலிருந்து தெறிக்கும் இக்குண்டுகள் கடுமையாக உறுப்பு சேதாரத்தையும் உடல் விகாரத்தையும் ஏன் மரணத்தையும் கூட ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

முரணாக, மக்கள் போராட்டங்களை மென்மையாக தடுக்கவே இந்திய இராணுவத்தால் மரணம் ஏற்படுத்தா ஆயுதம் பயன்படுத்தப்படுவதாக கட்டுக்கதை சொல்லப்படுகிறது. ஆயினும் இந்த பெல்லட் குண்டுகள் மக்களின் துயரை குறைக்கவில்லை மாறாக துன்பங்களை மென்மேலும் மோசமாக்கிவிட்டது.

புர்காணி கொல்லப்பட்ட சில நாட்களிலேயே பெல்லட் குண்டுகளால் தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சிகிச்சையளித்த ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் முதலுதவி மருந்துக்களும் கருவிகளும் தீர்ந்து போனது. “மரணம் ஏற்படுத்தா ஆயுதங்கள் இப்போது சுமையை சாவிலிருந்து நோயுற்ற நிலைமைக்கு  மாற்றிவிட்டது” என்று அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

kashmirs-pellet-victims
கடந்த 2016-ம் ஆண்டு பெல்லட் குண்டு தாக்குதலால் இரு கண்களிலும் பார்வையிழந்த இன்ஷா மாலிக்.

இப்படி ஆயிரக்கணக்கான காசுமீர் மக்களின் உடலை சிதைத்து நூற்றுக்கணக்கானவர்களின் பார்வையை பறித்த இந்த ஆயுதங்களை “மரணம்-விளைவிக்காதவை” என்று எப்படி நம்மால் ஏற்க முடியும்? இந்த சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களைப் பார்த்த பின் எதிர் வினையாற்ற இந்திய மக்கள் யாருக்கேனும் பொறுப்புணர்வு இருக்கிறதா?

நம்முடைய நெறிமுறை, கலாச்சாரம், அரசியல் மற்றும் வரலாற்று வழியாகவே பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்களை பார்த்து நாம் வினையாற்றுவதாக சமூக விஞ்ஞானிகள் வாதிடுகிறார்கள். இது பகிர்ந்துகொள்ளப்பட்ட வரலாறு, கலாச்சாரம் அல்லது மத அடையாளம் மற்றும் யாரை நாம் மனிதராக கருதுகிறோம் என்பதை பொறுத்தது. வரலாற்றுவழியாக இது இனம், பால், பாலியல் நோக்குநிலை மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை பொறுத்து இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஒவ்வொரு சமூகமும் படிநிலை துன்பங்களை அதாவது சிலரது துன்பம் ஏனையோரை விட அவசரமானது மற்றும் சகிக்க முடியாதது என்பதை நிறுவுகிறது. இனவெறியும், தீவிர தேசியவாதமும் வன்முறையும் தறிகெட்டு நடக்கும் இக்காலத்தில் சமூக விஞ்ஞானிகளும் மனித நேயம் கொண்டவர்களுமான நாம் இவற்றை கண்டிப்பாக கேள்விக்குட்படுத்தவும் உடைக்கவும் வேண்டும்.

பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட காசுமீர் மக்களின் துயரங்களை புகைப்படங்களாக இந்தியாவின் முதன்மையான ஊடகங்களுக்கு பகிரப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் 2016 -லிருந்து நான் கவனித்து வருகிறேன். காஷ்மீர் மற்றும் இந்திய மைய நீரோட்டத்தில் இந்த புகைப்படங்கள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதில் ஒரு பாரிய இடைவெளி இருப்பதை பார்த்திருக்கிறேன்.

