தமிழ்நாட்டில் தொடரும் சாதியத் தீண்டாமை கொடுமைகள்: நாளைய தலைமுறையை நாமே பலி கொடுக்கப் போகிறோமா? 

“நாம சாப்பிட்டோம் என்றால் ஊரை விட்டு தள்ளிவைத்து விடுவார்கள் டா, நாம சாப்பிடக் கூடாது டா” என்று மாணவர்கள் பேசிக் கொண்டதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார், சமையலரான முனியசெல்வி. பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதி என்னும் நஞ்சை பெற்றோர்களே ஊட்டியுள்ளனர்‌ என்பதே கவனிக்கப்பட வேண்டியது.

தூத்துக்குடி மாவட்டம் சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

அப்பள்ளியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தில் சமையலராக பணியாற்றி வரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முனியசெல்வி சமைத்ததால் ஒன்பது மாணவ மாணவியர்கள் உணவை சாப்பிட மறுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து தீண்டாமை கொடுமை நடந்த பள்ளிக்கு சென்று மானவர்களுடன் அமர்ந்து உணவருந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இப்பிரச்சினைக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“நாம சாப்பிட்டோம் என்றால் ஊரை விட்டு தள்ளிவைத்து விடுவார்கள் டா, நாம சாப்பிடக் கூடாது டா” என்று மாணவர்கள் பேசிக் கொண்டதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார், சமையலரான முனியசெல்வி. பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் சாதி என்னும் நஞ்சை பெற்றோர்களே ஊட்டியுள்ளனர்‌ என்பதே கவனிக்கப்பட வேண்டியது.


படிக்க: கார்ப்பரேட்களால் விழுங்கப்படும் பாரம்பரிய மருத்துவம்!


இதேபோல் திருப்பூர் மாவட்டம் காளிங்கராயன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கரூர் மாவட்டம் பொருந்தலூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி ஆகியவற்றிலும் சாதியத் தீண்டாமை கொடுமைகள் அரங்கேறியுள்ளது.

நாங்குநேரியில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் தன்னுடன் படிக்கும் சக மாணவனைச் சாதிவெறியால் வெட்டிய கொடூர சம்பவம் கடந்த மாதம் அரங்கேறியது.

அது பள்ளி மாணவர்களிடையே எவ்வளவு ஆழமாக சாதி வேரூன்றி வருகிறது என்பதை அம்பலப்படுத்தியது.

சமூகத்தில் சாதி என்னும் நஞ்சை தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களும், தமிழ்நாட்டில் சாதி வெறி சங்கங்களில் ஊடுருவி சாதி கட்டமைப்பை வளர்த்தெடுத்து வரும் பார்ப்பனிய சித்தாந்தம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் சங்கத்தையும் உடனடியாக தடை செய்யவில்லை என்றால் நாளைய தலைமுறையை நாமே சாதிவெறிக்கு பலி கொடுத்ததாக அமைந்துவிடும்.

புதிய ஜனநாயகம்
14.09.23

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க