மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாள் நினைவேந்தல் கூட்டம்!

மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது.

​மேலவளவு படுகொலையின் 30-ஆம் ஆண்டு தியாகிகள் நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 04.07.2026 அன்று, மாலை 5 மணிக்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பில் நினைவேந்தல் அரங்கக் கூட்டம்  நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை – தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமை தாங்கினார். ராஜபாளையம் மக்கள் அதிகாரக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரதி வரவேற்புரை ஆற்றினார். கழக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் தோழர் கின்ஷன் சிறப்புரையாற்றினார்.

தென்மாவட்டங்களில் சமீபகாலமாக சாதியத் தாக்குதல்களும், ஆணவப் படுகொலைகளும் அதிகரித்து வருகின்றன. மேலும், அரசு அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் சாதி வெறியை ஊக்குவிப்பதோடு, ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர். இந்நிலை முருகேசன் படுகொலை தொடங்கி கவின், ஆகாஷ், பாலாஜி என இன்று வரை தொடர்கிறது.

இவ்வாறான சாதியத் தாக்குதல்களுக்கு ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகள்தான் மூளையாகச் செயல்படுகின்றன. இந்த ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க பாசிச கும்பல் பின்னணியில் இருந்து இயக்குகிறது. தன் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பாசிச கும்பல் சாதிய வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ்நாட்டில் தூண்டி வருகிறது.

எனவே, ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகளையும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலையும் தடை செய்ய வேண்டும்; அதற்காகக் களத்தில் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று தோழர்கள் தங்களது உரைகளில் வலியுறுத்தினர்.

மேலவளவுப் படுகொலை என்பது ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட முன்னெடுத்த ஒரு வீரம் செறிந்த போராட்டம் ஆகும். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாகத்தான், உள்ளாட்சி நிர்வாகத்தில் பெயரளவிற்காவது இன்று பட்டியல் சமூக மக்கள் பங்கேற்க முடிகிறது. அந்த வகையில், மேலவளவு தியாகிகளை நினைவுகூரும் வகையில் மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்த இந்த அரங்கக் கூட்டம் மிக அவசியமானது என்று வந்திருந்த ஜனநாயக சக்திகள் பதிவு செய்தனர்.

மேலும், மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுக்கும் சாதிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகக் கரம் கோர்த்து உறுதியாக நிற்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில், சாதிவெறியாட்டங்களுக்கு எதிராகவும் சமத்துவத்தை நிலைநாட்டவும் முற்போக்கு இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்வில் பங்கேற்ற அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தோழர்கள்:

தோழர் மாடசாமி,
மாநில துணை ஒருங்கிணைப்பாளர்,
ஐந்திணை மக்கள் கட்சி.

தோழர் புவனேஸ்வர்,
விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர்,
ஐந்திணை மக்கள் கட்சி.

தோழர் நிலவன்,
முதன்மை ஊழியர்,
தமிழ்நாடு இளையோர் விடுதலைக் கழகம்.

தோழர் செங்கணல்,
முதன்மை ஊழியர்,
தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம்.

தோழர் வீரபாண்டி,
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர்,
திராவிட தமிழர் கட்சி.

தோழர் மகாலிங்கம்,
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி / மாவட்டச் செயலாளர்,
திராவிட தமிழர் கட்சி.

தோழர் ராஜேஷ் கண்ணன்,
வழக்கறிஞர்,
சமூகநீதி வழக்கறிஞர் கூட்டமைப்பு.

தோழர் மனோகரன்,
வழக்கறிஞர்,
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.

தோழர் ஆடுகாளி முருகன்,
வடக்கு மாவட்ட தலைவர்,
தென்காசி ஆதித் தமிழர் பேரவை.

தோழர் சங்கை மதன்,
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்,
ஆதித் தமிழர் பேரவை.

தோழர் சங்கை ராகவன்,
மாவட்ட ஆலோசகர்,
தென்காசி ஆதித் தமிழர் கட்சி.

மேலும், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்த ஜனநாயக சக்திகள் உணர்வுப்பூர்வமாக இந்த அரங்கக் கூட்டத்தில் பங்கேற்று, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க