முதன்மையான இந்திய ஆங்கில ஊடகங்களில் சிலர் பாதிக்கப்பட்ட காசுமீர் மக்களுக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர். ஆனால் பெரும்பான்மையானோரது கேள்விகளாலும் குற்றச்சாட்டுகளாலும் பின்னூட்ட பெட்டிகள் நிறைக்கப்பட்டுவிட்டது. “தங்களது குழந்தைகளை கல்லெறிய காசுமீர் பெற்றோர் ஏன் விடுகிறார்கள்? அல்லது அது அவர்களுக்கு தேவைதான்” என்கிறார்கள்.

“மேலும் ஆக்கிரமிப்பு காசுமீரில் பாகிஸ்தான் இராணுவம் செய்து வருவதையும் காசுமீர் பள்ளத்தாக்கில் மரணம் ஏற்படுத்தா ஆயுதங்களால் ஏற்படும் துன்பங்களையம் சிலர் ஒப்பிடுகிறார்கள்.” இக்கேள்விகள் தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. மேலும் இக்கொடூரமான வன்முறைக்கு சில உடல்கள் தகுதியானவைதான் என்று கூறுகின்றன.

அவர்களது துயரங்களை சந்தேகப்படுவது :

இந்த ‘வேற்று’ காசுமீர் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற விவாதமுறையும் அவப்பெயரும் எப்படி இந்துக்களின் ஆழ்மனதில் புரையோடியிருக்கின்றன என்பதை காசுமீர் மக்களுடைய துன்பங்களின் மீதான கருணையில்லாத அவர்களது மனநிலை காட்டுகிறது.

காசுமீர் மக்களின் துயரங்களும் வலியும் சந்தேகிக்கப்படுகின்றன ஏனெனில் அவர்களது அடிப்படை மனிதத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மற்றவர்கள் துயரப்படுவதை கண்டுணராத போக்கு தான் உலகம் முழுமைக்கும் இனவாத மற்றும் தேசியவாத அரசுகளின் அடையாளமாகிவிட்டன.

சமீபத்தில் அமெரிக்க எல்லையில் கண்ணீர்புகை குண்டுகளால் தாக்கப்பட்ட அகதிகளிலிருந்து “ஆபத்தானவர்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு பட்டப்பகலிலேயே இசுரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட காசா போராட்டக்காரர்கள்வரை இதே கதைதான்.

Kashmir pellet victims Insha Malik X-ray
பெல்லட் தாக்குதலுக்கு ஆளான இன்ஷா மாலிக்கின் எக்ஸ்-ரே பதிவு. காஷ்மீர் மக்கள் தங்கள் துயரத்தை பதிவு செய்துவைத்துள்ளனர். ஆனால் இந்திய மனசாட்சியை இவை தொடுவதில்லை.

இந்திய பொதுமக்களின் இரக்கமற்ற மனநிலைக்கு முரணாக துயரங்களின் புகைப்படங்கள் மூலம் காசுமீர் மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். நான் 2016 -ஆம் ஆண்டில் சந்தித்த பல காசுமீர் மக்கள் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை தங்களது செல்போன்களில் சேமித்து வைத்திருந்தார்கள். ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, துயரங்களை நினைவில் வைத்திருப்பது எங்களின் கடமை என்றார்கள்.

இந்த புகைப்படங்கள் அவற்றை பார்ப்பவர்களின் இதயங்களையும் எண்ணங்களையும் மாற்ற ஏதாவது செய்யக்கூடும் என்று காசுமீரை சேர்ந்த ஒரு மருத்துவர் நம்பினார். “ஒருவேளை பெல்லட் குண்டுகளால் என்ன செய்ய முடியும் என்பதை யாரேனும் உண்மையில் அறிந்தால், காசுமீரில் நடந்து கொண்டிருப்பதை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

காசுமீர் மக்களது காயங்கள் இந்திய மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். மேலும் தங்களுக்கு பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உண்மையானது தான் என்பதை நிறுவ புகைப்படங்களை மட்டுமல்ல எக்ஸ்-ரே மற்றும் சி.டி ஸ்கேன் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் மூலம் அவர்கள் சொல்ல வருவது யாதெனில், “எங்களது துயரம் உண்மையானது. இதை எப்படி நாங்கள் போலியாக காட்ட முடியும்?” என்பது தான். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த புகைப்படங்கள் கூட இந்திய மக்களின் பொதுபுத்தியை பெரிதாக மாற்ற முடியவில்லை.

மாறாக, பெல்லட் குண்டுகள் மீதான விவாத்தை தான் இப்புகைப்படங்கள் தூண்டி விட்டிருக்கின்றன. இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் பெல்லட் குண்டுகளை கடுமையாக பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் அதை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதை பற்றியும் போராட்டங்களைப் பற்றியும் சிறிதளவே விவாதம் நடந்து வருகிறது.

Kashmir pellet attack by india
ஆயிரக்கணக்கான காசுமீர் மக்களின் உடலை சிதைத்து நூற்றுக்கணக்கானவர்களின் பார்வையை பறித்த இந்த ஆயுதங்களை “மரணம்-விளைவிக்காதது” என்று எப்படி நம்மால் ஏற்க முடியும்?

மாறாக மிளகு பொடி குண்டுகளை பயன்படுத்த இராணுவ நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர். இப்படி காசுமீர் மக்களின் உடல்கள் மீது பரிசோதனை செய்ய புதிய புதிய “மரணம் விளைவிக்காத” ஆயுதங்களை பயன்படுத்த இராணுவ கற்பனைகள் பூத்து குலுங்குகின்றன. ஆனால் இங்கே பார்வையை நிரந்தரமாக குருடாக்குவது குறித்தும் பொது மக்களின் உடலுறுப்புகளை சிதைப்பது குறித்தும் எந்த கேள்வியும் எழுப்பப்படுவதிலை.

இத்துயரங்களின் புகைப்படங்கள் நம்மிடம் என்ன சொல்லுகின்றன? ஒருவேளை, காசுமீர் மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை நமக்கு பாதுகாப்பைத் தருகிறதா என்று நம்மை கேட்கச்சொல்லலாம். “ஹிபா நிசார் போன்ற குழந்தைகளின் கண்களை குருடாக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?” என்ற தர்க்கப்பூர்வக் கேள்வியைக் கேட்கச் சொல்லி நம்மை வலியுறுத்தலாம். சில துயரங்களின் புகைப்படங்கள் நம்மை ஆட்கொள்வதும் மற்றவை ஏன் அவ்வாறு நம்மை ஆட்கொள்வதில்லை என்ற கேள்வியை நாம் நமக்கே கேட்டுக் கொள்ள வேண்டும். நம்மை பற்றி அவை என்ன கூறுகின்றன மற்றும் நாம் அவற்றை எப்படி பார்க்கிறோம் என்ற கேள்வியையும் அப்புகைப்படங்கள் நம்மிடம் கேட்கலாம் .

காசுமீர் மக்களை கொல்வதற்கு மற்றும் முடமாக்குவதற்கு எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்ற விவாதமோ அல்லது சிதைந்துபோன உயிர்கள் பற்றிய இரக்க உணர்வோ கூட இந்தியாவிற்கு இப்பொழுது தேவையில்லை. இராணுவமயமாதல் குறித்தும், மனிதன் என்று நாம் யாரை கணக்கிடுகிறோம் என்பது குறித்துமான ஆழமான கேள்வியுமே நமது தற்போதைய தேவை.

இக்கட்டுரையை எழுதிய சாய்பா வர்மா அமெரிக்காவில் சான் டிகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மானுடவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


தமிழாக்கம் : சுகுமார்.
நன்றி :
ஸ்க்ரோல்

19 மறுமொழிகள்

 1. கூடவே காஷ்மீரில் முல்லாக்களால் வளர்க்கப்படும் இஸ்லாமிய மதவெறியை பற்றியும் பேசுங்களேன்… எப்படி இஸ்லாமிய மதவெறி காஷ்மீரில் பிரிவினையை தூண்டுகிறது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்… எப்படி இஸ்லாமிய மதவெறி இந்திய ராணுவத்தின் மீது கல்லெறிய வைக்கிறது என்று சொல்லுங்களேன் பார்ப்போம்… இஸ்லாமிய மதவெறியால் எப்படி காஷ்மீர் பண்டிட்டுகள் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்லுங்களேன் பார்ப்போம்.

  உங்களிடம் இருப்பது போலி மனித நேயம் அதில் உண்மையும் கிடையாது நேர்மையும் கிடையாது…

  காஷ்மீரிகள் ராணுவத்தின் மீது கல்லெறியாமல் வன்முறையில் ஈடுபடாமல் இருந்தாலே போதும் அவர்களுக்கு எந்த தீமையும் வர போவதில்லை. ராணுவத்தினர் மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டு பிரச்சனையை அவர்களே கேட்டு வாங்கி கொள்கிறார்கள்.

  பாக்கிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிரச்சாரத்தை தான் நீங்கள் இப்போது வெளியிட்டு இருக்கிறீர்கள்.

  வினவு ஒரு பாக்கிஸ்தான் சீனா கைக்கூலி என்பதை மேலும் ஒருமுறை நிரூபிக்கிறது.

 2. இந்தியாவின் தேசிய வியாதியான “பார்ப்பனியம்” என்ற புற்றுநோயை அழித்தொழிப்போம் ! நம் சந்ததியினருக்கும் அதனை வேரறுக்கக் கற்றுத்தருவோம் !
  விசக் கிருமிகளான சங்கிகளுக்கும் விசப் பிரச்சாரம் செய்யும் மணிகண்டன் போன்ற பொறுக்கிகளுக்கும் சங்கூதுவோம் . . !

  • ஆமாம் இப்படி இப்படியே வேரறுப்போம் கருவருப்போம் என்று தீவிரவாதிகள் மாதிரியே பேசி கொண்டு இருங்கள்… உங்கள் சந்ததியினருக்கு ஆரோக்கியமான நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்போம் என்று ஆக்கபூர்வமாக சிந்திக்காதீர்கள்.

 3. இந்த கொடுமைகள் நமக்கு ஏற்பட்டது போல உணர வேண்டும். இந்த நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட அதிக நாட்கள் இல்லை.

  • ஆமாம் சீமான் திருமுருகன் காந்தி வைகோ வினவு கிறிஸ்துவ மதவாத சக்திகள் என்று பல பிரிவினைவாத சக்திகள் எல்லாம் இணைந்து தமிழகத்தில் இன்னொரு காஷ்மீரை உருவாக்க பார்க்கிறார்கள் அதற்கு தூத்துக்குடியில் நடந்த வன்முறையே சாட்சி… குடியிருப்பு பகுதியில் கூட தீ வைக்கும் மனிதத்தன்மை இல்லாதவர்கள் இவர்கள்.

 4. காஷ்மீரின் வரலாறு தெரியாதவர்களாகவே சங்கிகள் மனிகண்ட மக்களை வளர்த்து விட்டார்கள், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல.. கள்ளத்தனமாக அப்டி ஆக்கப்பட்டதாக கருத்தை விதைத்துவிட்டார்கள்

  • மணிகண்டன்களை மக்களாக பார்க்க வேண்டியதில்லை. கைக்கூலிகளிடம் சிந்தனையை எதிர்பார்க்க முடியாது

   • ஆமாம் உங்களை (வினவு) போன்ற பாக்கிஸ்தான் சீனா கைக்கூலிகளிடம் நல்ல சிந்தனையை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவிற்கு ஆதரவாக பேசினால் உடனே பிராமணன் சங்கீ சிங்கி என்று பேச வேண்டியது.

  • சரி வரலாறு என்ன என்று தான் நீங்க சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்துகொள்கிறோம்.

   ஐநா தீர்மானத்தின்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து முற்றிலும் விலகி கொண்ட பிறகு இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

   பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து அவர்கள் விலகாமல் இந்தியாவை குறை சொல்வது உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் மற்றும் இந்திய விரோத கம்யூனிஸ்ட்கள். காஷ்மீரிகள் போராட்டம் நடத்துவது என்றால் முதலில் பாகிஸ்தானை வெளியேற சொல்லி போராடி இருக்க வேண்டும் அதை சொல்ல வினவு கூட்டங்களுக்கு நேர்மை இல்லை.

   அடுத்து காஷ்மீரின் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது அவர்களையும் விலக சொல்ல வேண்டும் வினவு அதை பற்றி கட்டுரை வெளியிடுவார்களா ?

   கிறிஸ்துவ மதவாதிகளுக்கு கம்யூனிஸ்ட்களுக்கும் ஒரே நோக்கம் தான் இந்தியாவை பலவீனப்படுத்தி பிரிக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் நோக்கம் அதற்காக தான் காஷ்மீர் பிரிவினை, வடகிழக்கு மாநிலங்களின் பிரிவினை என்று இவர்கள் வளர்த்து விடுகிறார்கள்.

   • சீனா, பாகிஸ்தான் எல்லாம் கொள்ளைக்காரர்கள் ஆச்சே, நீங்கள்தான் புனித மக்கள் நியாய வாதிகள், உங்களுடைய கடமை என்னவோ அதை செய்யுங்கள், அதை விட்டுவிட்டு அடக்குமுறை அரசை அவிழ்த்து விட்டு உலகிலேயே அதிக அதிகாரம் மிகுந்த இரானுவத்தையும் விட்டு வதைக்கிறீர்கள்

    • இந்தியர்கள் நல்லவர்களாக இருப்பது தான் பிரச்சனையே… பாக்கிஸ்தான் சீனாவை போல் கொள்ளையர்களாக இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனையே இன்று இருந்து இருக்காது…

     இந்தியர்கள் நல்லவர்களாக இருப்பதால் தான் காஷ்மீர் இஸ்லாமியர்கள் மசூதியில் தொழுகை முடித்தவுடன் கல்லெறிய கிளம்பிவிடுகிறார்கள்.

     பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் ஒரு ஹிந்து குடும்பம் கூட இன்று கிடையாது அனைத்து ஹிந்துக்களும் ஹிந்து வழிபாட்டு தளங்களும் பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் துடைத்து எறியப்பட்டுவிட்டது.

     காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வு ஒன்று தான் இஸ்லாமியர்கள் மதவாதத்தில் இருந்து வெளியே வர வேண்டும் அல்லது ஒட்டு மொத்த காஷ்மீர் இஸ்லாமியர்களையும் ஹிந்துக்களாக மதம் மாற்றம் செய்ய வேண்டும்.

    • ஐநா தீர்மானத்தின்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியாவிடம் திரும்ப கொடுத்த பிறகு தான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை பாக்கிஸ்தான் மதிக்கவில்லை, அது மட்டும் இல்லாமல் பாக்கிஸ்தான் ஆக்கிரபில் உள்ள காஷ்மீரில் இருந்த அத்தனை ஹிந்துக்களை கொலை செய்து விட்டு வாக்கெடுப்பு நடத்து என்று கேட்பது பெரும் அயோக்கியத்தனம்… அதனால் வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இனி இடம் இல்லை.

     காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியாவோடு இணைந்து இருப்பது ஒன்று தான் வழி அது அவர்களுக்கு புரியும் வரையில் நாங்கள் காத்து இருப்போம்… இந்திய விரோத கம்யூனிஸ்ட்களோ அல்லது உங்களை போன்ற கிறிஸ்துவ மதவாதிகளோ எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்தியாவில் காஷ்மீரை பிரிக்க முடியாது.

     • இந்தியாவிலிருந்து 1947ல் ஆங்கிலேயர் வெளியேறிய போது நேபாளம், பூடான், இலங்கை போல காஷ்மீரும் தனி நாடாகத்தான் இருந்தது. காஷ்மீர் தனக்கென்று பாராளுமன்றம், தேசியக்கொடி, தேசியகீதம், பிரதமர், ஜனாதிபதி என்று கொண்டிருந்தது. காஷ்மீர் ராணுவ பலமின்மை மற்றும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையை பயன்படுத்தி பாகிஸ்தான் அதை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. காஷ்மீரின் இந்து மன்னர் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்தியா தனது இராணுவத்தை அனுப்பி பாகிஸ்தான் ஊடுருவலை தடுத்தது. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது போல அன்று ஆக்கிரமித்த இந்திய இராணுவம் இன்று வரை திரும்பவேயில்லை. காஷ்மீரும் ஐ.நா சபையில் முறையிட்டு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஐ.நா வின் வழிகாட்டலை இந்தியாவும் பாகிஸ்தானும் கழிவறை காகிதமாக்கிவிட்டார்கள். இதில் அவனை முதலில் வெளியேறச் சொல்லு எனும் வரலாற்று திருக்கி ( பொறுக்கித்தனம் செய்பவன் பொறுக்கி போல வரலாற்றை திரிப்பவன் திருக்கி) மணிகண்டனின் சவுடால் வேறு . . !
      அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை சென்ற இந்திய இராணுவம் கொலை கற்பழிப்பு என்று தமிழர்களை என்னென்ன அக்கிரமமங்களை செய்ததோ அதற்கு சற்றும் குறைவில்லாது காஷ்மீரிலும் செய்து கொண்டு இருக்கிறது. இதை எதிர்க்கும் அடையாளமாக காஷ்மீர் மாணவர்கள் இராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள். இதனால் அவமானப்பட்ட இந்திய இராணுவம் பெல்லட் குண்டுகளால் அம்மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.
      கலைஞர், வி.பி.சிங் போன்ற மானஸ்தர்கள் இலங்கையிலிருந்து அமைதிப்படையை திரும்ப பெற வைத்தார்கள். மோடி போன்ற மானங்கெட்டவர்களிடம் இது நடக்குமா ?
      காஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டம் வெல்லட்டும் !

      • கம்யூனிஸ்ட் அய்யோக்கியனத்தின் மொத்த உருவமாக பேசிக்கொண்டு இருக்கிறீர்… ஐநா தீர்மானம் இது

       2. The Government of Pakistan will use its best endeavour to secure the withdrawal from the State of Jammu and Kashmir of tribesmen and Pakistani nationals not normally resident therein who have entered the State for the purpose of fighting. 3. Pending a final solution, the territory evacuated by the Pakistani troops will be administered by the local authorities under the surveillance of the commission. B. 1.When the commission shall have notified the Government of India that the tribesmen and Pakistani nationals referred to in Part II, A, 2, hereof have withdrawn, thereby terminating the situation which was represented by the Government of India to the Security Council as having occasioned the presence of Indian forces in the State of Jammu and Kashmir, and further, that the Pakistani forces are being withdrawn from the State of Jammu and Kashmir, the Government of India agrees to begin to withdraw the bulk of its forces from that State in stages to be agreed upon with the Commission.

       ஐநா தீர்மானத்தின்படி இந்திய முழுவதுமாக விளக்கி கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. பாக்கிஸ்தான் தனது ராணுவத்தை விலகி கொண்ட பிறகு அதை ஐநாவிடம் இந்தியா தெரிவிக்க வேண்டும், அதை ஐநா உறுதி செய்த பிறகு அனைத்து அரசியல் கட்சியினரையும் அழைத்து இடைக்கால அரசை இந்தியா அமைக்க வேண்டும். அதன் பிறகு ஐநா மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தபடும். அது வரையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்தியா குறைந்தளவு பாதுகாப்பு படையினரை காஷ்மீரில் வைத்து இருக்க வேண்டும்.

       உங்களின் பாக்கிஸ்தான் சீனா விசுவாசத்தை எல்லாம் வேறு யாரிடமாவுது காட்டுங்கள். உங்களை போன்ற கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற பிஜேபி RSS போன்ற அமைப்புகள் அவசியம் தேவை. இல்லையென்றால் இந்த நாட்டை கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் நாசம் செய்து விடுவார்கள்.

      • காஷ்மீரிகளுக்காக நீலி கண்ணீர் வடிக்கும் கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் யாராவுது திபெத் அல்லது சீனாவில் உள்ள இஸ்லாமிய பகுதியை பற்றி பேசுவார்களா ? ஐநாவில் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்ட திபெத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து பல ஆயிரம் திபெத் மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்ற சீனாவிற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் பேசுவதற்கு தயாரா ?

       • சங்கிகளை “ஏன்டா ‘பிய்’ துன்னுறீங்க ?”ன்னு கேட்டா, “அவனப்பாரு மூத்திரம் குடிக்கிறான், அவனை நீ எதுனா கேக்குறியா ?” ம்பானுங்க.
        “டேய் ! அவன் தண்ணீதான்டா குடிக்கிறான்”னு நம்மளையே விளக்கம் சொல்ல வப்பானுங்க.
        ஆனால் கடைசி வரைக்கும் அவனுங்க பிய் துன்னுறதப்பத்தி பேச மாட்டானுங்க . . !

        • கம்யூனிஸ்ட்கள் அயோக்கியத்தனம் முழுவதும் இந்த பதிவில் தெரிகிறது… முதலில் ஐநா சபை காஷ்மீர் பற்றி இயற்றிய தீர்மானத்தை படித்து விட்டு வந்து பேசுங்கள்.

         சீனாவின் Xinjiang பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எப்படி கையாள்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள். அது போல் இந்தியாவும் நடந்து கொண்டு இருந்தால் இன்று உங்களை போன்ற கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்து பேசி கொண்டு இருக்க மாட்டிர்கள்.

         Xinjiang விடுதலை போராட்டம் வாழ்க என்று சொல்வதற்கு வினாவிற்கு நேர்மையும் துணிவும் உள்ளதா ? அது பற்றி கட்டுரை வெளியிட தயாரா ? Xinjiang மாகாணத்தில் சீனாவின் அடுக்குமுறை பற்றி பற்றிய வெளிப்படையான கட்டுரை வெளியிட வினவு தயாரா ? திபெத் பகுதியில் சீனாவால் நடத்தப்படும் படுகொலையை பற்றி கட்டுரை வெளியிட தயாரா ?

         சீனாவிற்கு எதிராக மட்டும் உங்களின் மனித நேயம் எங்கே சென்றது (உங்களை அநாகரிக வார்த்தையை நான் உபயோகிக்க விரும்பவில்லை).

         இந்தியா ஜனநாயக உரிமையை வினவு போன்ற பாக்கிஸ்தான் சீனா கைக்கூலிகள் எவ்வுளவு தவறாக பயன்படுத்தி இந்தியாவை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள் என்பது காஷ்மீர் விவகாரத்தில் தெரிகிறது. அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் பொய்களை யாரும் நம்ப போவதில்லை.

 5. //காஸ்மீரிகளின் துயரங்கள் நம்மை உலுக்குவதில்லையே ஏன் ?//

  துன்பமும் துயரமும் வலியும் வேதனையும் ஒருவருக்கு வந்தால் தான் அது புரியும் , அதுவரை எல்லாமே வெறும் கடந்து போகும் செய்திகள் மட்டுமே … ஒருவேளை ஈழ தமிழர்களுக்கு இந்த துன்பம் புரிந்திருக்கலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க